பூவே உனக்காக பட அஞ்சு அரவிந்தை ஞாபகம் இருக்கா? இப்போ என்ன பண்ணுகிறார் தெரியுமா? திடீர் போஸ்ட்
சென்னை: நடிகர் விஜய் நடிப்பில் வெளியான பூவே உனக்காக திரைப்படத்தில் விஜய் ஒரு தலையாக காதலிக்கும் நந்தினி கேரக்டரில் நடித்த அஞ்சு அரவிந்த் தன்னுடைய லேட்டஸ்ட் புகைப்படங்களை சமூக வலைதள பக்கத்தில் பகிர்ந்து இருக்கும் நிலையில் அது இணையத்தில் அதிகமான கருத்துக்களை பெற்று வருகிறது. ஒரு சில திரைப்படங்கள் எதார்த்தத்தை பிரதிபலிக்கும் வகையில் ரசிகர்கள் மனதில் காலம் கடந்தாலும் இதமான நினைவுகளை ஏற்படுத்தும். அந்த மாதிரி ஒரு திரைப்படம் தான் பூவே உனக்காக திரைப்படம். இந்த திரைப்படம் நடிகர் விஜய் நடிப்பில் 1996 ஆம் ஆண்டு வெளியானது. அந்த நேரத்தில் நடிகர் விஜய் நடிப்பில் வெளியான பல திரைப்படங்களில் காதலோடு சேர்ந்து கவர்ச்சியும் அதிகமாக இருந்த நிலையில் குடும்பத்தினர் எல்லோரும் சேர்ந்து விஜய் படத்தை பார்க்க முடியாது என்று சொல்லும் வகையில் இருந்த நிலையில் அதை உடைத்தது பூவே உனக்காக திரைப்படம் தான்.

சென்டிமென்ட் காட்சிகள் மற்றும் ஒரு தலை காதல், காமெடி என்று எல்லாம் கலந்த கலவையாக பூவே உனக்காக திரைப்படம் இருந்தது. அதனால் தான் இப்ப கூட அந்த திரைப்படம் பலருடைய ஃபேவரைட் திரைப்படமாக இருக்கிறது. அதிலும் அந்த திரைப்படத்தில் நடிகர் விஜய் ஒருதலையாக உருகி உருகி காதலித்து கடைசி வரைக்கும் காதலித்த பெண்ணிற்கு தன்னுடைய காதல் தெரியாமலேயே இருந்த அஞ்சு அரவிந்தை ரசிகர்கள் அவ்வளவு சீக்கிரத்தில் மறந்திருக்க முடியாது.
அஞ்சு அரவிந்த் மலையாளத்தில் 1995ஆம் ஆண்டு சுரேஷ்கோபி நடிப்பில் வெளியான அக்ஷரம் என்ற திரைப்படத்தில் நாட்டிய பெண்ணாக நடித்து நடிகையாக அறிமுகமானார். அதற்கு பிறகு பார்வதி பரிநாயம், சுந்தரி நீயும் சுந்தரன் நானும் உட்பட மலையாள படங்களில் நடித்து வந்த நிலையில் தான் பூவே உனக்காக திரைப்படத்தில் மூலமாக தமிழிலும் அறிமுகமாக இருக்கிறார்.

அதிலும் அந்த திரைப்படத்தில் இடம் பெற்ற “செடியில் பூக்கிற பூ ஒரு முறை உதிர்ந்து விட்டால் மீண்டும் எடுத்து ஒட்ட வைக்க முடியாது” என்று கிளைமாக்ஸில் விஜய் பேசி விட்டு காதல் நினைவுகளோடு கடந்து செல்லும் காட்சி ரசிகர்களை அதிகமாக எமோஷனல் அடைய வைத்தது. பூவே உனக்காக திரைப்படத்திற்கு பிறகு எனக்கு ஒரு மகன் பிறப்பான், அருணாச்சலம், ஒன்ஸ்மோர் போன்ற பல திரைப்படங்களில் அஞ்சு அரவிந்த் நடித்திருந்தார்.
அதோடு உன்னுருகே நானிருந்தால், வானத்தைப்போல, வாஞ்சிநாதன் என்ற திரைப்படங்களில் துணை கதாபாத்திரத்திலும் நடித்திருந்தார். அது மட்டுமல்லாமல் தமிழ் படங்களில் அதிகமாக நடிக்கவில்லை என்றாலும் மலையாளத்தில் அதிகமான திரைப்படங்களில் நடித்திருந்தார். அந்த நேரத்தில் தான் 2002 ஆம் ஆண்டு தன்னுடைய சொந்த மாமாவான தேவராஜன் என்பவரை திருமணம் செய்து கொண்டார். ஆனால் அவர்களுடைய திருமண வாழ்க்கை அதிக நாட்கள் நீடிக்கவில்லை.

