மரத்துக்கு பின்னாடி டிரஸ் மாற்றி.. ஜூனியர் ஆர்ட்டிஸ்ட் பட்ட பாடு.. சுண்டல் பேப்பரை போல.. பிரபலம் நச்
சென்னை: ஜூனியர் ஆர்ட்டிஸ்ட்கள் அன்றைய காலகட்டத்தில் எவ்வாறெல்லாம் அவதிக்கும், இன்னலுக்கும், ஆளானார்கள்? சினிமாவில் அவர்கள் எப்படியெல்லாம் சிக்கல்களுக்கு ஆளானார்கள் என்பது பற்றி பிரபல தயாரிப்பாளர் பாலாஜி பிரபு உருக்கத்துடன் தெரிவித்துள்ளார்.
பழம்பெரும் நடிகை வெண்ணிற ஆடை நிர்மலா ஒரு பேட்டியில் சொல்லும்போது, "அவுட்டோர் ஷூட்டிங் நடக்கும்போது, நடிகைகள் தங்கள் டிரஸ்ஸை சரிசெய்து செய்து கொள்ள வேண்டி, தயங்கி நிற்பார்கள்..

அதை புரிந்து கொண்ட நடிகர் ஜெய்சங்கர், உடனே டைரக்டரிடம் சென்று, "அவங்க டிரஸ்ஸை அட்ஜஸ்ட் செய்து கொண்டு வரட்டும், கொஞ்சம் அனுப்பி வைங்க" என்று அனுமதி கேட்டு எங்களை அனுப்பி வைப்பார்.. அப்போதெல்லாம் கேரவன் கிடையாது.. மரத்துக்கு பின்னாடிதான் மறைந்திருந்து டிரஸ்ஸை சரி செய்து கொள்ள வேண்டி வரும்.. இதுமாதிரியான தர்மசங்கட சூழலை, நாங்கள் சொல்லாமலேயே, அவரே புரிந்து கொண்டு உதவி செய்வார்.." என்று பெருமையுடன் சொல்லியிருந்தார்.
பிரபல நடிகைகளுக்கே இந்த நிலைமை என்றல், ஜூனியர் ஆர்ட்டிஸ்ட்கள் நிலைமை எப்படி இருந்திருக்கும் என்பதையும் எண்ணிப்பார்க்க வேண்டியிருக்கிறது. இதுகுறித்து, AramNaadu யூடியூப் சேனலுக்கு பிரபல தயாரிப்பாளர் பாலாஜி பிரபு பேட்டி ஒன்றை தந்துள்ளார்..
எக்ஸ்ட்ரா ஆர்ட்டிஸ்ட் : அந்த பேட்டியில் "இப்பதான் ஜூனியர் ஆர்ட்டிஸ்ட் என்கிறோம்.. முன்னாடியெல்லாம் இவர்களை எக்ஸ்ட்ரா ஆர்ட்டிஸ்ட் என்பார்கள்.. எங்களை எக்ஸட்ரா ஆர்ட்டிஸ்ட்டுன்னு கூப்பிடாதீங்க என்று, தங்கள் சங்கத்தின் மூலமாக கோரிக்கை வைத்தார்கள்.. அதற்கு பிறகுதான், ஜூனியர் ஆர்ட்டிஸ்ட்கள் என்று கவுரவமாக அழைக்கப்படுகிறார்கள்..
இவர்களின் அவலம், சிக்கல்கள் ஏராளமானவை.. கோடம்பாக்கத்தை ஏற்றி ஏராளமான ஏவிம், வாகினி, பிரசாத், அருணாசலம், கற்பகம், ஏகப்பட்ட ஸ்டுடியோக்கள் இருக்கும்.. காலையில் ஏவிஎம் ஸ்டுடியோ எதிரிலுள்ள டீ கடையில் ஒன்றுசேர்வார்கள். எங்கெல்லாம் ஷூட்டிங் நடக்குமோ அங்கு இவர்களை ஒரு ஓட்டை வேனில் கூட்டிட்டு போவாங்க.. போற வழியில் இவங்களுக்கு தண்ணி கூட தர மாட்டார்கள்.. ஷூட்டிங் ஸ்பாட்டிலும் இவர்களுக்கு மரியாதை கிடையாது.. எப்போது தங்களது சீன் என்று கேட்டாலும் மதித்து பதில் சொல்ல மாட்டார்கள்..
