இந்த நடிகரால் தான் பிரியங்காவின் லைப்பே போச்சா? வருத்தத்தோடு அவருடைய அம்மா பகிர்ந்த தகவல்
சென்னை: விஜய் டிவியில் பல வருடங்களாக தொகுப்பாளினியாக இருக்கும் பிரியங்கா சின்னத்திரை ரசிகர்களின் மத்தியில் பிரபலமானவர்தான். இவருடைய ஜாலியான நகைச்சுவையான பேச்சு இவர் தொகுத்து வழங்கும் நிகழ்ச்சிகளை மக்கள் பார்ப்பதற்கு தூண்டி கொண்டிருக்கிறது.
வெளியே பார்ப்பதற்கு எப்போதும் கலகலப்பாக இருக்கும் பிரியங்கா அவருடைய திருமண வாழ்க்கையை குறித்து எந்த இடத்திலும் வெளிப்படையாக பேசாமல் இருந்து வருகிறார். பிக் பாஸ் தமிழ் சீசன் 6 நிகழ்ச்சியில் போட்டியாளராக இருக்கும்போது கூட பிரியங்காவின் ரசிகர்கள் அவருடைய கணவர் பற்றி அவர் பேசுவார் என்பதற்காக அதிகமாக காத்திருந்தனர். ஆனால் எந்த இடத்திலும் தன்னுடைய திருமண வாழ்க்கையை பற்றி பிரியங்கா பேசவில்லை.

இந்தநிலையில் விஜய் டிவியிலேயே பல நிகழ்ச்சிகளை தொகுத்து வழங்கிக் கொண்டிருக்கும் பிரியங்கா விஜய் டிவி பிரபலம் ஒருவரையே காதலித்து திருமணமும் செய்து கொண்டிருந்தார். அவர் மூலமாக தான் பிரியங்காவிற்கு தொகுப்பாளராக வாய்ப்பு கிடைத்தது என்றும் ஒரு செய்தி பரவி வருகிறது. இந்த நிலையில் தற்போது பிரியங்கா சூப்பர் சிங்கர் நிகழ்ச்சியை தொகுத்து வழங்கி வருகிறார்.
மகாபாவோடு இணைந்து சூப்பர் சிங்கர் நிகழ்ச்சியில் பிரியங்கா செய்யும் அலப்பறை இந்த நிகழ்ச்சிக்கு மேலும் ரசிகர்களை கூட்டி இருக்கிறது. அதனால் பல நேரங்களில் இந்த நிகழ்ச்சி வைரலாக மாறியும் இருக்கிறது. ஒவ்வொரு சீசனிலும் ஒரு சில போட்டியாளர்களை குறிப்பிட்டு பிரியங்கா கலாய்த்து கொண்டிருப்பார்.
அதோடு போட்டியாளர்களை பிரியங்கா கலாய்ப்பதை விட நண்டு, சிண்டு போட்டியாளர்கள் வரை பிரியங்காவை கலாய்த்து பெரிய ஆளாகி இருக்கின்றனர். ஆனாலும் தன்னைப் பற்றி யார் கலாய்த்தாலும் கண்டுகொள்ளாமல் பிரியங்கா நிகழ்ச்சியை ஜாலியாக கொண்டு போய் கொண்டு இருக்கிறார். இந்த நிலையில் அவர் இந்த துறைக்கு வந்து கிட்டத்தட்ட 15 வருடங்கள் ஆகிவிட்ட நிலையில் இது குறித்து பிரியங்காவோடு பயணித்த பலரும் பிரியங்கா பற்றி பல அனுபவங்களை நிகழ்ச்சி ஒன்றில் பகிர்ந்து கொண்டிருக்கின்றனர்.
இதில் பிரியங்காவின் அம்மாவும் அந்த நிகழ்வில் கலந்து கொண்டு பிரியங்காவிடம் ஒரு சத்தியத்தை வாங்கி இருக்கிறார். அதாவது முதலில் இருந்த வாழ்க்கையில் தான் தவறு நடந்துவிட்டது, இனிமேல் அமையும் வாழ்க்கையிலாவது எந்த தவறும் நடக்காதவாறு மிகவும் சந்தோஷமாக இருக்க வேண்டும்... இருப்பேன் என்று சொல்லு என்று பிரியங்காவிடம் அவர் சத்தியத்தை கேட்க பிரியங்காவும் வேறு வழியில்லாமல் அம்மாவிற்காக சத்தியம் செய்து கொடுத்து இருக்கிறார்.
