மன்னிப்பு கேட்கணும்! Ex மனைவி சொன்ன கதை! வாழ்க்கையை வேஸ்ட் பண்ணுறாங்க! ஏஆர் ரஹ்மான் உருக்கம்

Subscribe to Oneindia Tamil

சென்னை: இசையமைப்பாளர் ஏஆர் ரகுமான் சமீபத்தில் பேட்டியில் கலந்து கொண்டார். அப்போது தன்னுடைய ஹிட் பாடல்கள் குறித்தும் தன்னுடைய குடும்பத்தினர் குறித்தும் எமோஷனலாக பேசியிருந்தார். அதில் தான் மன்னிப்பு கேட்க வேண்டும் என்றால் என்னுடைய எக்ஸ் மனைவியிடம் தான் கேட்க வேண்டும். அதுபோல என்னுடைய குடும்பத்தினருக்காகவும் நான் நேரத்தை ஒதுக்கவில்லை அவர்களிடமும் மன்னிப்பு கேட்க வேண்டும் என்று பேசி இருந்தார்.

AR Rahman vijay tv

இசையமைப்பாளர் ஏஆர் ரகுமான் பிஹைன்உட்ஸ் youtube சேனலின் நிகழ்ச்சியில் கலந்து கொண்டிருந்தார். அப்போது டிடி பல்வேறு கேள்விகளை கேட்டிருந்தார். அதற்கு ஏ ஆர் ரஹ்மான் கலகலப்பாகவும் பேசிக் கொண்டிருந்தார். சில இடங்களில் தன்னுடைய வருத்தத்தையும் பகிர்ந்து இருந்தார். அப்போது ஏஆர் ரஹ்மான் இசையமைத்த மன்னிப்பாயா பாடல் குறித்து கேள்வி கேட்டிருந்தது. அதற்கு ஏஆர் ரஹ்மான் பேசும்போது நான் எல்லோரிடமே மன்னிப்பு கேட்க விரும்புகிறேன் என்று சிரித்துக்கொண்டே பேசி இருந்தார்.

ஏ.ஆர் ரஹ்மான் பேட்டி

மேலும் ரஹ்மான் பேசும் போது, தன் குடும்பத்தினரிடம் மன்னிப்பு கேட்க விரும்புவதாகவும் கூறி இருந்தார். அதோடு நான் மிகவும் பிசியாக இருந்ததால் தன் மகன், மகள், முன்னாள் மனைவிக்கு சரியான நேரத்தை ஒதுக்க முடியவில்லை. அதனால் நான் அவர்களிடம் மன்னிப்பு கேட்க விரும்புகிறேன் என்று கூறியிருந்தார். அடுத்ததாக ஆளப்போறான் தமிழன் என்ற பாடல் வரிகள் குறித்து கேள்வி கேட்கப்பட்டது.

வியக்க வைக்கும் கேரக்டர்

அதற்கு ஏஆர் ரஹ்மான் பேசும் போது நான் ஆளப்போறான் தமிழன் என வரிகள் இருக்கிறது. ஆனால் அது ஆண்டான் தமிழன்னு வரணும், இல்லன்னா ஆண்டு கொண்டு இருக்கிறான் தமிழன் என்று கூட வரலாம் என்று கூறியிருந்தார். அதோடு நாம் ஒருவரை பார்த்து ஒருவர் ஊக்கம் பெறுகிறார். சொல்ல போனால் ராமானுஜர், திருவள்ளுவர், பாரதியார், மணிரத்தினம், ஷங்கர், இளையராஜா சார், சுந்தர் பிச்சை போன்றவர்களை பார்த்தெல்லாம் நாம் இன்ஸ்பியர் ஆகிடுவோம் என்று பேசியிருந்தார்.