ஏஜென்ட் சம்பளம்: இப்போவெல்லாம் 750 ரூபாய் சம்பளம் இவர்களுக்கு தரப்படுகிறது. முன்பெல்லாம் இவர்களுக்கு சம்பளம் ஏஜென்ட்டிடம்தான் தரப்படும். இதில் பாதி சம்பளத்தை ஏஜென்ட்டே எடுத்துக் கொள்வார்.. ஆனால், பழைய ஜூனியர் ஆர்ட்டிஸ்ட்களிடம் இப்படி பண விஷயத்தில் நடந்து கொள்ள முடியாது..
70, 80களில் ஜூனியர் ஆர்ட்டிஸ்களில் பெண்கள் படற பாடு சொல்லவே முடியாது. அப்போவெல்லாம் கேரவன்கள் கிடையாது.. ரெஸ்ட் ரூம் போறதுக்கு மிகவும் சிரமப்படுவார்கள்.. ஹீரோயின்கள் பாத்ரூம் போக வேண்டுமென்றால், அந்த பகுதியிலுள்ள வீடுகளில் அனுமதி கேட்டு செல்வார்கள்.. நடிகைகள் என்றதும், அவர்களை வீட்டிற்குள் அழைத்து செல்வார்கள்.. ஆனால், ஜூனியர் நடிகைகள்தான் பரிதாபம்.. இதுபோன்ற பிரச்சனைகளால் யூரினரி இன்பெக்ஷனுக்கு ஆளான ஜூனியர் ஆர்ட்டிஸ்கள் ஏராளம் உண்டு..
வசனங்கள்: ஒரு படம் எடுக்கும்வரை, அப்படியே காத்து கிடப்பார்கள்.. ஒரு வசனமாவது தர மாட்டார்களா? என்று ஏங்குவார்கள்.. ஒரு வரி வசனத்தை தர சொல்லி கெஞ்சுவார்கள்.. நான் ஒரு படத்தில் அசிஸ்டென்ட் டைரக்டராக பணியாற்றியபோது ஒரு சம்பவம் நடந்தது.
லஞ்ச் பிரேக் முடிந்து ஜூனியர் ஆர்ட்டிஸ்கள் சீன் எடுக்க வேண்டியிருந்தது. 18., 19 வயதுள்ள பெண் மட்டும் இன்னும் வராமல் சாப்பிட்டு கொண்டேயிருந்தார். ஆர்வத்துடன் அள்ளி அள்ளி சாப்பாட்டை சாப்பிடுவதை பார்த்து, அங்கிருந்த மற்றொரு அசிஸ்டென்ட் டைரக்டர், திங்குறதுக்கு வந்தியா? சத்தம் போட்டார்..
பசியால் அழும்: உடனே அந்த பொண்ணு அழுதுகொண்டே, "அண்ணா, நான் ஒருத்தனை நம்பி ஏமாந்துட்டேன். எனக்கு ஒரு கைக்குழந்தை இருக்கு.. நான் இங்கே சாப்பிட்டால்தான், நைட் என் பிள்ளைக்கு பால் தர முடியும்.. இல்லாட்டி நைட் முழுக்க என் பிள்ளை பசியால் அழும்" என்றார்.. அதைக்கேட்டதுமே அனைவரும் அதிர்ச்சியடைந்து அந்த பெண்ணை முழுமையாக சாப்பிட வைத்தார்கள்.
