ஜேம்ஸ் பாண்டின் கடைசி அவதாரத்துக்காக காத்திருந்த ரசிகர்களுக்கு... அமேசானின் இன்ப செய்தி
சென்னை: ஹாலிவுட் ஆக்சன் பட ரசிகர்களுக்கு ஜேம்ஸ் பாண்டின் கடைசி படமான "நோ டைம் டு டை" படத்தின் ஒடிடி ரிலீஸ் தேதியை அமேசான் நிறுவனம் அறிவித்து உள்ளது.
ஜேம்ஸ்பாண்ட் பட ரசிகர்களுக்கு மகிழ்ச்சி அளிப்பதோடு மட்டுமன்றி எதிர்பார்ப்பையும் ஏற்படுத்தி உள்ளது.

ஜேம்ஸ் பாண்ட் கதாபாத்திரம்
ஹாலிவுட் படங்களிலே ஜேம்ஸ்பாண்ட் பட வரிசைகளுக்கு என்றே ஒரு பெரிய ரசிகர் கூட்டம் உலகம் முழுவதும் இருக்கிறது. அந்தப் படங்களில் ரகசிய உளவாளியாக வரும் ஜேம்ஸ் பாண்ட் கதாபாத்திரம் நிகழ்த்தும் சாகசங்களும், ஆக்சன்களும்,உலக அளவில் ரசிகர்களை தன் வசம் ஈர்த்து வைத்திருக்கிறது.

டேனியல் கிரேக்
ஜேம்ஸ் பாண்ட் கதாபாத்திரத்திற்கு பல நடிகர்கள் நடித்து வந்திருந்தாலும் டேனியல் கிரேக் அளவிற்கு யாரும் ரசிகர்களை கவர்ந்து இருக்க வாய்ப்பில்லை. அந்த அளவிற்கு ஆக்சன் சீன்களில் ஒவ்வொரு முறையும் மிரட்டி இருப்பார். ஜேம்ஸ்பாண்டாக உலக அளவில் மிகப்பெரிய புகழில் இருக்கும் டேனியல் கிரேக் இது தன்னுடைய கடைசி ஜேம்ஸ்பாண்ட் படம் என திடீரென அறிவித்தது ரசிகர்களை மிகவும் அதிர்ச்சி அடைய செய்தது. இதனாலேயே நோ டைம் டு டை படத்திற்கு எதிர்பார்ப்பு மிகவும் கூடியது.

ஜேம்ஸ் பாண்டின் கடைசி படம்
ஜேம்ஸ் பாண்டின் கடைசி படமாக மிகவும் எதிர்பார்ப்புடன் கடந்த ஆண்டு ரிலீஸான நோ டைம் டு டை படம், ஜேம்ஸ்பாண்டை வழியனுப்பும் படமாக இருந்ததால் வழக்கமான படம் போல் ஆக்சன் மட்டும் இல்லாமல் எமோஷனல் சீன்களுக்கும் முக்கியத்துவம் கொடுத்து எடுக்கப்பட்டிருந்தது.

நோ டைம் டு டை
தன் உளவாளி பணியில் இருந்து ஓய்வு பெற்று தன் வாழ்நாளை ஜாலியாக கழித்து கொண்டிருக்கும் ஹீரோ டேனியல் கிரேக்கை சந்திக்கும் சி.ஐ.ஏ வை சேர்ந்த பழைய நண்பர் ஒருவர் நாட்டின் மிக முக்கியமான விஞ்ஞானியை கடத்தி விட்டதாகவும், அவரை காப்பாற்ற வேண்டியதன் அவசியத்தையும் கூறி அவரை மீண்டும் பணிக்கு அழைக்கிறார். இந்த பணி தான் தன் வாழ்நாளை தலைகீழாக மாற்ற போகிறது என்பதை அறியாமல் விஞ்ஞானியை காப்பாற்ற கிளம்பும் ஹீரோவின் கதைதான் இந்த "நோ டைம் டு டை"....

மிகவும் நீளமான படம்
உலகம் சுற்றும் வாலிபனாக உலகத்தை சுற்றி சுற்றி ஆக்ஷனில் ஈடுபடும் ஹீரோவின் ஆக்சன் சீன்கள் ஒவ்வொரு சீன்களும் ஒளிப்பதிவு செய்ய பட்டிருக்கும் விதத்திற்காக பெரிதளவு பாராட்டப்பட்டது. அதற்கேற்ப பின்னணி இசையும் வி.எப்.எக்ஸ் ம் கைகொடுக்க படத்தின் அனைத்து ஆக்சன் சீன்களும் பிரமிப்பை ஏற்படுத்தியிருந்தது. ஜேம்ஸ்பாண்ட் படங்களிலே மிகவும் நீளமான படமாக சுமார் 2.45 மணி நேரம் எடுக்கப்பட்டுள்ள இந்த படம் அமேசான் பிரைமில் மார்ச் 4ஆம் தேதி வெளியிடப்படுகிறது. நோ டைம் டு டை படம் ஆங்கிலம் ,தமிழ், தெலுங்கு, ஹிந்தி, கன்னடம், மலையாளம் என பல மொழிகளில் வெளிவருவது ஜேம்ஸ்பாண்ட் பட ரசிகர்களுக்கு மிகவும் மகிழ்ச்சியான செய்தியாகும்.












Click it and Unblock the Notifications