அண்ணாச்சி செய்த செயலால் பொங்கி எழுந்த எதிர் அணியினர்... விளையாட்டே மாறி போச்சு
சென்னை: ஜெயிக்க வேண்டும் என்பதற்காக அண்ணாச்சி செய்த செயல் விளையாட்டை மாற்றி விட்டது.
அண்ணாச்சி பிள்ளையார் சுழி போட்டதும் எதிரணியினர் ஏடாகூடமாக விளையாட்டை முடித்து விட்டார்கள்.
பிரச்சனையை தொடங்கிய அண்ணாச்சி அமைதியாக மாறிவிட்டார் என்று நெட்டிசன்கள் கலாய்த்து வருகின்றனர்.

விளையாட்டு மாறிப்போச்சு
பிக் பாஸ் நிகழ்ச்சியில் ஒரு சில நேரங்களில் விளையாட்டு விபரீதம் ஆக மாறிவிடுகிறது. தற்போதுகூட செண்பகமே செண்பகமே என்னும் டாஸ்கில் எதார்த்தமாக அண்ணாச்சி செய்த செயல் விளையாட்டை மட்டுமல்லாமல் ரசிகர்களின் மனதையும் குழப்பி விட்டது. அட என்ன இவர் இப்படி எல்லாம் பண்ணி இருக்கிறார் என்று அவருடைய ரசிகர்களே தற்போது ஃபீல் பண்ணி வருகின்றனர்.

பிக்பாஸில் இமான் அண்ணாச்சி
பிக்பாஸ் நிகழ்ச்சி என்றாலே அதில் டாப்பில் இருக்கும் போட்டியாளர்கள் நொடிப்பொழுதில் சரிந்து விடுவதும், கடைசி இடத்தில் இருக்கும் போட்டியாளர்கள் பல நேரங்களில் ரசிகர்களின் மனதை கவர்ந்து விடுவதும் பொதுவான ஒன்றுதான். இது வழக்கமாக நடைபெற்றுக் கொண்டிருந்தாலும் தற்போது ஐந்தாவது சீசனிலும் நடைபெற்று வருகிறது. இதில் பலருக்கும் பரிச்சயமான காமெடி நடிகராக இருக்கும் இமான் அண்ணாச்சி ஒரு போட்டியாளராக அறிமுகமாகியிருக்கிறார்.

ரசிகர்களை புலம்ப வைக்கும் கருத்து
இமான் அண்ணாச்சிக்கு ஆரம்பத்திலிருந்தே போட்டியாளர்கள் அதிகமாக இருந்து வருகின்றனர். இவருடைய வயது மற்றும் மெச்சூரிட்டி காரணமாக இவர் எடுக்கும் முடிவுகள் சரியானதாக இருக்கும் என்று ரசிகர்கள் ரொம்பவே நம்பிக் கொண்டிருந்தனர். இந்த நேரத்தில் இவர் செய்யும் ஒரு சில செயல்கள் ரசிகர்களை குழப்பம் அடையச் செய்திருக்கிறது. இசைவானியிடம் இவர் நடந்து கொள்ளும் முறையாக இருந்தாலும் சரி, ஒரு சில நேரங்களில் கருத்து தெரிவிக்கிறேன் என்று இவர் ஏதாவது பேசி விடுவதால் அது பிரச்சினையை கிளப்பி விடுகிறது. பிறகு மன்னிப்பு கேட்டு அந்த பிரச்சனையை அப்படியே முடித்து விடுகிறார்.

அணிக்கு வினையாக மாறிடிச்சு
நேற்றைய டாஸ்க் நிகழ்ச்சியில் கூட பொம்மை கறவை மாடில் இருந்து அனைத்து போட்டியாளர்களும் பாலை பிடித்து தங்களுடைய அணிக்கு சார்பாக இருக்கும் பெட்டிக்குள் பாதுகாத்துக் கொண்டிருக்கும் போது, இவர் எதிரணியில் இருக்கிற ஒரு பாட்டிலை எடுத்து வந்துவிட்டார். இதை பார்த்த எதிரணியினர் இவர் அணியின் மீது தங்களுடைய கோபத்தை முழுமையாக காட்டி விட்டனர். அதுவரைக்கும் கஷ்டப்பட்டு போட்டிபோட்டு
பால் டப்பாக்களை சேகரித்துக்கொண்டு வைத்திருந்ததையெல்லாம் எதிரணியில் இருந்த நிரூப் உதவியோடு போட்டியாளர்கள் அனைத்தையும் அள்ளிக் கொண்டு சென்றுவிட்டனர். இதைப் பார்த்ததும் நெட்டிசன்கள் அண்ணாச்சி ஆரம்பித்து வைத்த விளையாட்டு அவர் அணிக்கு விணையாக மாறிவிட்டது என்று கூறி வருகின்றனர்.
-
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
தாய் பத்திரம் தொலைஞ்சிருச்சா? ஆன்லைனில் ஈஸியாக ஒரிஜினலை மீட்க 6 ஆவணங்கள் என்ன? சிம்பிள் ஸ்டெப்ஸ் -
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
எல்பிஜி சிலிண்டர் பயன்படுத்துபவர்களுக்கு..நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள்! PNGக்கு மாற்றம் கட்டாயம்? -
ஆள் மட்டுமில்லை.. கட்சியையே தவெகவில் இணைக்கும் புகழேந்தி.. புஸ்ஸி - செங்கோட்டையனுடன் சந்திப்பு -
அரசியலுக்கு முழுக்கு.. திமுக பொதுச்செயலாளர் பதவியில் இருந்து விலகும் துரைமுருகன் -
பிறந்தநாளன்று புதிய கட்சி அறிவிப்பு? பாஜக மேலிடத்திடம் டைம் கேட்ட அண்ணாமலை.. ரகசிய மூவ்! -
8-வது ஊதியக் குழு அப்டேட்! சாதாரண ஊழியருக்கு 1.5 லட்சம்.. மத்திய அரசு ஊழியர்களுக்கு குஷி -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
பனையூர் பாபுவுக்கு ஸ்கெட்ச்! அடுத்து ஆளூர் ஷாநவாஸை நோக்கி குரைக்கிறார்கள்! சிந்தனைச் செல்வன் -
தந்தை இறப்பில் நடந்தது மீண்டும் வேண்டாம்.. தாயார் மறைவில் அஜித் குடும்பம் எடுத்த முடிவு! வருத்தத்தில் ரசிகர்கள் -
முக்கோணப் போட்டியில் தமிழ்நாடு.. 112 ஐ நெருங்கும் விஜய்? மாஸ் கம்பேக்கில் திமுக.. பதற்றத்தில் அதிமுக












Click it and Unblock the Notifications