சிவகார்த்திகேயனின் உயரம்.. உதயநிதியை தோளில் சுமந்தும்.. இப்ப யூடர்ன் போட்ட சந்தானம்.. சபாஷ்: பிரபலம்
சென்னை: "மக்கள் நம்மிடம் காமெடிதான் எதிர்பார்க்கிறார்கள், நாமதான் தப்பாக புரிந்துகொண்டுள்ளோம் என்று உண்மையை தற்போது உணர்ந்து கொண்டுள்ளார் சந்தானம்.. இப்போது மீண்டும் பழைய பாணிக்கே வந்துள்ளது மகிழ்ச்சியே" என்று வலைப்பேச்சு அந்தணன் பேட்டி ஒன்றில் கூறியிருக்கிறார். அத்துடன், நடிகர் சூரியின் மாமன் படம் பற்றியும் பேசியிருக்கிறார்.
MGR TV Cinema என்ற யூடியூப் சேனலுக்கு பேட்டி தந்துள்ள மூத்த பத்திரிகையாளர் அந்தணன், "உறவுகளை பற்றின அக்கறை இல்லாத உலகை நோக்கி போய் கொண்டிருக்கிறோம்.. இதை பற்றின சொல்கிற படங்கள் தற்போது குறைந்துவிட்டது. உறவுகளை சொல்லும் படங்களுக்கு ஒரு மரியாதை எப்போதுமே உள்ளது.. அந்தவகையில், மாமன் படம் உறவுகளை சொல்லும் படமாக உள்ளது.

பாசிட்டிவ் சூரி
நடிகர் சூரி ரிஸ்க் எடுத்து இந்த படத்தை எடுக்கிறார்.. டைரக்டரை தேர்வு செய்யும் அறிவும் சூரிக்கு உள்ளது.. அதிக கவனத்தை தன்னுடைய ஒவ்வொரு படங்களிலும் செலுத்தி வருகிறார். இந்த மாமன் படத்துக்கும் நிறைய பாசிட்டிவ் கமெண்ட்கள் வந்துள்ளன..
அதேபோல மற்றொரு காமெடி நடிகர் சந்தானத்தின் டிடி நெக்ஸ்ட் லெவல் படம் வரப்போகிறது.. ஆவி பேய், பிசாசு என்று கலகலப்பாக எடுக்கப்பட்டுள்ளது.. சந்தானம் நிச்சயம் இந்த படத்திலும் நிறைய மெனக்கெட்டுள்ளார்..
சிவகார்த்திகேயன்
சந்தானமும், சிவகார்த்திகேயனும் தனித்தனியாக விஜய் டிவியில் ஒன்றாக நிகழ்ச்சிகளில் நடித்து கொண்டிருந்தவர்கள்.. இதில் சந்தானம் சினிமாவில் நடிக்க வந்தபோது, விஜய் அவார்டு தரப்பட்டது. அந்த நிகழ்ச்சியை தொகுத்து வழங்கியது சிவகார்த்திகேயன்தான்.. அப்போது சந்தானத்தை வியந்து, பெருமையாக பேசினார் சிவகார்த்திகேயன்.
பிறகு காலம் மெல்ல மெல்ல மாறுகிறது.. சிவகார்த்திகேயன் மிகப்பெரிய ஹீரோவாக உயர்ந்துவிட்டார். ஆனால், சந்தானம் காமெடியனாகவே உள்ளார்.. இது சந்தானத்துக்கு பொறாமையாகவும்கூட வளர்ந்திருக்கலாம்.. உடனே ஹீரோவாக மாறினார்.. ஆனால், தொடர்ந்து படங்கள் தோல்வியடைகின்றன.. சொந்த படம் எடுத்தும்கூட, கடனாளியாகிவிட்டார்.. இந்த கடனிலிருந்து மீள போராட வேண்டியிருக்கிறது.. ஆனாலும், ஹீரோவாகத்தான் நடிப்பது என்பதில் பிடிவாதமாக உள்ளார்..