AR Rahman vijay tv

சோக மூட்டை

அடுத்ததாக டேக் இட் ஈசி என்ற வார்த்தையை குறித்து கேள்வி கேட்கப்பட்டிருந்தது அதற்கு ஏ ஆர் ரஹ்மான் பேசும்போது நான் என் வாழ்க்கையில் எல்லாமே டேக் டிசி பாலிஸியாக இருக்க விரும்புகிறேன். நிறைய பேர் வாழ்க்கையை வேஸ்ட் பண்ணிட்டு இருக்காங்க. அன்னைக்கு நீ சொன்னல்ல... அப்போ சொன்னல்ல... என்று தன் மீது சுமந்து இருக்கும் மூட்டைகளை எல்லாம் தூக்கி போடணும். அப்படி அடுத்தவங்களை பற்றி பேசிக்கிட்டே இருக்கிறவங்க இப்ப இருக்கிற டைம்மை வேஸ்ட் பண்ணுறாங்க. வருங்காலத்தையும் வேஸ்ட் பண்றாங்க.

இதை புரிஞ்சுக்கணும்

இதனால அவங்களால அவங்க வாழ்க்கையவே வேஸ்ட் பண்ணுறாங்க. நான் நிறைய பேரை பார்த்திருக்கிறேன் ஏதாவது ஒன்னு நடந்துச்சுன்னா அதை அப்படியே விடுவதில்லை அதை எல்லாம் அப்படியே புடிச்சுகிட்டு இருக்கிறாங்க. எனக்கு இந்த மாதிரி ஆச்சு, அந்த மாதிரி ஆச்சுன்னு சொல்லிட்டே இருப்பாங்க. அதை சரி பண்ண வாய்ப்பு கொடுத்தாலும் யூஸ் பண்ணிக்கிறது கிடையாது. இங்க ஒவ்வொரு நாளும் வித்தியாசமானது. இந்த வாழ்க்கையோடு ரொம்ப அட்டாச்மெண்டாக இருந்தால் தான் பிரச்சனையே. வாழ்க்கையோடு டிஸ்சார்ச்மெண்டாக இருந்தால் எந்த பிரச்சனையும் இல்லை.

ஏஆர் ரஹ்மான் பர்சனல்

எந்த வேலையில் இருந்தும் கிடைக்கும் ரிசல்ட்டை பர்சனலா எடுத்துக் கொள்ளவே கூடாது என்று ஏ ஆர் ரஹ்மான் பேசியிருந்தார். அதுபோல தன்னுடைய முன்னாள் மனைவி குறித்தும் அந்த பேட்டியில் ஏ ஆர் ரஹ்மான் பேசியிருந்தார். இசையமைப்பாளராக பல ஹிட்டு கொடுத்த ஏஆர் ரஹ்மான் இப்போது இயக்குனர் அவதாரமும் எடுத்திருக்கிறார். லீ- மஸ்க் என்கிற விருத்தி விர்ச்சுவல் என்ற தொழில்நுட்பத்தை பயன்படுத்தி இந்த திரைப்படத்தை இயக்கியிருக்கிறார்.

முன்னாள் மனைவி சொன்ன கதை

தான் இயக்கிய படத்தை பற்றி ஏ ஆர் ரகுமான் பேசும் போது, நான் விர்ச்சுவல் ரியாலிட்டி பற்றி தெரிந்து கொண்டது என்னுடைய முன்னாள் மனைவி சொன்ன கதையை வைத்துதான். அவர் ஒரு கதை சொன்னார் அதில் ஒரு சின்ன பெண்ணின் அப்பா அம்மாவை சிலர் கொலை செய்து விட, வாசனையை வைத்து யார் கொலை செய்தார்கள் என்பதை அந்தபெண் கண்டுபிடிக்கிறார். என்பதுதான் கதை‌. ஆக்டிங் ஒர்க் ஷாப், ரைட்டிங் ஒர்க் ஷாப் என எல்லாவற்றையும் தெரிந்து கொண்டேன். அதற்குப் பிறகு நண்பர்கள் இந்த படத்தை நீங்களே இயக்குங்க என்று சொன்னாங்க அதனால இந்த படத்தை இயக்க முடிவு செய்தேன் என்றும் ஏ ஆர் ரஹ்மான் பேசியிருக்கிறார்.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+