இப்போதுகூட ஒரு நடிகை, அந்த பிரபல டைரக்டர் தன்னை கன்னத்தில் அறைந்துவிட்டதாக சொல்லி உள்ளார். பெரிய நடிகைகளுக்கே இந்த நிலைமை என்றால், ஜூனியர் ஆர்ட்டிஸ் நிலைமை யோசித்து பாருங்க.. இவர்களையெல்லாம் சுண்டல் பேப்பரை சாப்பிட்டு கசக்கி போட்டுட்டு போயிட்டே இருப்பாங்க .
அதிர்ஷ்டம்: ஆனால், இப்போது, கேரவன்கள் வந்துவிட்டதால், பாத்ரூம் பிரச்சனைகள் ஜூனியர் ஆர்ட்டிஸ்ட்களுக்கு கிடையாது.. அதேபோல, சூரி, விமல்,விஜய் சேதுபதி, உட்பட பல பிரபல பெண் நடிகைகளும் அன்று ஜூனியர் ஆர்ட்டிஸ்ட்களாக கூட்டத்தோடு கூட்டமாக, வசனமே இல்லாமல் ஒரு ஓரமாக நின்றவர்கள்தான்.. ஆனால், இன்று கடுமையான வளர்ச்சியில் உழைத்து முன்னேறியிருக்கிறார்கள்.. உழைப்பு இருந்தாலும் அதிர்ஷ்டமும் இருக்கணும்" என்றெல்லாம் சொல்லிஉள்ளார்.
-
கேஸ் மானியம் ₹300 வந்தாச்சா? வங்கிக்கு போகவே வேண்டாம்… வீட்டிலேயே 2 நிமிஷத்தில் தெரிஞ்சுக்கலாம் -
தங்கத்தில் இனி 1 மில்லி கிராம் கூட ஏமாற்ற முடியாது! 7 மாவட்டத்துக்கு ஹேப்பி! அரசின் பாதுகாப்பு கவசம் -
வங்கி கணக்கில்.. அரசு அனுப்பிய ரூ.2000! உங்களுக்கு வந்துடுச்சா.. மொபைலிலேயே செக் செய்வது எப்படி? -
56 out of 234: விசிகவுக்கு "6+2!" திமுக கூட்டணியில் எந்தெந்த கட்சிகளுக்கு எத்தனை தொகுதிகள்? -
வைகோவால் 25 சீட் போச்சு.. அன்புமணியால் திமுகவுக்கு 50 சீட் காலி.. 2016இல் விஜயகாந்த் விழுந்த கதை! -
தேமுதிக 10 தொகுதிகளில் போட்டி.. 21 ஆண்டு வரலாற்றில் மிகக் குறைவான சீட்களில் நிற்பது இந்த முறைதான்! -
ஆதார் கார்டு வைத்திருப்போருக்கு குட் நியூஸ்.. பிஎம் ஸ்வநிதி திட்டத்தில் ₹50,000 கடன் கிடைக்குமா? -
வேளச்சேரி - பரங்கிமலை MTRS.. 80 நிமிடப் பயணம் வெறும் 15 நிமிடம்.. எஸ்ஜி சூர்யாவின் நிஜ அனுபவம் -
சர்க்கரை அட்டைதாரர்களுக்கு சூப்பர் வசதி… ரேஷன் கடைக்கு போறீங்களா? தமிழக அரசின் திடீர் உத்தரவு -
டிரம்ப் வயிற்றில் பாலை வார்த்த ஈரான்.. அமெரிக்காவுக்கு முதல் முறையாக பச்சைக்கொடி -
தங்க வேட்டை.. உலக நாடுகளின் 'பக்கா' பிளான்.. மத்திய வங்கிகள் முண்டியடிப்பதன் பின்னணி என்ன? -
அமெரிக்காவை வீழ்த்தும் ஈரான்.. ஆட்டம் காணும் மிதக்கும் அரண்மனை.. ஒரே இரவில் பஸ்பம் ஆன $13000000000!












Click it and Unblock the Notifications