நான் சிம்புக்கு அம்மா இல்லைங்க.. பதறி போய் ஆண்ட்ரியா கொடுத்த அரசன் அப்டேட்! குழப்பத்தில் ரசிகர்கள்
சென்னை: அரசன் படத்தில் சிம்புவுக்கு அம்மாவாக ஆண்ட்ரியா நடிக்கிறாராம் என்ற பேச்சு சோசியல் மீடியாவில் பரவி வந்த நிலையில் அதற்கு நடிகை ஆண்ட்ரியா நேரடியாகவே விளக்கம் கொடுத்திருக்கிறார். நகை கடை திறப்பு விழாவில் கலந்துகொண்ட அவர் ரசிகர்களின் கேள்விகளுக்கு சிரித்தபடி பதில் சொல்லிய வீடியோ இணையத்தில் வைரலாகி வருகிறது.
அப்போது அரசன் படத்தில் சிம்புவோட அம்மாவா நடிக்கிறீர்களாமே என்று கேட்கப்பட்டதற்கு ஐயையோ.. அப்படியெல்லாம் இல்லைங்க.. நான் சிம்புவோட அம்மாவாக நடிக்கல. சந்திராவாக தான் நடிக்கிறேன் என்று கூறி வதந்திகளுக்கு முற்றுப்புள்ளி வைத்திருக்கிறார். இந்த ஒரு பதில் ரசிகர்களிடையே பெரிய வரவேற்பு பெற்றுள்ளது. காரணம் அரசன் படத்தில் முதல் கிளிப்ஸ் வெளியானதில் சிம்பு வயதான தோற்றத்திலும், இளமையான தோற்றத்திலும் இரண்டு விதமாக கெட்டப்களில் வருகிறார்.

நடிகை ஆண்ட்ரியா பதில்
இதனால் ஆண்ட்ரியா அவருக்கு அம்மாவாக நடிக்கிறாரா என்ற சந்தேகம் ரசிகர்களுக்கு பரவியது. ஆனால் உண்மையில் ஆண்ட்ரியா வடசென்னை படத்தில் நடித்த சந்திரா கதாபாத்திரத்திலேயே மீண்டும் வருகிறார். அதேபோல நடிகர் சமுத்திரகனியும் தனது பழைய குணா கேரக்டரில் மீண்டும் நடிக்கிறார். அரசன் திரைப்படம் வடசென்னை உலகத்தில் நடக்கும் இன்னொரு கதை என்பதால் பழைய கேரக்டர்கள் மீண்டும் வருகின்றனர்.
வெற்றிமாறன் சிம்பு கூட்டணி
வெற்றிமாறன் இயக்கத்தில் உருவாகி வரும் அரசன் சிம்பு மற்றும் வெற்றிமாறன் கூட்டணியில் முதல் திரைப்படம் ஆகும். தி கிரியேஷன்ஸ் சார்பில் கலைப்புலி எஸ் தானு தயாரிக்கும் இந்த படத்திற்கு அனிருத் இசையமைக்கிறார். விஜய் சேதுபதி முக்கிய கேரக்டரில் நடிக்கிறார் என்றும் யோகலட்சுமி உள்ளிட்ட பலரும் படத்தில் நடிப்பதாகவும் தகவல் வெளியாகி இருக்கிறது.

அரசன் படத்தின் அப்டேட்
சமீபத்தில் இயக்குநர் வெற்றிமாறனும் அரசன் திரைப்படத்தின் திரைக்கதை முழுமையாக முடிந்து விட்டது. ரசிகர்கள் நீண்ட நாள் காத்திருப்புக்கு விரைவில் ஒரு சிறப்பு கிளிக் வெளியாகும் என்று தெரிவித்திருந்தார். அதனால் இந்த படத்தில் மீதான எதிர்பார்ப்பு மேலும் அதிகரித்து இருக்கிறது.
சிம்பு எப்படிப்பட்டவர் தெரியுமா? உண்மையான கேரக்டர் இதுதான்! ஓபனாக பேசிய பெப்சி உமா
இதற்கிடையே ஆண்ட்ரியாவின் ஒரே ஒரு வரி விளக்கம் ரசிகர்களின் பல சந்தேகங்களுக்கு பதில் சொல்லியுள்ளது. சிம்புவுக்கு அம்மாவாக இல்லை, சந்திராவாக தான் வருகிறேன் என்று அவருடைய பதிலை வடசென்னை கேரக்டர் மீண்டும் அரசன் உலகில் எப்படி இணைக்கப்படுகிறது என்று ஆர்வம் ரசிகர்களிடம் அதிகரித்து இருக்கிறது.


Click it and Unblock the Notifications
