ஏஆர் ரஹ்மான் மீது சின்ன கிசு கிசு கூட கிடையாது.. செய்யாறு பாலு புகழாரம்
சென்னை: ஏஆர் ரஹ்மானை யாருடனும் இணைத்து பேசி கிசுகிசு வந்ததே கிடையாது என்று மூத்த பத்திரிகையாளர் செய்யாறு பாலு கொந்தளித்து கூறியிருக்கிறார்.
Cheiyyaru Balu என்ற யூடியூப் சேனலில், மூத்த பத்திரிகையாளர் செய்யாறு பாலு வீடியோ வெளியிட்டு பேசியிருக்கிறார்.. அதில், "ரஹ்மான் தம்பதியினர், பொதுவெளியில் அறிக்கை வெளியிட்டு விட்டார்கள் என்பதற்காகவே நாக்கு மேல பல்லு போட்டு யாரும் பேசக்கூடாது.. அபாண்டத்தை பேசக்கூடாது.

விவாகரத்து: ஏஆர் ரஹ்மானின் இத்தனை வருட இசை வாழ்வில் சின்ன கிசுகிசுகூட வந்தது கிடையாது.. அவர் மிஸ்டர் கிளீன் என்பதில் மாற்றுக்கருத்தே கிடையாது..
"பாடகியை முறைத்து பார்த்தார், பாடகியை தொட்டு பேசினார், ஒரு நடிகையிடம் வழிந்தார்".. இப்படியெல்லாம் எந்த பேச்சும் இதுவரை வந்ததில்லை.. இசையும், இறைவனும் குடும்பமும் மட்டுமே அவரது உலகம்.
மோகினி டே: துரதிருஷ்டவசமாக, ஒரே நேரத்தில் மோகினி டேயும் தன்னுடைய விவாகரத்தை அறிவித்தது மட்டும்தான், கட்டுக்கதைகளுக்கு காரணம்.. ரஹ்மானின் சகோதரி, ரேஹானா தந்திருந்த ஒரு பேட்டி, இப்போது இணையத்தில் வைரலாகி கொண்டிருக்கிறது.
"நான் பார்த்ததிலேயே ரொம்ப துணிச்சலான பெண் சாயிரா பானு.. நல்ல டிரஸ்ஸிங் சென்ஸ் உண்டு.. ரஹ்மான் போடும் டிரஸ் எல்லாம் , சாயிரா தேர்ந்தெடுப்பதுதான்.. இது எங்கள் குடும்பத்தில் விமர்சனமானது.. ஆனால், இதையெல்லாம் அவங்க கடந்து போய்ட்டே இருக்காங்க.. இதுவரை தன்னுடைய கணவரிடம்கூட இதைப்பற்றி புகார் சொல்லவில்லை." என்று கூறியிருந்தார்.
துணிச்சலான பெண்: இந்த அளவுக்கு துணிச்சலான பெண், காரணத்தை நம்மிடம் சொல்ல வேண்டிய அவசியமும் இல்லை. ரஹ்மான் மீதான பாசம்தான் இதெற்கெல்லாம் காரணம். "பெரிய பாய் வந்தாருன்னா கலக்கிடுவார்" என்று ரசிகர்கள் சொல்வதற்கு காரணமும் ரஹ்மான் மீதான இதே அன்புதான்.
ஜீவனாம்சத்திற்காக நடந்த திருமணங்கள் இங்கு எத்தனையோ உண்டு. நடிகை சமந்தா தன்னுடைய விவாகரத்தை அறிவித்தபோது, "இந்த பொண்ணு எப்படியும் நாகார்ஜூனா குடும்பத்தில் பெரிய தொகையை ஆட்டைய போடப்போகுது.. 200 கோடியை வாங்கிட்டு போயிட போகுது.. அதுக்காகத்தான் விவாகரத்தை அறிவிக்குது" என்றெல்லாம் தெலுங்கு மீடியாக்கள் எழுதித்தள்ளின.
பல்லாவரம் பொண்ணு: ஆனால், உன் காசும் வேணாம், ஒன்னும் வேணாம் என்று கெத்தாக தூக்கி போட்டுட்டு வந்தது நம்ம பல்லாவரம் பொண்ணு.. இதுக்கப்புறம் அதே தெலுங்கு மீடியா, சமந்தாவை இன்று தூக்கி வைத்து கொண்டாடுகிறது. இவ்வாறு செய்யாறு பாலு தெரிவித்துள்ளார்.












Click it and Unblock the Notifications