அஞ்சலி வேணும்னு ஏங்கறா.. கண்ணம்மா வேணாம்ங்கறாளே... இது என்ன கதை!

Subscribe to Oneindia Tamil

சென்னை: விஜய் டிவியின் பாரதி கண்ணம்மா சீரியல் மாறுபட்ட பாதையில நல்லா பயணிக்குது. பார்க்கறதுக்கு ரொம்ப நல்லாருக்கு.

கண்ணாம்மாவுக்கு பார்த்து வச்சிருக்கற மாப்பிள்ளை கேடு கெட்டவன்னு தெரிஞ்சதும், கண்ணாம்மாவின் அப்பாகிட்ட அவங்க பார்த்து வச்சிருக்கற மாப்பிள்ளை பத்தி பாரதி சொல்றான்.

அப்பா எல்லாம் வாங்கி கல்யாணத்துக்கு தயாரான பிறகு இப்படி ஆயிருச்சே மாப்பிள்ளைன்னு அழறார் அப்பா. அழாதீங்க மாமா கண்ணம்மாவை நான் கல்யாணம் பண்ணிக்கறேன்னு சொல்றான் பாரதி.

ஒரு குழந்தை

ஒரு குழந்தை

எனக்கு தாம்பத்ய வாழ்க்கையில ஈடுபட முடியும், ஆனா ஒரு குழந்தையை தர முடியாது. இந்த உண்மையை கண்ணம்மாகிட்ட நீங்க சொல்லி அவங்க சம்மதம் சொன்னா, நானே கல்யாணம் செய்துக்கறேன் மாமான்னு சொல்றான் பாரதி.

ஒத்தை சொல்லுக்கு

ஒத்தை சொல்லுக்கு

அப்பா கண்ணாம்மாவை கோயிலுக்கு அழைச்சுட்டு வந்து, பாரதி பொண்ணு கிட்ட விஷயத்தை சொல்றார். கண்ணம்மா சொல்றா, அப்பா அவர் சொன்ன இந்த ஒத்தை சொல்லுக்கு நாம காலம் பூரா நன்றி சொல்லிக்கிட்டு இருக்கலாம்.

சினிமா இல்லை

சினிமா இல்லை

ஆனா, இது சினிமா இல்லைப்பா.. அவர் பெரிய டாக்டர். நாளைக்கு எங்கியாவது என்னை வெளியில அழைச்சுட்டு போயிட்டு, அவங்ககிட்ட என்னை அவர் மனைவின்னு சொல்லி அறிமுகப்படுத்த முடியுமா? இது மாதிரி சின்ன சின்ன சங்கடம் எல்லாம் அவர் காலம் முழுக்க அனுபவிப்பார்ப்பான்னு சொல்றா கண்ணம்மா.

ரொம்ப பிடிக்கும்ப்பா

ரொம்ப பிடிக்கும்ப்பா

அப்பா அவரை எனக்கு ரொம்ப பிடிக்கும்ப்பா.. நீங்க சொன்னவுடனே ஒரு நிமிஷம் அவர் கூட நான் மாலையும் கழுத்துமா நிக்கற மாதிரி நினைச்சு பார்த்தேன். ரொம்ப சந்தோஷமா இருந்துச்சு. இந்த சந்தோசம் போதும்ப்பா.

பிடிக்காது

பிடிக்காது

என்னை கண்டாலே அவங்க அம்மாவுக்கு பிடிக்காது. என் முகத்துல முழிக்க கூடாதுன்னு சொல்லி இருக்காங்க. எனக்கு சாப்பாடே அவங்க வீட்டு செருப்பு வைக்கற இடத்துலதான்ப்பா போட்டாங்க. அவங்க எப்படிப்பா என்னை மருமகளா பார்ப்பாங்க. அஞ்சலி கூட என்னை பொறாமையா பார்ப்பாப்பான்னு சொல்றா.

 உங்க இஷ்டம்

உங்க இஷ்டம்

இவ்ளோ நேரம் நீ பேசினேல்ல.. இப்போ நான் பேசறேன்.. அவருக்கு அவங்க அம்மாவைப் பத்தி தெரியாதா..அவர் எடுத்த முடிவு சரியாத்தானே இருக்கும். அதை அவர் பார்த்துக்குவார்.. நீ என் பேச்சை கேளுன்னு சொல்றார். சரிப்பா உங்க இஷ்டம்னு சொல்றா கண்ணம்மா.

குற்ற உணர்ச்சி

குற்ற உணர்ச்சி

கண்ணம்மா ஒரு குழந்தையை எடுத்து கொஞ்ச, அப்பாவுக்கு குற்ற உணர்ச்சியா இருக்கு. குழந்தைன்னா இவ்ளோ உசிரா இருக்காளே.. குழந்தை பிறக்காதுன்னு தெரிஞ்சா என்ன கஷ்டப்படுவாளோ தெரியலையேன்னு சொன்னவர், இவ்ளோ நல்ல மாப்பிள்ளை கிடைக்கறது கஷ்டம். இந்த ஆணடவன் சன்னதியில் அந்த உண்மையை மறைக்க போறேன்னு மனசுக்குள்ள சொல்லிக்கறார்.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+