அப்பா இறந்த பிறகு ஒரு “பட்டாம்பூச்சி” அமானுஷ்யம்.. அனிதா சம்பத் உருக்கமாக வெளியிட்ட திடீர் போஸ்ட்
சென்னை: செய்தி வாசிப்பாளராக சின்னதிறையில் அறிமுகமான அனிதா சம்பத் தற்போது திரைப்பட நடிகையாகவும் இருந்து வருகிறார். இந்த நிலையில் தன்னுடைய அப்பாவின் மறைவிற்குப் பிறகு தன்னுடைய வாழ்க்கையில் நடந்து கொண்டிருக்கும் பல வேதனைகள் மற்றும் அமானுஷ்யங்கள் குறித்து இன்ஸ்டாகிராம் பக்கத்தில் ஒரு நீண்ட பதிவு வெளியிட்டு இருக்கிறார். இது இணையத்தில் பலருடைய கருத்துக்களை பெற்று வருகிறது.
செய்தி வாசிப்பாளராக அறிமுகமான அனிதா சம்பத் பிக் பாஸ் நிகழ்ச்சிக்கு பிறகு பெரிய அளவில் பேசப்பட்டார். அதற்குப் பிறகு சின்னத்திரை மற்றும் வெள்ளி திறையில் பிஸியாக நடித்துக் கொண்டிருக்கிறார். பிக் பாஸ் சீசன் 5 நிகழ்ச்சியில் இருக்கும் போது தன்னுடைய அப்பா மற்றும் தன்னுடைய கணவர் குறித்து அனிதா சம்பத் அதிகமாக பேசிக் கொண்டிருந்தார். அனிதா சம்பத்தின் அப்பா ஆர்சி சம்பத் பிரபல எழுத்தாளர் தான்.

பிக் பாஸ் நிகழ்ச்சிக்கு முன்பு அனிதா சம்பத் மீது அதிகமான பாசிட்டிவ் கருத்துகள் மட்டுமே இருந்த நிலையில் பிக் பாஸ் நிகழ்ச்சியில் அவருடைய பேச்சு மட்டும் துணிச்சலான நடவடிக்கைகள் பார்த்து அவருக்கு நெகடிவ் கருத்துகளும் உருவாக தொடங்கியது. ஆனால் அதே பிக் பாஸ் நிகழ்ச்சியில் இருந்து வெளிவரும் போது தான் அனிதா சம்பத் தந்தையின் இறப்பு அவருக்கு பெயரடியாக இருந்தது. அனிதா சம்பத் அந்த வாரம் எலிமினேஷன் ஆகி வெளியே வந்த நிலையில் அப்போது அனிதா சம்பத்தின் அப்பா கோவில் ஒன்றிற்கு சென்றிருந்த நிலையில் ட்ரெயினில் வரும் வழியிலேயே அவருக்கு மாரடைப்பு ஏற்பட்டு இறந்துவிட்டார்.

பிக் பாஸ் நிகழ்ச்சியில் டைட்டில் வெற்றி பெறுவார் என்ற எதிர்பார்ப்போடு விளையாடி வந்த அனிதா சம்பத், சுரேஷ் சக்கரவர்த்தி மற்றும் ஆரி போன்றோரோடு ஏற்பட்ட கருத்து மோதல்கள் ரசிகர்கள் மத்தியில் அவர் மீது கோபத்தை ஏற்படுத்தியது. அதனாலேயே அவர் வெளியேற்றப்பட்டார். ஆனால் அனிதா சம்பத் வெளியே வந்த பிறகு தன்னுடைய அப்பா முகத்தை பார்க்கவே இல்லை. அவருடைய இறப்பு செய்தி அவரை பெரிய அளவில் அதிர்ச்சி ஆக்கியது.

இந்த நிலையில் தன்னுடைய தந்தையின் இறப்பு குறித்து அனிதா சம்பத் தற்போது நீண்ட ஒரு பதிவு வெளியிட்டிருக்கிறார். அதில் நான் இப்போ புதுசா ஒரு விஷயம் சமீப காலமாக படிக்கிறேன். அதாவது சைக்காலஜி கோர்ஸ் கத்துக்கிட்டு இருக்கிறேன். எந்த ஒரு விஷயத்துக்கு நாம ரொம்ப பயப்படுறோமோ.. டென்ஷன் இல்லன்னா சோகமாகுறோமோ அதே விஷயத்தை கொஞ்சம் கொஞ்சமா பழகுவது மூலமா அதுல இருந்து வெளியே வரலாம்னு சொல்லுறாங்க.

இதை ஒரு சைக்காலஜிகல் ட்ரீட்மென்ட்டாகவே டாக்டர் பண்றாங்களாம். அதை எனக்கு நானே கொடுத்துக்கிட்ட ட்ரீட்மென்ட் ஆகவே இந்த ஹைதராபாத் ஷூட்டிங்கை நான் இப்போ நினைச்சுக்கிட்டேன். நான் இப்போ ஹைதராபாத் ஷூட்டிங்கில் இருக்கிறேன். என்னுடைய அப்பா சீரடி சாய்பாபா கோயிலுக்கு போயிட்டு வரும்போது ரயில் ஆந்திர மாநிலம் கடக்கும்போது தான் அப்பாவுக்கு ஹார்ட் அட்டாக் வந்து அவர் இறந்து போனார்.