பிக் பாஸ் முடிஞ்சு ஒரு வாரத்திற்குள் இந்த நிலைமையா? பூர்ணிமாவின் திடீர் பதிவு.. அந்த 5 பேரிடம் கோரிக்கை
இப்படியான நிலையில்தான் அதே நிகழ்ச்சியில் விஜய் டிவி பிரபலமான தீனாவும் கலந்து கொண்டிருந்தார். அவர் பிரியங்காவை பற்றி பெருமையாக பேசிக் கொண்டிருந்தார். அப்போது தனக்கு ஒரு படம் இயக்க வேண்டும் என்று ஆசையாக இருப்பதாக சொல்லி, ஆனால் அந்த படத்தை தன்னையே வைத்து இயக்கி சோதனை செய்து பார்ப்பேன். அதற்குப் பிறகுதான் விஜய்யை வைத்து இயக்குவேன் என்று பேசி இருந்தார்.
அதோடு முதலில் அடுத்தவங்கள அழிக்கிறதுக்கு முன்னாடி தன்னையே அழிக்க வேண்டும் என்று தீனா பேசிக் கொண்டிருக்கும்போது பக்கத்தில் இருந்த பிரியங்கா அப்படியெல்லாம் சொல்லாத என்று தீனாவை இடைமறிக்க அதற்கு தீனா "இந்தா என்கூட இருந்து உன் வாழ்க்கை வீணடிக்கலையா" என்று கலாய்க்க அதற்கு பிரியங்கா பதில் ஏதும் சொல்லாமல் தன்னுடைய டிரேடு மார்க்கான சிரிப்பை மட்டும் உதிர்த்துக் கொண்டிருக்கிறார்.
-
சிறகடிக்க ஆசை: சிந்தாமணி சதி! உண்மைகளை உளறிய மனோஜ், ஜெயிலுக்கு போகும் விஜயா! மீனா செய்த செயல் -
மாதம்பட்டி ரங்கராஜனின் சவால்! நான் இந்த இடத்தில் வந்து நிற்க காரணம்.. உருக்கமாக போஸ்ட் போட்ட ஜாய்! அடுத்த பஞ்சாயத்து -
குக் வித் கோமாளியில் பஞ்சாயத்து மேல் பஞ்சாயத்து! மணிமேகலை இடத்தில் ஜோயா! புதிதாக வந்த ரோஜா! காரணம் இருக்கு! -
மாதம்பட்டி ரங்கராஜன் டிஎன்ஏ டெஸ்ட் ரிசல்ட் வந்தாச்சு..! ஜாய் கிரிஸில்டா குழந்தை விஷயத்தில் வெளியான தகவல்! -
முடங்கும் துபாய், அபுதாபி! அடியோடு மங்கும் தங்கம் மார்க்கெட்! ஆடிப்போன இந்திய ஜுவல்லரி நிறுவனங்கள் -
மனைவி தனது பெற்றோரிடமிருந்து பெற்ற சொத்தில் கணவருக்கு உரிமை உண்டா? ஐகோர்ட் தீர்ப்பு முழு விவரம் -
சென்னை இளைஞர் கொடைக்கானலுக்கு நண்பர்களுடன் ஜாலியாக சுற்றுலா.. கற்பனையில் நினைக்காத சம்பவம் -
தமிழகத்தில் 2010 ல் RI ஆக வேலைக்கு சேர்ந்தவர் 2026ல் எவ்வளவு சம்பளம் வாங்குவார் தெரியுமா? -
இல்லத்தரசி கூப்பன் திட்டத்தில்.. நுணுக்கமான விஷயமே இதுதான்.. டிஆர்பி ராஜா சொன்ன சுவாரசிய தகவல் -
'இல்லத்தரசி' கூப்பன்.. எங்கே வாங்கலாம்? எப்படிப் பயன்படுத்தலாம்? கோட்டை வட்டாரத்தில் கசிந்த தகவல் -
ரூ.100 கோடியை போய் FDல் போட்டு இருக்காரே.. விஜய் சொதப்பிட்டாரே.. யாருங்க இந்த ஐடியா தந்தது? -
கார் ஓட்டுநரின் மகனுக்கு சீட்! எங்கயோ இடிக்குதே! விஜய்யின் ரியல் எஸ்டேட் தொழில் குறித்து ஷாக் தகவல்












Click it and Unblock the Notifications