அடுத்த “கல்யாணம்”பற்றி திடீர் என்று பேசிய டிடி..அக்கா பிரியதர்ஷினி சொன்ன வார்த்தை.. நல்ல முடிவு தான்
சென்னை: தொகுப்பாளர் டிடி திருமண வாழ்க்கை குறித்து அது பற்றிய கேள்விகள் குறித்து முதல் முறை பதிலளித்திருக்கிறார்.
அவரோடு அவருடைய அக்கா எதிர்நீச்சல் நடிகை பிரியதர்ஷினியும் டிடி யின் கருத்துக்கு ஆதரவு தெரிவித்திருக்கிறார்.

இந்த நிலையில் என்ன நடந்தது என்பது பற்றி விரிவாக பார்க்கலாம்.
தொகுப்பாளர் என்று சொன்னதுமே ஒரு சிலருடைய முகம் உடன் டக் என்று நினைவிற்கு வரும் அந்த வகையில் டிடி பல வருடங்களாகவே தொலைக்காட்சி தொகுப்பாளராக இருந்து வருகிறார். இதற்கு முன்பாக சில திரைப்படங்களிலும் நடித்திருக்கிறார். ஆனால் அதிகமாக தொகுப்பாளராக தான் பிரபலம் ஆகி இருக்கிறார்.
கிட்டத்தட்ட 20 வருடங்களுக்கு மேலாக தொலைக்காட்சி தொகுப்பாளராக கொடி கட்டி பறந்து வரும் இவரை சமீபத்தில் அதிகமாக நிகழ்ச்சியில் பார்க்க முடியவில்லை. ஆனாலும் சுந்தர் சி இயக்கத்தில் 2022 ஆம் ஆண்டு வெளியான காபி வித் காதல் படத்தில் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்திருந்தார். அதைத் போல 2014 ஆம் ஆண்டு தன்னுடைய நீண்ட நாள் நண்பரும் உதவி இயக்குனருமான ஸ்ரீகாந்த் ரவிச்சந்திரனை குடும்பத்தினர் சம்மதத்தோடு திருமணம் செய்து இருந்தார்.
இந்த நிலையில் ஒரு சில மாதங்களுக்குள் இவர்களுக்குள் கருத்து வேறுபாடு ஏற்பட்டு பிரிந்து வாழ்ந்து வந்தனர். பிறகு விவாகரத்தும் ஆகிவிட்டது. அதைத் தொடர்ந்து அதிகமான முறை டிடி இரண்டாவது திருமணம் செய்ய போகிறார் என்று வதந்திகள் பரவிக் கொண்டே இருந்தது. இந்த நிலையில் இது குறித்து சமீபத்தில் பேட்டியில் டிடி மனம் திறந்து பேசி இருக்கிறார்.
அதில் பத்து ஆண்டுகளுக்கு முன்பு திருமணம் குறித்து என்னுடைய புரிதல் வேறாக இருந்தது. இப்போது அது மாறிவிட்டது. திருமணம் செய்து கொள்வது அவரவர் விருப்பம். திருமணம் செய்து கொண்டால் தான் வாழ்க்கை முழுமையடையும் என்றெல்லாம் கிடையாது. திருமணம் செய்து ஆக வேண்டும் என்று எந்த கட்டாயமும் கிடையாது.

திருமணம் என்பது வாழ்க்கையில் ஒரு பகுதி தான். திருமணம் செய்யாமல் இருப்பதால் என்னுடைய வாழ்க்கை குறித்து நீங்க யாரும் சர்டிபிகேட் கொடுக்க வேண்டாம். அது எனக்கு தேவையையும் இல்லை. எனக்கான சர்டிபிகேட்டை நானே எனக்கு கொடுத்துக் கொள்வேன். என்னைப் பற்றி எனக்குத் தான் முழுமையாக தெரியும் என்று கூறியிருக்கிறார்.
அதற்கு அவருடைய அக்கா எதிர்நீச்சல் சீரியலில் நடிக்கும் நடிகை பிரியதர்ஷினி திருமண வாழ்க்கை என்பது அவர்களுடைய இஷ்டம் நாங்கள் கூட அதைப்பற்றி அவளுடைய முடிவு சரியாக இருக்கும் என்று நினைத்திருக்கிறோம். ஆனால் பலர் அறிவுரை சொல்வதாக நினைத்து தவறாக பேசிக் கொண்டிருக்கிறார்கள். அது டிடியை மட்டுமல்லாமல் யாரையும் இப்படி காயப்படுத்தி கருத்து கூற வேண்டாம் என்றும் கூறியிருக்கிறார்.
-
ஒருபுறம் அஜித் அம்மா மறைவு... மறுபுறம் அனாதையாக விடைபெற்ற சத்யேந்திரா! சமூகத்தின் இரட்டை முகமா? -
இப்படி நடக்கும்னு எதிர்பார்க்கல.. விரக்தியில் விக்னேஷ் சிவன் போட்ட பதிவு.. குவியும் ஆறுதல் -
உருவத்தை பார்த்து சிரித்தவர்கள் இன்று மகளை பார்த்து வியக்கிறார்கள்... டிஷ்யூம் பட நடிகர் கின்னஸ் பக்ரு நெகிழ்ச்சி -
என்னை காப்பாத்துங்க.. கதறிய பாண்டியன் ஸ்டோர்ஸ் நடிகையின் கணவர்.. வாத்தியாருக்கே இந்த நிலைமையா? -
“வைகை அணையில் கூலி வேலை பார்த்த இளையராஜா, இசைஞானி ஆனது எப்படி? முதல் சம்பளம் எவ்வளவு தெரியுமா?” -
அமைதியா இருங்க... இல்லன்னா.. 83வது பிறந்தநாளில் ரசிகர்களிடம் கடுப்பான இளையராஜா! -
அஜித் மாதிரி யாராலும் இருக்க முடியாது.. சூட்டிங் ஸ்பாட்டில் நடந்த சம்பவம்.. ரகசியங்களை உடைத்த பிரபலம் -
உருவ கேலியால் உடைந்த மனம்... அந்த நடிகர் கேட்ட கேள்வியால் கதறி அழுதேன்.. நடிகை ஊர்வசி உருக்கம் -
பிரச்சனை இருந்தது.. விட்டு கொடுக்க மனசு இல்ல.. ஆனாலும், கருப்பு படம் குறித்து நடிகர் இந்திரன்ஸ் உருக்கம் -
Blast Movie Review: ப்ளாஸ்ட் படம் எப்படி இருக்கு? கதை இதுதான்! அர்ஜுனுக்கு கம்பேக்? முழு விமர்சனம் இதோ! -
இர்ஃபானின் ரூ. 3650 பிரியாணியை வறுத்தெடுத்த யூடியூப்பர்.. ப்ளூ சட்டை மாறனுடன் ஒப்பிட்டு கலாய் -
எல்பிஜி சிலிண்டர் பயன்படுத்துபவர்களுக்கு..நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள்! PNGக்கு மாற்றம் கட்டாயம்?












Click it and Unblock the Notifications