மாற்றிய மதகஜராஜா
உதயநிதி அறிமுகமான ஓகே ஓகே படத்தின் வெற்றிக்கு பாதி காரணமே சந்தானம்தான்.. அந்த படத்தில், உதயநிதியை படம் முழுக்க தூக்கி தோளில் சுமந்ததே சந்தானம்தான்.. எனவே மீண்டும் சந்தானத்துடன் நடித்தால் நல்லா இருக்குமே என்று நினைத்து உதயநிதி அணுகியபோது, நடித்தால் ஹீரோவாகத்தான் நடிப்பேன் என்று சொல்லி சந்தானம் மறுத்துவிட்டாராம். அந்த அளவுக்கு பிடிவாதமாக இருந்த சந்தானத்தை, இப்போது வந்த மதகதராஜா படம் மாற்றியிருக்கிறது.
மக்கள் இதைதான் நம்மிடம் எதிர்பார்க்கிறார்கள், நாமதான் தப்பாக புரிந்துகொண்டுள்ளோம் என்று உண்மையை தற்போது உணர்ந்து கொண்டுள்ளார் சந்தானம்.. இப்போது மீண்டும் பழைய பாணிக்கே வந்துள்ளது மகிழ்ச்சியே..
சிம்பு - சந்தானம் நட்பு
சிம்புவுக்கும், சந்தானத்துக்கும் நல்ல நட்பு உள்ளது.. சிம்பு மீது நன்றிக்கடனாக இருக்க வேண்டும் என்பதில் சந்தானம் உறுதியாக இருக்கிறார். சிம்பு எப்போது கூப்பிட்டாலும், கதை கேட்காமல், சம்பளம் கேட்காமல் உடனே ஓகே சொல்லுவேன் என்கிறார் சந்தானம்.. சினிமாவில் இப்படியான ஆட்கள் இருப்பது அபூர்வமான விஷயம். இன்னமும் சிம்பு, டி.ராஜேந்தர் இருவரையும் மரியாதைக்குரியவராகவே நினைக்கிறார் சந்தானம்.
ராஜ்கிரண்தான் வடிவேலுக்கு வாழ்க்கை தந்தவர், ஆனாலும் தான் முதலில் நடித்தது டி.ராஜேந்தர் படத்தில்தான் என்கிறார் வடிவேலு. இதை நன்றியுடனும் வடிவேலு பதிவு செய்துள்ளார்.. இதெல்லாம் சினிமாவுக்குள் மிகவும் முக்கியமான அம்சம்" என்கிறார்.
-
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
திமுகவிற்கு விஜய் சொன்ன 'நோ'.. ஸ்விட்ச் ஆப் ஆன போன்.. மேஜைக்கு வந்த உளவுத்துறை ரிப்போர்ட்! -
SP Velumani: வேலுமணிக்கு வில்லனாக மாறிய முனுசாமி.. பதவிக்கு விழுந்த வேட்டு! -
கொ*யில் முடிந்த பார் டான்ஸ்.. கொதித்துப் போன கோயம்பேடு! யான்சிக்கு இப்படியா சாவு வரனும்! ஷாக்! -
Annamalai New Party LIVE:தனிக் கட்சி தொடங்குகிறார் அண்ணாமலை? பிறந்தநாளன்று வெளியாகும் அப்டேட்? -
விஜய்க்கு பெரிய தலைவலி.. ஒரே நாளில் வீட்டுக்கு போன 5000 ஊழியர்கள் ஓய்வு! ஆட்டம் காணும் அரசு துறைகள் -
நான் பார்த்துகிறேன் நண்பா.. உறுதியாக சொன்ன விஜய்.. அஜித் தாய் மறைந்த இரவு.. நடந்தது என்ன? -
பிளாக் அண்ட் ஒயிட் கோட் சூட் அணிவது இதற்காகத் தான்.. ரகசியத்தை போட்டு உடைத்த விஜய்! -
காலியான ராஜ்யசபா எம்பி பதவி! இன்று வேட்புமனு தாக்கல் தொடக்கம்! தவெகவின் முதல் எம்பி யார்?












Click it and Unblock the Notifications