பிக் பாஸில் நள்ளிரவு நடந்த சம்பவம்.. கடைசி இடத்துக்கு போன டிடிஎஃப் வாசன்.. முதலில் யார் தெரியுமா?

Subscribe to Oneindia Tamil

சென்னை: பிக் பாஸ் தமிழ் சீசன் 10 நிகழ்ச்சியில் நேற்றைய எபிசோடில் ரேங்கிங் டாஸ்க் நடைபெற்றது. பகல் முழுக்க தான் போட்டியாளர்கள் சண்டை போட்டுக் கொண்டிருந்தார்கள் என்று பார்த்தால், இரவும் இவர்களுடைய பஞ்சாயத்துக்கு முடிவே இல்லை. கடைசியில் 14 போட்டியாளர்கள் அவர்களுக்குரிய ரேங்க்கை செலக்ட் செய்து இருக்கிறார்கள். அதில் முதலிடத்தில் ஜேசன் இருக்கிறார், கடைசி இடத்தில் டிடிஎஃப் வாசன் இருக்கிறார்.

Bigg Boss house

விஜய் சேதுபதி

ஜேசன் முதல் இடத்தை விட்டுக் கொடுக்காமல் ஆரம்பத்தில் இருந்தே எல்லா போட்டியாளர்களிடம் சண்டை போட்டுக் கொண்டிருந்தார். அதிலும் வாசனிடம் எகிறி எகிறி சண்டை போட்டுக் கொண்டிருந்தார். வாசனும் முதலில் கூலாகவே பேசிக் கொண்டிருந்தார். ஒரு கட்டத்தில் அவரும் டென்ஷன் ஆகி கத்தி இருந்தார். அப்போது கூட வாசன் உன்னை மாதிரி நான் கிடையாது, நீ வெளியிலிருந்து கை தட்டுவதற்கு ஆள் செட் பண்ணிட்டு வந்திருக்கிற ஆனா நான் அப்படி கிடையாது, நான் நானாக முன்னேறி வந்தேன். காமன் மேன் நிகழ்ச்சியில் இருந்து கெத்தாக இந்த நிகழ்ச்சிக்கு வந்தேன் என்று பெருமையாகவே பேசிக் கொண்டிருந்தார்.

ஜேசன் வாக்குவாதம்

அப்போது வாசன், காமன்மேன் நிகழ்ச்சியில் இருந்து இந்த நிகழ்ச்சிக்கு வந்ததுக்கு வாழ்த்துக்கள் சொல்கிறேன், ஆனால் அதை மட்டும் தகுதி என்று சொல்ல முடியாது. இந்த பிக்பாஸ் வீட்டிற்குள் நீ எதற்கெடுத்தாலும் சண்டைதான் போட்டுக் கொண்டிருந்தாய் வேற என்னதான் பண்ணுன? என்று ஜேசனிடம் கேட்கிறார். அதற்கு ஜேசனும் விடாமல் பேசிக்கொண்டே இருக்கிறார். இந்த வீடியோவை இப்போ சோசியல் மீடியா முழுக்க நெட்டிசன்கள் கலாய்த்து வருகிறார்கள்.

ட்ரோல் ஆகும் வீடியோ

ஜேசன் கையை ஆட்டி பேசுவதை வைத்து பரதநாட்டியம் மியூசிக் போட்டு ரசிகர்கள் கலாய்க்கிறார்கள். ஆனால் இதில் ஒரு சுவாரசியமான விஷயம் நடந்தது. அதாவது முனியம்மா, நீங்க எல்லாரும் என்னதான் முதல் இடத்துக்காக அடிச்சு சண்டை போட்டுக்கிட்டாலும் அந்த முதலிடத்திற்கு டிடிஎஃப் வாசன் தகுதியானவர்தான். அவர் வந்த பிறகு இந்த நிகழ்ச்சியின் விளையாட்டு போக்கே மாறி இருக்கிறது. எந்த டாஸ்க்கையும் சுவாரசியமாக கொண்டு போவதற்கு தான் வாசன் முயற்சி பண்ணுகிறார்.

தரவரிசை பட்டியல்

அதனால் வாசனுக்கு அந்த இடத்தை கொடுப்பதில் எந்த தவறும் கிடையாது என்று சப்போர்ட் பண்ணி இருந்தார். உடனே வாசன் ரசிகர்கள் முனியம்மாவை பாராட்ட தொடங்கி விட்டார்கள். முதலிடத்தில் ஜேசன், 2வது இடத்தில் அடாவடி அன்சர், 3வது இடத்தில் வினோத் பாபு, 4வது இடத்தில் முகேஷ், 5வது இடத்தில் அவினாஷ், 6வது ப்ரீத்வி, 7வது ஷாதிகா, 8வது தன்யா, 9வது அஸ்மிதா, 10வது அக்ஷிதா, 11வது லட்சுமி பிரியா, 12 வது முத்தழகு, 13 வது முனியம்மாள், 14 ஆவது டிடிஎஃப் வாசன் என இப்போதைக்கு இடத்தை பிடித்திருக்கிறார்கள்.

Bigg Boss house

ரசிகர்கள் கருத்து

எப்படியும் இந்த வாரம் இதை வைத்து பஞ்சாயத்து வரும். வெளியே டிடிஎப் வாசனுக்கு தான் அதிக ஓட்டு கிடைத்துக் கொண்டிருக்கிறது என்பது உள்ளிருக்கும் ஜேசனுக்கும் தெரிந்திருக்கும் போல. அதனாலயே இந்த தரவரிசை பட்டியல்களில் கூட கடைசி இடத்திற்கு வாசனை அனுப்பி வைத்தால் அவரால் ஜெயிக்க முடியாது என்று நினைத்து விட்டார் போல. ஆனால் வாசன் பெருந்தன்மையாக கடைசி இடத்திற்கு வந்தாலும் உங்களை நாங்க ஜெயிக்க வைத்து விடமாட்டோம் என்று ரசிகர்கள் கங்கணம் கட்டிக்கொண்டு வாக்குகளை குவிக்கிறார்கள். இந்த சீசன் டைட்டில் வின்னர் வாசன் தான் என்பதுதான் அனைவருடைய கருத்தாக இருக்கிறது. ஆனாலும் என்ன நடக்கப்போகிறது என்று பொறுத்திருந்து பார்ப்போம்.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+