விஜய் டிவி விழுந்தது அம்பானி கையில்.. சென்னை ஈக்காட்டுத்தாங்கல் ஆபீஸில் நீயா நானா கோபிநாத்?: பிரபலம்
சென்னை: விஜய் டிவியிலிருந்து கோபிநாத், பிரியங்கா வெளியேறுவதாக சொல்றாங்க.. விஜய் டிவியில் இதுவரை ஒளிபரப்பப்பட்டு வந்த நிகழ்ச்சிகளை மாற்ற போவதாகவும் சொல்கிறார்கள்.. பலவருடம் குறிப்பிட்ட நிகழ்ச்சிகளையே பார்த்து சலித்துவிட்டதால், அதற்கு பதிலாக புது புது நிகழ்ச்சிகளை கொண்டுவரவும் முயற்சி நடப்பதாக சொல்றாங்க.. இது சம்பந்தமான ஆலோசனை நடக்கிறது என்று தயாரிப்பாளர் பாலாஜி பிரபு தெரிவித்துள்ளர்.
Media Circle என்ற யூடியூப் சேனலுக்கு பேட்டி தந்துள்ள பிரபல தயாரிப்பாளர் பாலாஜி பிரபு, "ஹாட் ஸ்டாரை ஜியோ வாங்கிவிட்டார்கள்.. விஜய் டிவியை கலர்ஸ் வாங்கிவிட்டதாக கூறப்படுவது உண்மையான தகவல்தான்.,. சுருக்கமாக எல்லாமே அம்பானி கையில் வந்துவிட்டது.

ஹாட் ஸ்டாருக்கு ஏராளமான சப்ஸ்கிரைபர்கள் உள்ளனர். இதற்கு காரணம், ஐபிஎல்தான்.. ஐபிஎல் உரிமையை ஹாட் ஸ்டார் வாங்கியதால், ஏராளமானோர் சப்ஸ்கிரைப் செய்ய துவங்கினார்கள்.. ஜியோவை வாங்க முயற்சி செய்தும், அது முடியவில்லை..
ஜியோ சினிமாஸ்
அதற்கு பிறகு,தான் ஜியோ சினிமாஸில் ஐபிஎல்லை இலவசமாக பார்த்து கொள்ளலாம் என்று அறிவித்தார்கள்.. இப்படி இலவச அறிவிப்பை வெளியிடவும், அதுவரை ஹாட் ஸ்டாரில் சப்ஸ்கிரைப் செய்து கொண்டிருந்தவர்கள் அப்படியே நிறுத்திவிட்டார்கள். சப்ஸ்கிரைபர்கள் இல்லாததால் நஷ்டத்தில் போக ஆரம்பித்துவிட்டது. பிறகுதான் ஹாட் ஸ்டாரே, ஜியோவிடம் தரும்படியான சூழல் வந்தது.
அதேபோல கலர்ஸ் சேனல் ஆரம்பத்திருந்தே இருநதாலும், பெரிய அளவுக்கு சக்ஸஸ் செய்ய முடியவில்லை. ஆரம்பத்தில் ராதிகாவை வைத்து கோடீஸ்வரி என்று நிகழ்ச்சி செய்தார்கள்.. அது தோல்வி அடைந்துவிட்டது. பிறகு எங்க வீட்டு மாப்பிள்ளை என்று ஆர்யாவை வைத்து நிகழ்ச்சி செய்தார்கள்.. அந்த நிகழ்ச்சி நன்றாக பேசப்பட்டது என்றாலும், சேனல் பிரபலமடையவில்லை..
கலர்ஸ் டிவி - அம்பானி
இப்போது விஜய் டிவியை வாங்கியிருப்பதன் நோக்கம், புகழ்பெற்ற சேனல் ஒன்று கலர்ஸுக்கு தேவைப்படுகிறது. நம்முடைய தமிழக மக்களை பொறுத்தவரை, விஜய் டிவி ரசிகர்களாக உள்ளனர்.. உதாரணத்துக்கு கலக்க போவது யார் என்ற நிகழ்ச்சியை துவங்கும்போது, மெல்ல மெல்ல அந்த நிகழ்ச்சி பிரபலமாகும் என்று நினைத்தார்கள்.. ஆனால், எடுத்ததுமே கலக்க போவது யாரு நிகழ்ச்சி டாப்பில் போய்விட்டது.
