Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

இரண்டு மூன்று காதல் வந்தால் தப்பில்லை.. ஆனால்! வெளிப்படையாக விளக்கம் கொடுத்த தொகுப்பாளர் டிடி

Subscribe to Oneindia Tamil

சென்னை: டிடி என்று அழைக்கப்படும் திவ்யதர்ஷினியிடம் ரசிகர் ஒருவர் இரண்டாவது காதல் குறித்து நீங்கள் என்ன நினைக்கிறீர்கள்? என்று கேட்ட கேள்விக்கு டிடி வெளிப்படையாக விளக்கம் கொடுத்திருக்கிறார். அது இணையத்தில் பலருடைய கருத்துக்களை பெற்று வருகிறது.

தொகுப்பாளர்கள் என்று சொன்னதும் டக்கென்று நினைவிற்கு வருபவர்களில் முதன்மையானவர் தான் டிடி என்ற திவ்யதர்ஷினி நீலகண்டன். இவர் ஆரம்பத்தில் பல சீரியல்களில் நடித்திருந்தாலும் அதற்கு பிறகு பெரிய அளவில் பிரபலமானது தொகுப்பாளினியாகத்தான். இயக்குனர் மௌலி இயக்கத்தில் கமல்ஹாசன் தயாரித்த நல்ல தமயந்தி என்று என்ற திரைப்படத்தில் நடித்து வெள்ளித்திரையில் அறிமுகமாக இருந்தாலும் சின்னத்திரையில் நடிகை ராதிகா சரத்குமாரின் செல்வி, அரசி போன்ற சீரியல் சீரியல்களில் நடித்து வந்த டிடி 2007 ஆம் ஆண்டு விஜய் டிவியில் தொகுப்பாளினியாக சேர்ந்து இருந்தார்.

Television divyadarshini

அதற்கு பிறகு விஜய் டிவியின் அடையாளமாகவே மாறி இருந்தார். அதிலும் குறிப்பாக காபி வித் டிடி, அன்புடன் டிடி போன்ற நிகழ்ச்சிகள் டிடிக்கு மிகப்பெரிய அடையாளத்தையும் அங்கீகாரத்தையும் கொடுத்திருந்தது. அதே நேரத்தில் டிடி தஞ்சாவூரு மாவட்டத்தை சொந்த ஊராகக் கொண்ட இவர் பள்ளி படிப்பை முடித்து சென்னையில் உள்ள ஒரு கல்லூரியில் படித்துக் கொண்டிருக்கும் போதே பார்ட் டைம் ஆக வேலை பார்த்துக் கொண்டிருக்கும் போது தான் தொலைக்காட்சி நிகழ்ச்சிகளை தொகுத்து வழங்க தொடங்கி இருக்கிறார்.

ரியாலிட்டி நிகழ்ச்சிகளுக்கு பெயர் போன விஜய் டிவியில் புதியது புதியதாக நிகழ்ச்சிகள் ஆரம்பத்தில் இருந்தே ஒளிபரப்பாகி வருகிறது. அந்த வகையில் ஒரு நிகழ்ச்சி தான் காபி வித் டிடி. இந்த நிகழ்ச்சியின் மூலமாக விஜய் டிவி பெயர் வாங்கியதோ இல்லையோ இந்த நிகழ்ச்சியை தொகுத்து வழங்கிய டிடி மக்கள் மத்தியில் அதிகமாக பிரபலம் அடைந்திருந்தார். எப்போதும் கலகலப்பாகவும், சிரித்த முகமாகவும் இருக்கும் டிடி எதிரே இருக்கும் பிரபலங்களை டக்கு டக்கென்று என்று கேள்வி கேட்டு மடக்கி அவர்களின் மனதில் இருக்கும் ரகசியங்களை கொட்ட வைத்து விடுவது டிடி யின் சிறப்பாக இருந்தது.

பூவே உனக்காக பட அஞ்சு அரவிந்தை ஞாபகம் இருக்கா? இப்போ என்ன பண்ணுகிறார் தெரியுமா? திடீர் போஸ்ட்
காபி வித் டிடி நிகழ்ச்சிக்கு முன்பாக விஜய் டிவியில் ஒளிபரப்பான உங்கள் தீர்ப்பு என்ற நிகழ்ச்சியில் குழந்தை தொகுப்பாளினியாக அறிமுகமான இவர் அதற்குப் பிறகு பல தொலைக்காட்சிகளில் பணியாற்றி இருக்கிறார். அதுபோல ராஜ் டிவியில் ஒளிபரப்பான ரெக்ககட்டி பரந்த மனசு என்ற சீரியலில் இவர் நடித்திருக்கிறார். அதை தொடர்ந்து சினிமா, சீரியல் என்று நடித்துக் கொண்டிருக்கும் டிடிக்கு சொந்த வாழ்க்கையில் ஏகப்பட்ட பிரச்சனை.

அதிலும் டிடி அவருடைய நண்பரையே காதலித்து திருமணம் செய்திருந்த நிலையில் திருமணம் ஆன ஒரு சில மாதங்களுக்குள் விவாகரத்து ஆகி அதற்கு பிறகு ஏற்பட்ட சர்ச்சைகள் அதைத் தொடர்ந்து உடல்நல பிரச்சனைகள் என்று பல்வேறு பிரச்சனைகள் வந்திருந்தாலும் அதை கண்டு தயங்கி போய் இருக்காமல் அடுத்தடுத்து மேலே வந்து கொண்டே இருக்கிறார். டிடியில் நிகழ்ச்சியை பார்ப்பதற்காக பல பேர் டிவி முன்பு காத்திருந்த காலமெல்லாம் உண்டு.

இந்த நிலையில் சமூக வலைத்தளத்தில் ஆரம்பத்தில் இருந்தே ஆக்டிவாக இருக்கும் டி டி தன்னிடம் ரசிகர் ஒருவர் "இரண்டாவது காதல் குறித்து நீங்கள் என்ன நினைக்கிறீர்கள்" என்று கேட்ட கேள்விக்கு விளக்கம் கொடுத்திருக்கிறார். அதில் பதில் அளித்த டிடி, அதென்ன செகண்ட்ல லவ்? காதல் என்பது இரண்டு முறை தான் வருமா? அதெல்லாம் சினிமாவில் சொல்வது. ஒரே நேரத்தில் நான்கு அல்லது ஐந்து காதல் வந்தால் தான் தவறு. வாழ்க்கையில் இரண்டு மூன்று லவ் இருந்தால் அது தவறு இல்லை என்று டிடி பதில் கொடுத்திருக்கிறார்.

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+