அண்ணா சீரியலில் இருந்து விலகிய நடிகை.. வெளிப்படையான விளக்கம்.. இனி அவருக்கு பதில் யார் தெரியுமா?
சென்னை: ஜீ தமிழில் அண்ணா சீரியல் இரவு 8:30 மணிக்கு ஒளிபரப்பாகி வருகிறது. இந்த சீரியலில் கதாநாயகனாக மிர்ச்சி செந்திலும் அவருக்கு ஜோடியாக நடிகை நித்யா ராமும் நடித்து வருகிறார்கள். நடிகை நித்யா ராம் ஏற்கனவே சன் டிவியில் ஒளிபரப்பான நந்தினி சீரியல் மூலம் பிரபலம் அடைந்தவர்தான்.
அதுபோல இந்த சீரியலில் மேலும் பூவிலங்கு மோகன், ரோசரி, சத்யா, சுனிதா என பலர் முக்கிய கேரக்டரில் நடித்து வருகிறார்கள். சண்முகத்தின் அம்மா காணாமல் போன பிறகு தன்னுடைய தங்கைகளுக்கு அப்பாவாகவும், அம்மாவாகவும் இருந்து குடும்பத்தை கட்டி காத்து வரும் சண்முகம் தான் இந்த சீரியலில் கதாநாயகன் மிர்ச்சி செந்தில். அவருக்கு இந்த சீரியலில் நான்கு தங்கைகள் இருக்கின்றனர்.

அதில் நான்கு தங்கைகளில் ஒருவராக வீரா கேரக்டரில் அயலி வெப் சீரிஸ் மூலமாக பிரபலமான நடிகை தாரா நடித்து வந்தார். அவருக்கு சத்தியா ராகம் சீரியலில் கதாநாயகியாக நடிக்க வாய்ப்பு கிடைத்ததும் அவர் இந்த சீரியலில் இருந்து விலகினார். அவருக்கு பதிலாக தொகுப்பாளினியாக வலம் வந்த தர்சு நடித்து வருகிறார். இந்த நிலையில் அவரும் தற்போது, “தவிர்க்க முடியாத காரணங்களால் தன்னுடைய குடும்பத்துடன் இருக்க வேண்டிய கட்டாயத்தினால் நான் இந்த சீரியலில் இருந்து விலகப் போகிறேன்” என்று தன்னுடைய இன்ஸ்டாகிராம் பக்கத்தில் போஸ்ட் போட்டு விளக்கம் கொடுத்திருக்கிறார்.
அதைத்தொடர்ந்து ரசிகர்கள் பலரும் அண்ணா சீரியலில் தர்ஷுவை ரொம்பவே மிஸ் பண்ணுகிறோம் என்று கூறுகிறார்கள். அதே நேரத்தில் வீரா கேரக்டரில் புதியதாக நடிக்க உள்ள நடிகைக்கும் வாழ்த்துக்கள் தெரிவித்து வருகிறார்கள். அதுபோல இனி யார் புதிய வீராவாக நடிக்கப் போகிறார்கள் என்ற கேள்வி ரசிகர்கள் மத்தியில் எழுந்திருக்கிறது. அது வேறு யாரும் இல்லை ஜீ தமிழ் ரசிகர்களுக்கு ரொம்பவே பரிச்சயமான நபர் தான் வீரா கேரக்டரில் நடிக்க போகிறாராம்.

என் மனைவி நடிகர் "ராஜ்கிரண்" மகள் தான்! காதல் சரவணன் உடைத்த ரகசியம்.. காதலால் தொடரும் பந்தம்
அது ஜீ தமிழ் டான்ஸ் ஜோடி டான்ஸ் நிகழ்ச்சியில் போட்டியாளராக விவேக் மற்றும் கௌரி ஜோடியாக கலந்து கொண்டிருக்கிறார்கள். இந்த ஜோடி இந்த நிகழ்ச்சியில் பைனலிஸ்ட் ஆகவும் தேர்வாகி இருக்கிறார்கள். இவர்கள் இந்த சீசனில் டைட்டில் வின்னர் ஆவதற்கும் சான்ஸ் இருக்கிறது. அதே நேரத்தில் வரும் ஞாயிற்றுக்கிழமை ஃபைனல் ஒளிபரப்பாக இருக்கிறது.
இந்த நிலையில் கௌரி தான் முதல்முறையாக நடிகையாக இந்த சீரியலில் களம் இறங்க இருக்கிறார் என்று கூறப்படுகிறது. இதுவரைக்கும் டான்ஸர் ஆக இருந்த கௌரி அண்ணா சீரியலில் மூலமாக வீரா கேரக்டரில் தர்ஷுவை ரீப்ளேஸ் பண்ணி நடிக்க இருக்கிறார் என்று கூறப்படுகிறது. இது குறித்த அபிசியல் அப்டேட் இன்னும் வெளியாகவில்லை. ஆனால் இன்னும் ஒரு சில நாட்களுக்குள் கௌரி தெரிவிப்பார் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இது குறித்து உங்களுடைய கருத்து என்ன என்பது சொல்லிட்டு போங்க.












Click it and Unblock the Notifications