பாட்ஷாவை விடுங்க! அண்ணாமலையில் ஜெயலலிதாவுக்கு எதிராக ரஜினி பேசிய வசனம்? கே.பி. எழுதி தந்ததாமே!
சென்னை: பாட்ஷா பட வெளியீட்டு விழாவில் முன்னாள் அமைச்சர் மறைந்த ஆர்.எம்.வீரப்பன் முன்னிலையில் மாஸ் காட்டிய ரஜினிகாந்த், தனது அண்ணாமலை படத்திலும் முன்னாள் முதல்வர் மறைந்த ஜெயலலிதாவை விமர்சித்து ஒரு வசனத்தை வைத்ததாக சொல்லப்படுகிறதே உண்மையா?
இதுகுறித்து செல்வன் அன்பு என்பவர் பேஸ்புக் பக்கத்தில் கூறியிருப்பதாவது: ஒரு Goosebump காட்சி....

அசோக் சங்கத் தலைவர் நாற்காலியில் கெத்தா உட்கார்ந்திருக்கார். இன்னும் கொஞ்ச நேரத்தில் தேர்தல் முடிவுகள் அறிவிக்கப் போறாங்க. அங்கே உட்கார்ந்திருந்த ஒருத்தர் 'அசோக்...அட்வான்ஸ் கங்கிராஜுலேஷன்ஸ்' சொல்றார். அறிவிப்பு வருது...
"நீங்க ஆவலுடன் எதிர்பார்த்த சங்கதேர்தல் முடிவுகள் வந்துவிட்டது. அதிக வாக்குகள் பெற்று நமது சங்கத்தின் புதிய தலைவராக தேர்ந்தெடுக்கப்பட்டவர் திரு.அண்ணாமலை அவர்கள்..."
அப்படியே லிப்ட்டோட இரண்டு கதவும் விலக...ரஜினி நடந்து வருவதை சரத்பாபு விக்கித்துப் பார்க்க.... அடடா... Goosebumps...
ராஜா, எம்.எஸ்.வி, சந்திரபோஸ், ரஹ்மான்னு எத்தனை பேர் ரஜினிக்கு இசையமைத்திருந்தாலும் இது தான் நம்பர் ஒன்... இது மாதிரி ஒரு இசை தரும் Goosebumps வேற கிடையாது... சபாஷ் தேவா சார்....
அண்ணாமலை படத்தை வசந்த் இயக்குவதாக இருந்து ஷுட்டிங்குக்கு இரண்டு நாள் முன்னாடி விட்டுட்டு ஓடிட்டாரு பிழைக்கத் தெரியாத வசந்த்.
சுரேஷ் கிருஷ்ணா உள்ளே வந்ததும் கதையே கிடையாது. Kane and abel கதையிலிருந்து எடுக்கப்பட்ட ஏழை, பணக்கார கேரக்டர்கள்... Khudgarz சத்ருக்கன் படத்தின் கதையும் தான் இருந்தது. சுரேஷ் தன் மனைவி சந்திராவை அசிஸ்டண்ட் இயக்குனராக்கி காட்சிகளை டிஸ்கஸ் செய்து உருவாக்கினார். வசனம் எழுதிய சண்முகசுந்தரம் என்பவரை ரஜினியே கே.சி.பொக்காடியா யூனிட்டில் பணியாற்றிக் கொண்டிருந்தவரை அழைத்து எழுத வைத்தார்.
ரஜினியை அடித்து ஹோட்டலை விட்டு வெளியே தள்ளும் போது ரஜினி வசனம் பேசுவதாகத்தான் காட்சி அமைத்திருந்தார் சுரேஷ். ரஜினியோ அடுத்த காட்சியில் மிகப் பெரிய டயலாக் சீன் இருக்கும் போது எடுபடாது என சொல்லி ஜனகராஜ் பேசுவதாக காட்சி எடுங்க எனச் சொல்ல ஜனகராஜ் 'நன்றிகெட்ட நாய்ங்களா'ன்னு பேசும் காட்சி படமாக்கப்பட்டது.
படத்தில் ரஜினியின் நடிப்பு அக்காட்சியில் அற்புதமாக இருந்தது. வினுச்சக்ரவர்த்தி மாட்டை கட்டியதும் சண்டை வரும். சண்டைக் காட்சிக்குப் பின்பு ரஜினி பேசும் 'என் பாட்டுக்கு என் வேலையை பார்த்துக்கிட்டு சிவனேன்னு போயிட்டிருக்கேன்'னு பேசும் அந்தக்காட்சி வசனங்கள் பாலச்சந்தர் எழுதிக்கொடுத்தது.
அவர் எழுதணும்னு ஆசைப்பட்டதும் ரஜினி தான். அன்று ஜெயலலிதாவுக்கு எதிராக பேசப்பட்டதாக ரசிகர்களால் கொண்டாடப்பட்டது. ரஜினி கேரியரில் அபூர்வராகங்கள் டு பில்லா, பில்லா டு அண்ணாமலை, அண்ணாமலை டு தர்பார் எனப்பிரிக்க வேண்டிய மைல்கல் படம்.
அண்ணாமலை வெற்றி பெற்றதும் அதை தெலுங்கில் 'கொண்டப்பள்ளி ராஜா' என எடுத்தார்கள். வெங்கடேஷ், சுமன், நக்மா நடித்தனர். அண்ணாமலை வயதாகி மகள் வரும் போர்ஷனை தெலுங்கில் நீக்கி விட்டனர். சுமன் தம்பியாக நடிகர் ஸ்ரீகாந்த்தை போட்டு வெங்கடேஷ் தங்கை அவரை காதலிப்பதாக மாற்றி இருந்தனர். அதனால் அப்படம் தந்தை சென்டிமெண்ட் காட்சிகள் இல்லாது தோல்வி அடைந்தது.