சுமார் இரண்டரை வருடங்களிலேயே கருத்து வேறுபாடு காரணமாக விவாகரத்து செய்து கொண்டார். இந்த செய்தி அந்த நேரத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. அதற்குப் பிறகு சினிமாக்களில் வாய்ப்புகள் குறைந்த நிலையில் சீரியல்களில் நடித்து வந்த நிலையில் கடந்த 2006 ஆம் ஆண்டு பெங்களூரை சேர்ந்த தொழிலதிபர் வினய் சந்திரனை திருமணம் செய்து கொண்டார். இந்த தம்பதிக்கு ஒரு மகள் இருக்கிறார்.
இந்த நிலையில் இப்போது சமீபத்தில் அவர் அதிகமாக திரைப்படங்களிலும் சீரியலிலும் நடிப்பதில்லை என்றாலும் சொந்தமாக டான்ஸ் கிளாஸ் ஒன்றை வைத்து இருக்கிறார். அதன் மூலம் பலருக்கு டான்ஸ் சொல்லிக் கொடுத்துக் கொண்டிருக்கிறார். அப்போது எடுத்த புகைப்படங்களை தன்னுடைய சமூக வலைதள பக்கங்களில் வெளியிட்டு வரும் நிலையில் அவருடைய தற்போதைய நிலையை பார்த்ததும் ரசிகர்கள் பூவே உனக்காக திரைப்படத்தில் பார்த்த நந்தினியா இவங்க என்று அதிர்ச்சியாகி இருக்கின்றனர்.
-
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
பிறந்தநாளன்று புதிய கட்சி அறிவிப்பு? பாஜக மேலிடத்திடம் டைம் கேட்ட அண்ணாமலை.. ரகசிய மூவ்! -
தாய் பத்திரம் தொலைஞ்சிருச்சா? ஆன்லைனில் ஈஸியாக ஒரிஜினலை மீட்க 6 ஆவணங்கள் என்ன? சிம்பிள் ஸ்டெப்ஸ் -
முக்கோணப் போட்டியில் தமிழ்நாடு.. 112 ஐ நெருங்கும் விஜய்? மாஸ் கம்பேக்கில் திமுக.. பதற்றத்தில் அதிமுக -
பனையூர் பாபுவுக்கு ஸ்கெட்ச்! அடுத்து ஆளூர் ஷாநவாஸை நோக்கி குரைக்கிறார்கள்! சிந்தனைச் செல்வன் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
அரசியலுக்கு முழுக்கு.. திமுக பொதுச்செயலாளர் பதவியில் இருந்து விலகும் துரைமுருகன் -
தந்தை இறப்பில் நடந்தது மீண்டும் வேண்டாம்.. தாயார் மறைவில் அஜித் குடும்பம் எடுத்த முடிவு! வருத்தத்தில் ரசிகர்கள் -
தமிழக பள்ளி – கல்லூரி மாணவர்களுக்கு அரசு பஸ்சில் இலவச பயணம்.. அறிவித்தார் போக்குவரத்து அமைச்சர் -
8-வது ஊதியக் குழு அப்டேட்! சாதாரண ஊழியருக்கு 1.5 லட்சம்.. மத்திய அரசு ஊழியர்களுக்கு குஷி -
முதல்வர் விஜய்யை சந்திக்காத மேயர் பிரியா! சுணக்கத்தில் சென்னை மாநகராட்சி.. மோதலா? து.மேயர் விளக்கம் -
திருச்சி-க்கு வரும் தாஜ்.. ஒரே நேரத்தில் 3 மெகா பிராண்ட்.. அதுவும் இந்த ஏரியாவுல!












Click it and Unblock the Notifications