என் மனைவி நடிகர் “ராஜ்கிரண்” மகள் தான்! காதல் சரவணன் உடைத்த ரகசியம்.. காதலால் தொடரும் பந்தம்
சென்னை: நடிகர் காதல் சரவணன் நடிகர் "ராஜ்கிரண்" பற்றி சில விஷயங்களை பகிர்ந்து இருக்கிறார். "மஞ்சப்பை" திரைப்படத்தில் தாங்கள் இருவரும் ஒன்றாக நடிக்கும் போது ஏற்பட்ட அனுபவங்கள் குறித்தும் காதல் சரவணன் வெளிப்படையாக பேசியிருக்கிறார்.
அந்த வகையில் காதல் சரவணன் பல திரைப்படங்களில் சின்ன சின்ன கேரக்டரில் நடித்திருந்தாலும் அவருக்கென்று ஒரு அடையாளத்தை கொடுத்தது "மஞ்சப்பை" திரைப்படம் தான். மஞ்சப்பை திரைப்படத்தில் நடிகர் ராஜ்கிரணின் பக்கத்து வீட்டு நபராக நடித்திருப்பார். அந்த திரைப்படத்தில் தான் அதிகமான காட்சிகளில் அவர் நடித்திருந்தார். இப்படியான நிலையில் சமீபத்தில் ஒரு பேட்டியில் தன்னுடைய சினிமா வாழ்க்கை மற்றும் குடும்ப வாழ்க்கை குறித்து பல விஷயங்களை பகிர்ந்து இருக்கிறார்.

அதில் தான் உடலில் குறைபாடு உள்ள மலர் என்பவரை காதலித்து திருமணம் செய்திருந்தேன். எங்களுடைய காதல் வாழ்க்கை எப்படி தொடங்கியது என்பதை பற்றி பேசி இருந்தார். அதாவது தன்னுடைய நண்பருக்கு பொண்ணு பார்க்க போயிருந்த நிலையில் அந்த நபர் அந்த பெண்ணை வேண்டாம் என்று சொல்லி விட்டதால் மன வருத்தத்தில் அந்த பொண்ணு எனக்கு போன் பண்ணி நான் உடல் குறைப்பாடால் ஏற்கனவே கஷ்டத்தில் இருக்கிறேன்.
கடவுள் தான் என்னை கஷ்டப்படுத்துகிறார் என்றால் நீங்களுமா இப்படி கஷ்டப்படுத்துறீங்க? நீங்களும் அந்த மாப்பிள்ளை கூட வந்தவங்க தானே என்று என்னிடம் கேள்வி கேட்டாங்க.. அது என்னுடைய மனசை ரொம்ப கஷ்டப்படுத்தியது. அதனால நான் உங்களை கல்யாணம் பண்ணிக்கிறேன்னு சொன்னேன். அதோட எனக்கு அந்த பெண்ணின் தைரியமும் மனசும் பிடிச்சு இருந்தது. அதனால் நாங்கள் இரண்டு வீட்டில் சம்மதம் இல்லாமல் தான் திருமணம் செய்தோம் என்று கூறியிருந்தார்.
அதைத் தொடர்ந்து அவர் பேசுகையில் நான் மஞ்சப்பை திரைப்படத்தில் நடித்துக் கொண்டிருக்கும் போது என்னுடைய மனைவியும் சூட்டிங் பார்ப்பதற்காக அங்கு வந்திருந்தார். அப்போது ராஜ்கிரண் என்னைப்பற்றி விசாரித்திருக்கிறார். மஞ்சப்பை திரைப்படத்தின் கதையை கூட நான் தான் இயக்குனரிடம் விவரித்து பேர் சொல்லிக் கொண்டிருந்தேன். அதை பார்த்து தான் என்னை யார் என்று ராஜ்கிரண் விசாரித்து இருக்கிறார்.
பிறகு என்னை கேரவனுக்கு வர சொல்லி கூப்பிட்டு இருந்தார். நானும் அங்கே போன போது அவர் என்னிடம், எப்படி சரவணா இப்படி ஒரு முடிவு எடுத்த என்று கேட்டார். எனக்கு என்ன கேட்கிறார் என்று புரியவில்லை. அதற்கு நான் என்ன சார் என்று மீண்டும் கேட்டபோது, நான் என் பொண்ணை பார்த்தேன் என்று சொன்னார். அவர் பொண்ணு என்று சொன்னது என்னுடைய மனைவி தான்.