படத்தின் மற்றொரு சிறப்பு சுரேஷ் கிருஷ்ணா உருவாக்கிய Super star logo...செம மாஸ் அது.... அதன் பிறகு எத்தனையோ நடிகர்கள் உருவாக்கினார்கள். இந்த மாஸ் வரவில்லை...
பாடல்கள் தேவா...வெற்றி நிச்சயம் பாட்டு செம... வந்தேன்டா பால்க்காரன் நடனம் பிரபுதேவா அமைத்தது. அவர் ஐடியா தான் ஸ்லோமோஷனில் ரஜினி முகத்தை காட்டுவது... அண்ணாமலை மறக்க முடியாதப் படம்... இவ்வாறு செல்வன் அன்பு தெரிவித்திருந்தார்.
பாட்ஷாவுக்கு பிறகு நடந்தது என்ன?: 1995-ஆம் ஆண்டு பாட்ஷா திரைப்படத்தின் வெற்றி விழாவில் பேசிய ரஜினி தமிழகத்தில் வெடிகுண்டு கலாச்சாரம் அதிகரித்துவிட்டதாகவும் கூறியிருந்தார். அப்போது அந்த விழாவில் படத்தின் தயாரிப்பாளரும் அமைச்சராகவும் இருந்த ஆர் எம் வீரப்பன் ரஜினியின் கருத்தை கண்டிக்கவில்லை என கூறி அவரை பதவியிலிருந்து நீக்கினார் ஜெயலலிதா.
ரஜினிகாந்த் - ஜெயலலிதா இடையே மோதல் போக்கு இருந்து வந்தது. அப்போது ஜெயலலிதா வீடு அருகே ரஜினியின் கார் வரும் போது அந்த காரை சோதனையிடுவது உள்ளிட்டவை நடத்தப்பட்டன. அது போல் முத்து திரைப்படத்திலும் அவர் பேசிய வசனமான நான் எப்போ வருவேன் எப்படி வருவேன்னு யாருக்கும் தெரியாது வர வேண்டிய நேரத்தில் கரெக்ட்டா வருவேன் என்ற வசனம் அரசியல வருகைக்கான சமிக்ஞையாகவே பார்க்கப்பட்டது.
பெரிதும் எதிர்பார்க்கப்பட்ட நிலையில் 1996-ஆம் ஆண்டு பொதுத் தேர்தலில் திமுக -தமிழ் மாநில காங்கிரஸ் கூட்டணிக்கு தனது ஆதரவை தெரிவித்தார். அப்போது அதிமுகவுக்கு வாக்களித்தால் தமிழகத்தை யாராலும் காப்பாற்ற முடியாது என கூறியது பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியது. இதையடுத்து ரஜினியின் வாய்ஸால் அந்த கூட்டணி அமோக வெற்றி பெற்றது.
-
4 தொகுதி இடைத்தேர்தலை புறக்கணிக்க திமுக முடிவு? ஸ்டாலினின் ராஜதந்திரம்! -
ஐடி ஊழியர்களை விட "இவர்கள்" காட்டில்தான் பணமழை! அடுத்த 5 ஆண்டுகளில் இந்தியாவில் ஏற்பட போகும் மாற்றம் -
விவசாயக் கடன் தள்ளுபடி.. பொய் சொல்லி ஏமாற்ற மாட்டேன்! விவசாயிகளே கவலைப்படாதீங்க.. விஜய் உத்தரவாதம் -
வளைகுடாவில் இந்தியாவிற்கு கிடைத்தது மாற்றுப்பாதை.. ஓமனால் பெரிய குட்நியூஸ் -
கட்டப்பா கூட ஒரு டைம்தான் குத்துனாரு.. இப்படி தினம் தினம் பண்ணுறீங்களே! கோபத்தின் உச்சியில் ஸ்டாலின் -
DMART முதலாளிக்கு இப்படியொரு பிஸ்னஸ் இருக்கா.. ஒரு வீட்டுக்கு ரூ.27.5 லட்சம் .. ஆடிப்போன மும்பை மக்கள்! -
தமிழக அமைச்சரவையில் சீனியாரிட்டி லிஸ்ட்.. பின் தள்ளப்பட்ட செங்கோட்டையன்.. வன்னி அரசுக்கு எந்த இடம் -
உதயசூரியனில் போட்டியிட்ட 2 மதிமுக எம்எல்ஏக்கள் ராஜினாமா செய்ய முடிவு? திமுகவுக்கு பெருத்த ஷாக்! -
MDMK: எம்எல்ஏக்கள் ராஜினாமா இல்லை.. புது வியூகம் எடுக்கும் மதிமுக? திமுகவுக்கு கல்தா கன்பார்ம்? -
ஆனானப்பட்ட அமெரிக்காவுக்கே இந்த நிலைமையா..? அப்போ இந்தியா? -
அண்ணாமலை ஒரு பிராண்டு.. விட்றாதீங்க! லெட்டரைப் பார்த்ததும் பதறிப் போன டெல்லி! குவியும் ஆஃபர்கள்! -
கோட்டைச்சாமி.. எந்திரி.. இப்போ நீதான் முதலமைச்சர்.. இன்னமும் பிரச்சாரமா? விஜய்யை கிண்டலடித்த திமுக












Click it and Unblock the Notifications