Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

என் தங்கச்சி நடுவராக இருந்த அந்த ஷோவில்.. எனக்கு நடந்த அசிங்கம்! ஓபனாக வார்னிங் கொடுத்த அம்பிகா

Subscribe to Oneindia Tamil

சென்னை: தமிழ் சினிமாவின் 80-90களில் அழகும், நடிப்புத் திறமையும் கலந்த முன்னணி நடிகைகளாக ரசிகர்களின் மனதில் இடம்பிடித்த சகோதரிகள் அம்பிகா மற்றும் ராதா. பல மொழிகளில் சூப்பர் ஹிட் படங்களை கொடுத்து இன்னும் ரசிகர்களால் கொண்டாடப்பட்டு வரும் இவர்களில், அம்பிகா சமீபத்தில் அளித்த ஒரு பேட்டி தற்போது சமூக வலைதளங்களில் பெரும் விவாதத்தை கிளப்பியுள்ளது.

Ambika Radha Tamil cinema

நடிகை அம்பிகா பேட்டி

அந்த பேட்டியில் அம்பிகா மிகவும் அமைதியாகவும், அதே நேரத்தில் மனவேதனையுடனும் சில விஷயங்களை பகிர்ந்துகொண்டார். இப்போது தாங்கள் நடித்த பழைய படங்கள், பாடல்கள் ரீக்ரியேட் செய்யப்படுவது குறித்து பேசும்போது, "நாங்கள் நடித்த காட்சிகளை இன்றைய தலைமுறை மீண்டும் உருவாக்குவது எனக்கு ரொம்ப சந்தோஷம் தரும். நான் கலையை ரசிப்பவன். அந்த ஆர்வத்தோடு செய்வவர்களைப் பார்க்கும்போது கலைமகளின் பிள்ளைகளைப் பார்க்கும் மாதிரி தான் இருக்கும்," என்று அவர் பெருமையாக கூறினார்.

அதே நேரத்தில், சிலர் அப்படியே இமிடேட் செய்து காமெடி செய்வதும் கூட அழகாக இருந்தால் ரசிப்பேன் என்றும், அது கலையின் ஒரு பகுதி தான் என்றும் அவர் தெளிவாக சொன்னார்.

அழகான காட்சிகளை அசிங்கப்படுத்துறாங்க

ஆனால் சமீபத்தில் பார்த்த ஒரு ரீல்ஸ் வீடியோ அவரை மிகவும் வருத்தமடையச் செய்ததாம். கடற்கரையில் ஒரு அழகான காட்சியை வைத்து ஒருவர் கொடுத்திருந்த ரியாக்ஷன் வீடியோ குறித்து, "அதை பார்க்கும்போது ரொம்ப வருத்தமாக இருந்தது... நல்ல காட்சியை இப்படிப் போட்டு அசிங்கப்படுத்துறாங்களே என்று தோன்றியது," என்று அவர் மனவேதனையுடன் தெரிவித்தார்.

தங்கச்சி இருந்த ஷோவில் நடந்த சம்பவம்

இதில் முடிவில்லை. இன்னொரு சம்பவத்தை குறிப்பிட்ட அவர், சில நாட்களுக்கு முன்பு தனது தங்கச்சி நடுவராக இருந்த ஒரு டிவி நிகழ்ச்சியில், தன்னை பற்றி மிகவும் அவமானமாக காமெடி செய்ததாக கூறினார். "என்னை வைத்து காமெடி என்ற பெயரில் ரொம்ப மோசமாக பேசினாங்க. அதை காமெடி என்று நினைத்திருக்கலாம்... ஆனால் அது ரசிக்கும்படி இல்லை... கோபப்படுத்துற மாதிரி தான் இருந்தது," என்று அவர் ஆதங்கத்துடன் பேசினார். இந்த சம்பவம் எந்த நிகழ்ச்சி என்பது குறித்து அவர் பெயரை சொல்லவில்லை.

நெட்டிசன்கள் சந்தேகம்

அம்பிகா கூறிய "என் தங்கச்சி நடுவராக இருந்த நிகழ்ச்சி" என்ற தகவலை வைத்து, பலரும் அது மிஸ்டர் அண்ட் மிஸஸ் சின்னத்திரை நிகழ்ச்சியாக இருக்கலாம் என்று சமூக வலைதளங்களில் கருத்து தெரிவித்து வருகின்றனர். ஏனெனில் அந்த நிகழ்ச்சியில் ராதா நடுவராக இருந்தது குறிப்பிடத்தக்கது. ஆனால் இதுவரை இதுகுறித்து அதிகாரப்பூர்வமான உறுதிப்படுத்தல் எதுவும் வெளியாகவில்லை.

ஒரு காலத்தின் முன்னணி நாயகி

தமிழ், மலையாளம், தெலுங்கு, கன்னடம் என 200க்கும் மேற்பட்ட படங்களில் நடித்தவர். ரஜினிகாந்த், கமல்ஹாசன், மம்முட்டி, மோகன்லால் போன்ற முன்னணி நடிகர்களுடன் ஜோடி சேர்ந்தவர். குடும்பக் கதைகளிலும், க்ளாமர் ரோல்களிலும் சம அளவில் வெற்றி பெற்றவர். அதுபோல பல மாநில விருதுகள் மற்றும் ரசிகர் விருதுகளை பெற்றவர்.

திருமணத்திற்கு பிறகு சில காலம் வெளிநாட்டில் வசித்த அவர், பின்னர் மீண்டும் சீரியல் மற்றும் சினிமாக்களில் குணச்சித்திர வேடங்களில் நடித்து வருகிறார்.

Ambika Radha Tamil cinema

ராதாவின் பயணம்

அதேபோல ராதா தனது சகோதரியுடன் சேர்ந்து 80களில் தமிழ் சினிமாவை ஆட்சி செய்தவர். அலைகள் ஓய்வதில்லை மூலம் அறிமுகமாகி ரஜினிகாந்த், கமல்ஹாசன், சிவாஜி, கார்த்திக், மோகன்லால் உள்ளிட்ட முன்னணி நடிகர்களுடன் பல ஹிட் படங்களில் நடித்துள்ளார். சிறந்த நடிகைக்கான பல விருதுகளும் வாங்கி இருக்கிறார்.

இந்த நிலையில் அம்பிகா பேசிய இந்த விஷயம் வெளியாகியதிலிருந்து, "லெஜண்ட் நடிகைகளை அவமானப்படுத்தக் கூடாது" "காமெடி என்ற பெயரில் எல்லாவற்றையும் செய்ய முடியாது" என்று ரசிகர்கள் அவருக்கு ஆதரவாக கருத்து தெரிவித்து வருகின்றனர்.

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+