அது இது எது நிகழ்ச்சியை சிவகார்த்திகேயன் தொகுத்து வந்தாலும், கலக்க போவது யாரு நிகழ்ச்சிதான் சிவகார்த்திகேயனை பெரிய அடையாளத்தை தந்தது.. இன்று சூப்பர் ஹீரோவாக உயரும் நிலைக்கு சென்றுவிட்டார். சூப்பர சிங்கர் நிகழ்ச்சி, தனி அடையாளமாகும்.. ஜூனியர், சீனியர் என்று இரண்டாக பிரிக்கப்பட்டது.. இரண்டுமே பிரபலமாகிவிட்டது. நிறைய பாடகர்களுக்கு இந்த நிகழ்ச்சி அடையாளம் தந்தது..
விசுவின் அரட்டை அரங்கம்
நீயா நானா கோபிநாத், ரொம்ப சக்ஸஸ்புல்லா நடத்திவிட்டார். அந்த காலத்தில் விசுவின் அரட்டை அரங்கம் மக்களிடம் புகழ்பெற்றது.. அந்த நிகழ்ச்சியில், வாழ்வியல் சார்ந்த விஷயங்களை விசு வெளியே கொண்டு வந்தார்.. இப்படி வாழ்வியல் சார்ந்த மற்றும் அறிவியல் சார்ந்த விஷயங்களை அறிவார்த்தமாக வெளிப்படுத்தியவர் கோபிநாத்.. சமீபத்தில் மும்மொழி கொள்கை விவாதம் ஷூட் செய்யப்பட்டு, அது ஒளிபரப்பப்படவில்லை. காரணம், அம்பானி சேனலை வாங்கியிருக்கிறார்.
குக் வித் கோமாளி சமீபத்தில் ஆரம்பித்தாலும், ஹிட்டாகிவிட்டது. புகழும், ஷிவாங்கியும் அண்ணன் - தங்கை என்று நிஜமாகவே ரசிகர்கள் நம்பிவிட்டார்கள்.. அதேபோல பாண்டியன் ஸ்டோர்ஸ் சீரியலில் நடித்த சித்ரா இறந்துபோனபோது, அடுத்த சித்ரா யார் ? அவரை மக்கள் ஏற்றுக் கொள்வார்களா? இல்லையா? என்று சோஷியல் மீடியாவில் மிகப்பெரிய விவாதமே நடந்தது.. அந்த அளவுக்கு பாண்டியன் ஸ்டோர்ஸ் சீரியல் புகழ்பெற்றது..
ஈக்காட்டுத்தாங்கல் ஆபீஸ்
பாக்கியலட்சுமி, சிறகடிக்க ஆசை, கனா காணும் காலங்கள், சரவணன் மீனாட்சி என விஜய் டிவியில் நிகழ்ச்சிகள் மட்டுமல்ல, விஜய் டிவியின் சீரியல்களும் புகழ்பெற்று விளங்கின.
இப்படி அனைத்து தரப்பு மக்களாலும் விரும்பி பார்க்கப்பட்ட விஜய் டிவி, இன்று அம்பானி கைக்கு வந்துள்ளது.. கலர்ஸ் சேனல் சரியாக போகாததால், விஜய் டிவியை முன்னிறுத்தி மேலே கொண்டு வர முயற்சி செய்கிறார்கள்.. கலர்ஸ் வேலையாட்கள் வெளியே செல்கிறார்கள்.. விஜய் டிவி ஆபீஸ் ஈக்காட்டுத்தாங்கலில் உள்ளதால், கலர்ஸ் சேனலை ஈக்காட்டுத்தாங்கல் ஆபீசுடன் இணைக்க போறாங்க..
கோபிநாத், பிரியங்கா
கோபிநாத், பிரியங்கா வெளியேறுவதாக சொல்றாங்க.. விஜய் டிவியில் இதுவரை ஒளிபரப்பப்பட்டு வந்த நிகழ்ச்சிகளை மாற்ற போவதாகவும் சொல்கிறார்கள்.. பலவருடம் குறிப்பிட்ட நிகழ்ச்சிகளையே பார்த்து சலித்துவிட்டதால், அதற்கு பதிலாக புது புது நிகழ்ச்சிகளை கொண்டுவரவும் முயற்சி நடப்பதாக சொல்றாங்க.. இது சம்பந்தமான ஆலோசனை நடக்கிறது.
இந்த ஆலோசனையில், சில குறிப்பிட்ட நிகழ்ச்சி தேவையில்லை என்று நினைத்தால், அதில் சம்பந்தப்பட்ட தொகுப்பாளர்கள் , விஜய் டிவியை விட்டு வெளியேறலாம். அதே நிகழ்ச்சி தொடர்ந்தால், தொகுப்பாளர்களும் தொடர்வார்கள்.. இது தற்போது ஆலோசனையில் உள்ளது.. இன்னும் 2 மாதத்தில் இது சம்பந்தமான தெளிவுரை கிடைத்துவிடும்" என்றார்.












Click it and Unblock the Notifications