ஆசை அத்தான்..உம்மா.. முத்தா.. தொங்கா.. புஜ்ஜி... என்னடா நடக்குது...!

Subscribe to Oneindia Tamil

சென்னை: சன் டிவியில் மதிய நேரத்தில் ஒளிபரப்பாகும் சந்திரலேகா சீரியலுக்கு நிறைய பெண்கள் ரசிகையா இருக்காங்க. சீரியலிலும் நல்ல திருப்பங்கள், ரொமான்ஸ், வன்முறை இருக்கு.

மகன் திருவின் பொண்டாட்டி நிலா, மாமியாருக்கு பிடிச்ச மருமகளா இல்லை. தனக்கு பிடிச்ச அஞ்சலியை திரு கல்யாணம் செய்துக்கணும்னு நினைக்கறாங்க. அது நடக்கலை.

அதனால, அஞ்சலியும், திருவின் அம்மாவும் செய்யும் சதியில், நிலாவுக்கும், திருவுக்கும் முதல் ராத்திரி இன்னும் நடக்கலை.எப்போது நடக்கும்னு ஆவலில் காத்திருக்காங்க ரெண்டு பேரும்.

நிலா

நிலா

என்னை நம்பு நிலான்னு திரு கேட்க, எப்படி நம்பறது.. நான் ஆசையா சமைச்சு ஆஃபீஸுக்கு எடுத்துட்டு வரேன்.. அஞ்சலியை மடியில உட்கார வச்சு கொஞ்சிகிட்டு இருக்கீங்க.. யாராவது சொல்லி இருந்தா கூட நம்பி இருக்க மாட்டேன். நானே என் கண்ணால பார்த்தேன்.

பாதிக்கப்பட்டவளும்

பாதிக்கப்பட்டவளும்

நான்தான் சாட்சி, பாதிக்கப்பட்டவளும் நான்தான்னு நிலா சொல்ல, இப்போ ஜட்ஜும் நீதான். நீயே தீர விசாரிச்சுட்டு தீர்ப்பு சொல்லுன்னு சொல்றான் திரு. சரி சொல்லுங்க.. என்னதான் உங்க தரப்பு வாதம்னு கேட்கறா. அதை சொல்றதைவிட செய்தே காமிக்கறேன்னு சொல்றான் திரு.

திருவின் மடியில்

திருவின் மடியில்

இப்போ சேரில் நான் உட்கார்ந்து இருக்கேன். நீதான் அஞ்சலி.. என்கிட்டே வர்ற.. கடைசி அடி ஸ்லிப்பாகுது.வா நிலான்னு கூப்பிடறான். நிலா நடந்து வர இப்போ ஸ்லிப்பாகுன்னு சொல்றான். ஸ்லிப்பாகி சரியா திருவின் மடியில் நிலா விழறா. இப்படித்தான் நிலா நடந்துச்சுன்னு சொல்றான்.

ஒருவர் முகத்தை ஒருவர்

ஒருவர் முகத்தை ஒருவர்

நிலாவும், திருவும் ஒருவர முகத்தை ஒருவர் பார்த்து இருக்க, அஞ்சலி அங்க வர்றா.. என்னது இது..இங்கிதம் தெரியாம எப்போ பார்த்தாலும் ரொமான்ஸ்தானான்னு கடுப்புல கேட்கறா. என் புருஷன் மடியில நான் உட்கார்ந்து இருக்கேன். உனக்கென்னடி.. என் வீட்டுல, என் பெட் ரூமில, என் புருஷன் மடியில உட்கார்ந்து இருக்கேன்.உன்னை மாதிரி அடுத்தவ புருஷனோட ஆஃபீஸ்ல உட்காரலைன்னு சொல்றா.

நமக்கு முதலிரவு

நமக்கு முதலிரவு

போடி வெளியில.. எத்தனை தடவை சொல்றது என் ரூமுக்கு வராதேன்னு.. உனக்கு ஒழுக்கம்தான் இல்லேன்னா இங்கிதம் கூடவா இல்லை. நான் எதுக்கு போகணும்னு அஞ்சலி கேட்க, அப்போ போகாத இரு..நடக்கறதை எல்லாம் பார்த்துட்டு போன்னு சொன்ன நிலா, என் ஆசை அத்தான் நமக்கு எப்போ முதலிரவுன்னு கேட்கறா..

வச்சுக்கலாம்.

வச்சுக்கலாம்.

எதுக்கு தள்ளி தள்ளி போடணும்.. இப்பவே வச்சுக்கலாம் நிலா.. என் கண்ணு, செல்லம், புஜ்ஜின்னு கொஞ்சி முத்தம் தர்றான். நீங்க மட்டும் என்ன என் அத்தான்..உங்களுக்கு முத்தா..உம்மா.. தொங்கான்னு இருவரும் கொஞ்ச.. சீன்னு சொல்லிட்டு கிளம்பறா அஞ்சலி.
வெளியில் நின்னு ஒட்டு கேட்டாலும் முத்தா.. தொங்கான்னே கேட்குது கடுப்புல ஓடறா அஞ்சலி.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+