எனக்கு ரொம்ப சந்தோஷமாக இருந்தது, நீ இப்படி ஒரு முடிவெடுத்து இருப்பது உண்மையில் பாராட்டக்கூடியது என்றார். எனக்கு என்ன சொல்வது என்று தெரியவில்லை. இருந்தாலும் நான் அவரிடம் சார் இதில் ஒன்னும் பெரியதாக இல்லை. எனக்கு அவளை பிடித்திருக்கிறது நாங்கள் காதலித்து தான் திருமணம் செய்திருக்கிறோம் என்று சொன்னேன்.
அதற்கு அவர் சினிமா துறையில் இருந்து நீ இப்படி ஒரு பெண்ணை திருமணம் செய்து இருப்பது உண்மையில் பாராட்டக்கூடியது என்று சொன்னார். அதற்கு பிறகு எப்போது எனக்கு போன் போட்டாலும் என்னுடைய பொண்ணு எப்படி இருக்கா? பேரக்குழந்தைங்க எப்படி இருக்காங்க என்று தான் விசாரிப்பார். அதுபோல ஒரு முறை அவருடைய வீட்டிற்கு கூப்பிட்டு எங்களுக்கு புது துணி எல்லாம் எடுத்து தந்து விருந்து வைத்து அனுப்பி வைத்தார்.
அதுபோல அவருடைய வீட்டில் எந்த விசேஷம் நடந்தாலும் முதல் அழைப்பு எங்களுக்கு வந்துவிடும். கூப்பிடும் போது கண்டிப்பா பொண்ணு பேர பிள்ளைங்களோடு வரணும் என்று சொல்லுவார். நாங்களும் அடிக்கடி போயிட்டு வருவோம். மஞ்சப்பை திரைப்படத்திற்கு பிறகு எனக்கும் அவருக்கும் நெருங்கிய நட்பு உருவானது. ஆனாலும் என்னுடைய மனைவி மற்றும் குடும்பத்தையும் அவர் தன்னுடைய குடும்பமாக தான் பார்க்கிறார் என்று காதல் சரவணன் பகிர்ந்து இருக்கிறார்.
-
கூட்டுறவு வங்கி தங்க நகை கடன் + மகளிர் உரிமை தொகை! கனிமொழி பிரம்மாஸ்திரம்! ஸ்டாலின் முக்கிய முடிவு -
தேசிய ஜனநாயக கூட்டணியில் விஜய்.. நெருங்கும் பேச்சுவார்த்தை.. ஒரே வார்த்தையில் உடைத்த சரத்குமார் -
சீனியர் பெண்ணுடன் உறவில் இருக்கும் இஷான் கிஷன்.. அகமதாபாத் மைதானத்தில் காதலை அறிவித்த பாக்கெட் டைனமோ -
பிரதமர் மோடி ராஜினாமா செய்ய நேரிடும்.. எனக்குத் தெரிந்த தகவல்களை சொன்னால்..சுப்பிரமணியன் சுவாமி பதிவு -
EXCLUSIVE: வட இந்தியர்களுக்கு வேலையில்லை.. இனி இட்லி, சப்பாத்தி மட்டும் தான்! குமுறும் ஓட்டல் உரிமையாளர்கள்.! -
ஒரு குண்டு கூட வீசாமல்.. அமெரிக்காவை காலி செய்யும் சீனாவின் "ரகசிய" ஆயுதம்.. ஆட்டம் மொத்தமா மாறுது -
கேஸ் சிலிண்டர் தட்டுப்பாடு.. கோவை அன்னபூர்ணா ஹோட்டலில் குறைக்கப்பட்ட உணவுகள் -
வருது "செயற்கை" தங்கம்.. கோல்ட் விலை தாறுமாறாக சரிய இதுதான் காரணமா? வெளியான மிக முக்கிய தகவல் -
7 பொதுத்தொகுதி + 2 தனித்தொகுதி.. அதிமுக கூட்டணியில் டிடிவிக்கு ஒதுக்கப்படும் தொகுதிகள் இதுதான்! -
தப்பா எடுத்துக்காதீங்க.. விஜயிடம் சொன்ன ராகுல்.. பாஜக பக்கம் தவெக போக.. இப்படி ஒரு ஷாக் காரணமா? -
29 + 9.. அதிமுக கூட்டணியில் பாஜக - அமமுகவுக்கு எத்தனை சீட்? இறங்கி வராத எடப்பாடி பழனிச்சாமி -
உலக நாடுகளுக்கே மிகப்பெரிய ஆபத்து.. நிலைமை கையை மீறி போகுது.. ரஷ்யா புதின் தந்த 'ஷாக்' வார்னிங்












Click it and Unblock the Notifications