For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

"ஆமை" வேக சந்திரகுமாரி சீரியலில் "அண்ணாமலை"யும் எட்டி பார்க்கறாங்களே!

Google Oneindia Tamil News

சென்னை: சன் டிவியின் சந்திரகுமாரி சீரியல் இப்போதைக்கு அப்பா மகள் சென்டிமென்ட்ல போயிகிட்டு இருக்கு.

கதை ஒண்ணும் பெரிசா இல்லை, கதை நகர்வதும் ஆமை வேகத்துலதான் இருக்கு. இதெல்லாம் ராதிகா சீரியல்களில் வழக்கமா இருக்காது.
திடீர்த் திருப்பங்கள்னு அதை இதை செய்து கொஞ்சம் சீரியலை பரபரப்பாக்குவாங்க. அது இதுல மிஸ்ஸிங்.

Annamalai style story enters into Chandrakumari

எல்லா சீரியல்களிலும் ராதிகா யாருக்காவது அடைக்கலம் தர்றது.. யாரையாவது வளர்க்கறதுன்னு இருக்கும். அவங்களே பின்னால இவங்களுக்கு எதிரா மாறுவதுன்னும் கூட கதை இருக்கும்.

Annamalai style story enters into Chandrakumari

அண்ணாமலை சீரியலில் ராதிகா 3 பொம்பளைப் புள்ளைங்களை வளர்ப்பாங்க. கூட கடைசியா தனக்கு பிறந்த ஒரு பெண் குழந்தைன்னு அந்த வீட்டுல நாலு பொண்ணுங்க வளரும். அண்ணாமலையை அம்மான்னு கூப்பிட்டுக்கிட்டு.

ஏன் சின்னவரே.. மூக்குத்தியை வாங்கியாந்துட்டீங்க.. அப்படியே.. முத்துச்செல்வி கேடியாச்சே! ஏன் சின்னவரே.. மூக்குத்தியை வாங்கியாந்துட்டீங்க.. அப்படியே.. முத்துச்செல்வி கேடியாச்சே!

அதே போல சந்திரகுமாரி சீரியலில் சந்திராவை ருத்ரா அடிச்சு போட்டு செத்துட்டாங்கன்னு நினைச்சு மூட்டையில் கட்டி தூக்கிப் போட்டுட சொல்றா. ஆனா, மூட்டையை வேறு ஊர்க்காரர் ஒருத்தர் பிரிச்சு பார்க்க, சந்திரா உயிரோட இருக்காங்க.

Annamalai style story enters into Chandrakumari

அவங்களை அந்த பெரியவர் காப்பாத்தறார். அவருக்கு ரெண்டு பொண்ணுங்க. அதுல பெரிய பொண்ணை அந்த ஊர் பெரியவர் போர்வையில் இருக்கற பொறுக்கி கல்யாணம் செய்துக்க விருப்பப்பட்டு வேலைகளை பார்க்கறார்.

அந்த பொண்ணுங்களை காப்பாத்தி தன் வீட்டுக்கு அழைச்சுட்டு வர்றாங்க சந்திரா. எனக்கு அஞ்சலி வேற நீங்க வேற இல்லை. மூணு பேரும் எனக்கு பொண்ணுங்கதான்னு சொல்றாங்க. இதுல சீதான்ற பொண்ணு, அஞ்சலி அப்பாவையும் அப்பான்னு கூப்பிடுது. சோ, இந்த கதையில அண்ணாமலையும் எட்டிப் பார்க்கறாங்கதானே...

English summary
Sun TV's Chandrakumari serial is now available for father's daughter Sentiments.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X