அதில் இருந்து தெலுங்கு ஆந்திரா சம்பந்தமாக எதை பார்த்தாலும் எனக்கு வீசிங் வர மாதிரி ஆயிடும். எல்லா ஊருக்கும் டூர் போற நான் ஆந்திரா மட்டும் போகவே மாட்டேன். ஆனா இந்த ஹைதராபாத்ல ஷூட்டிங் நடக்கணும்னு முன்னாடியே எனக்கு தெரியாது. திடீர்னு தான் சொன்னாங்க. அது எனக்கு ரொம்ப கஷ்டமா போச்சு. எப்படி ஆந்திரா போறதுன்னு நான் யோசிச்சுட்டே இருந்தேன். ஆனா என்னை இந்த சைக்காலஜி கிளாஸ் ரொம்பவும் மாற்றிவிட்டது.

அவங்க சொன்ன அந்த சிஸ்டமேட்டிக் டிசைன்ஸ் ஸ்டேஷன் நமக்கு நாமே கொடுக்குற ட்ரீட்மென்ட்( Systemic desensitisation) தான் நினைச்சுக்கலாம் என்றுதான் அந்த சூட்டிங் போனேன். வேலைக்கள் அதிகமாக இருந்ததும் என்னை வேற எதையும் சோகமா யோசிக்க விடாமல் பார்த்துகிச்சு. இப்ப ஆந்திராவுக்கு கொஞ்சம் பழகுனதும் பெட்டரா ஃபீல் பண்ண வைக்கிறது. அப்பாவோட காரியம் அன்னைக்கு அப்பா போட்டோ மேல ஒரு பட்டாம்பூச்சி ரொம்ப நேரமா உட்கார்ந்து இருந்துச்சு, அவரு புத்தகம் மேலெல்லாம் ரொம்ப நேரம் உட்கார்ந்து இருந்தது.
அதுல இருந்து அது அப்பாதான்னு எப்பவுமே நான் நம்புவேன். அப்பாவை பத்தி நினைச்சாலே அப்பாவுக்கு புடிச்ச எதையாவது செஞ்சாலும் அப்பாவோட ஃபேவரைட் இடத்துக்கு அப்பாவை மிஸ் பண்றேன்னு போனாலும் அங்கேயும் ஒரு பட்டாம்பூச்சி வரும்... ஆந்திராவில் தான் அப்பாவை இழந்தேன். இந்த புகைப்படம் எடுக்கும் போது என் பக்கத்தில் ஒரு பட்டாம்பூச்சி வந்துச்சு, என்ன அம்மு என்ன தேடி வந்தியா என்று கேட்ட மாதிரி இருந்துச்சு...

இன்னும் ரயில் சத்தம், ரயில் புகைப்படம், திரைப்படத்தில் ரயில் சீன், டிராவல் பிளாக்ல ரயில் விசுவல்ஸ், ஸ்டேஷன் வழியா வண்டியில போறது இது எல்லாம் எனக்கு பெரிய பயத்தையும் கொடுத்து கொண்டு தான் இருக்கிறது. அந்த மாதிரி விசுவல்ஸ் வந்தா நான் உடனே ஓடிடுவேன். அதுல இருந்து மட்டும் இன்னும் வெளியே வர முடியல கொஞ்சம் கொஞ்சமாக மீண்டு வருவேன் என்று அந்த பதிவில் உருக்கமாக அனிதா சம்பத் பகிர்ந்து இருக்கும் நிலையில் இணையத்தில் அவருக்கு அதிகமானோர் ஆறுதல் கூறி வருகிறார்கள்.
-
விஜய்க்கு எதிராக பெரம்பூர், திருச்சியில் கிழக்கில்.. களமிறங்கும் திமுக, அதிமுக வேட்பாளர்கள் யார்? -
Bose Venkat: சீட் தராததால் கட்சி மாறுகிறேனா? நான் திமிர்பிடித்த திமுககாரன்! போஸ் வெங்கட் பொளேர்! -
அரசியலன்னா இதுதான்.. எப்போ என்ன நடக்கும்னே தெரியாது.. ஸ்டாலின் டிக் அடித்த பெயர்.. பலர் ஷாக் -
இதுவரை திமுக ஜெயிக்காத.. கோவை தெற்கு தொகுதியைத் கேட்டு வாங்கிய செந்தில் பாலாஜி.. என்ன காரணம்? -
916 KDM நகை வாங்குவோர் கவனத்திற்கு.. ஒரு சவரன் தங்கம் எடுக்கும்போதே நஷ்டமா? பலர் செய்யும் பெரிய தவறு -
அழகே அழகு அப்டேட்: திமிரா பேசிய சுரேஷுக்கு சரியான பதிலடி கொடுத்த அழகுமதி.. ஒன்று சேர்ந்த குடும்பம் -
ஜெயலலிதா ஸ்டைலை பின்பற்றும் விஜய்! ‘டபுள் தொகுதி’ ஃபார்முலாவை கையில் எடுத்தது ஏன்? இதுவரை யார் யார்? -
திமுக தேர்தல் அறிக்கை LIVE: மகளிர் உரிமை தொகை, புதுமைப்பெண், தமிழ்ப்புதல்வன் தொகை உயர்வு! -
மத்தி, சென்னையை கிளீன் ஸ்வீப் செய்யும் திமுக! தெற்கு, வடக்கில் ட்விஸ்ட்! அப்போ அரியணை? வெளியான சர்வே -
சிக்சர் அடித்த ஸ்டாலின்.. இந்தியாவிலேயே முதன்முறை! பெண்களுக்காக ஸ்டாலின் கொண்டு வரும் மெகா திட்டம்! -
விஜய்க்கு சத்தமின்றி எடப்பாடி வைத்த செக்.. சம்பவம் பண்ணிட்டாரே.. ஸ்டாலினும் விடலையே.. கேம் ஓவர்? -
தவெகவில் யார் யார் போட்டி? 234 தொகுதிகளுக்கும் வேட்பாளர்கள்.. விஜய்யின் நண்பர் ஸ்ரீநாத்துக்கும் சீட்












Click it and Unblock the Notifications