விவாகரத்து பிரச்சனை.. ஏ.ஆர். ரஹ்மானுக்கு சப்போர்ட் செய்து அக்கா வெளியிட்ட போஸ்ட்
சென்னை: இசையமைப்பாளர் ஏ.ஆர் ரஹ்மான் அவருடைய மனைவி சாய்ரா பானுவை பிரிந்து விட்டதாக நேற்று முன்தினம் அறிக்கை வெளியிட்டிருந்தனர். இந்த நிலையில் ஏ.ஆர் ரஹமானின் சகோதரியும், இசையமைப்பாளர் ஜிவி பிரகாஷின் அம்மாவுமான ரைஹானா பதிவு ஒன்றை வெளியிட்டு இருக்கிறார்.
சமீபகாலமாக யாரும் எதிர்பார்க்காத வகையில் பல பிரபலங்கள் அடுத்தடுத்து விவாகரத்து செய்தியை அறிவித்து வருகிறார்கள். அதிலும் இவர்கள் எல்லாம் மகிழ்ச்சியான தம்பதிகள் என்று நினைத்து இருந்த பல தம்பதிகள் தங்களுடைய விவாகரத்து செய்தியை சொல்லி ரசிகர்களை அதிர்ச்சி அடைய வைத்திருக்கிறார்கள்.

அதிலும் நடிகை சமந்தா காதலித்து திருமணம் செய்த நாக சைதன்யாவை பிரிவதாக அறிவித்திருந்தார் பிறகு இருவருக்கும் விவாகரத்தும் நடைபெற்று விட்டது. இன்னும் சில நாட்களில் நாக சைதன்யா அடுத்த திருமணம் செய்ய இருக்கிறார். அதுபோல தனுஷ், ஐஸ்வர்யா ரஜினிகாந்த் இருவரும் பிரிவதை அறிவித்து இருந்தனர். அதைத்தொடர்ந்து இப்ப வரைக்கும் இவர்களுடைய விவாகரத்து வழக்கு நீதிமன்றத்தில் நடந்து கொண்டிருக்கிறது.
அதுபோல ஜெயம் ரவி அவருடைய மனைவியை பிரிவதாக அறிவித்திருந்தார். ஜிவி பிரகாஷ் அவர் மனைவி சைந்தவியை பிரிவதாக அறிவித்திருந்தார். இந்த நிலையில் யாரும் எதிர்பார்க்காத வகையில் கடந்த செவ்வாய்க்கிழமை ஆஸ்கார் விருது பெற்ற இசையமைப்பாளர் ஏ.ஆர் ரஹமானை பிரிவதாக அவருடைய மனைவி சாய்ரா பானு சார்பாக வழக்கறிஞர் அறிவித்து இருந்தார்.

இந்த செய்தி வெளியான சில மணி நேரத்தில் ஏ.ஆர் ரஹ்மான் இந்த செய்தியை உறுதிப்படுத்தி இருந்தார். அதுபோல ஏ.ஆர் ரஹ்மானின் மகன் எங்களின் குடும்ப சூழ்நிலையை புரிந்து கொண்டு எங்களுக்கு ப்ரைவசி தாருங்கள் என்று கூறியிருந்தார். அதுபோல ஏஆர் ரஹ்மான் வெளியிட்ட பதிவை அவருடைய மூத்த மகள் பகிர்ந்து கையெடுத்து கும்பிடுவது போன்ற ஒரு இமேஜை கொடுத்து இருந்தார்.
இந்த நிலையில் இவர்கள் இருவரும் மீண்டும் சேர்ந்து வாழ வேண்டும் இன்று ரசிகர்கள் பலரும் கருத்து தெரிவித்து வருகிறார்கள். பல பேட்டிகளிலும் நிகழ்ச்சிகளிலும் ஏ ஆர் ரஹ்மான் மற்றும் அவருடைய மனைவி இருவருமே அவ்வளவு காதலோடு பேசிக்கொள்வார்கள். ஆனால் இவர்கள் இந்த முடிவு எடுத்துவிட்டார்களே என்ற வருத்தத்தையும் வெளிப்படுத்தி வருகிறார்கள்.
அதே நேரத்தில் ஒரு சில ரசிகர்கள் ஏ.ஆர். ரஹ்மான் இந்த சூழ்நிலையில் இருந்து வெளியே சீக்கிரமாக மீண்டு வருவார் என்று அவருக்கு ஆறுதல் கொடுக்கும் வகையில் பதிவு வெளியிட்டு வருகிறார்கள். அப்படி ஒரு ரசிகர் போட்ட பதிவை தான் ஏ ஆர் ரஹ்மானின் அக்காவும் ஜிவி பிரகாஷின் அம்மாவுமான ஏ ஆர் ரைஹானா தன்னுடைய இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பகிர்ந்து இருக்கிறார்.

அதில், "சாதனையாளர்.. தனக்கு வந்த சோதனைகளை சாதனையாக மாற்றிய சரித்திர நாயகன். இந்த சோதனையும் கடந்து வருவார் என்று நம்புவோமாக" என்று இருக்கிறது. அதை ஷேர் செய்து இருக்கிறார். அதோடு "சில இதயங்கள் எப்போதும் அழகாக இருக்கும்" என்று அந்த பதிவுக்கு ரைஹானா கேப்ஷன் கொடுத்திருக்கிறார். இதற்கு அதிகமான ரசிகர்கள் லைக் கொடுத்து வருகிறார்கள்.
-
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
திமுகவிற்கு விஜய் சொன்ன 'நோ'.. ஸ்விட்ச் ஆப் ஆன போன்.. மேஜைக்கு வந்த உளவுத்துறை ரிப்போர்ட்! -
SP Velumani: வேலுமணிக்கு வில்லனாக மாறிய முனுசாமி.. பதவிக்கு விழுந்த வேட்டு! -
கொ*யில் முடிந்த பார் டான்ஸ்.. கொதித்துப் போன கோயம்பேடு! யான்சிக்கு இப்படியா சாவு வரனும்! ஷாக்! -
Annamalai New Party LIVE:தனிக் கட்சி தொடங்குகிறார் அண்ணாமலை? பிறந்தநாளன்று வெளியாகும் அப்டேட்? -
விஜய்க்கு பெரிய தலைவலி.. ஒரே நாளில் வீட்டுக்கு போன 5000 ஊழியர்கள் ஓய்வு! ஆட்டம் காணும் அரசு துறைகள் -
நான் பார்த்துகிறேன் நண்பா.. உறுதியாக சொன்ன விஜய்.. அஜித் தாய் மறைந்த இரவு.. நடந்தது என்ன? -
பிளாக் அண்ட் ஒயிட் கோட் சூட் அணிவது இதற்காகத் தான்.. ரகசியத்தை போட்டு உடைத்த விஜய்! -
காலியான ராஜ்யசபா எம்பி பதவி! இன்று வேட்புமனு தாக்கல் தொடக்கம்! தவெகவின் முதல் எம்பி யார்?












Click it and Unblock the Notifications