இது அசிங்கமான வேலை.. ஏ.ஆர். ரஹ்மானுக்கு குறி வெச்சது யார் தெரியுமா? மனைவியின் அவசரம்..பிரபலம் நறுக்
சென்னை: ரஹ்மானை ஒரு கூட்டம் குறி வைத்திருக்கிறது.. மனைவியின் மனக்கசப்பை அது பயன்படுத்தி கொண்டுள்ளது. அதனால்தான், சென்னையிலிருந்து வழக்கறிஞரை அழைக்காமல், மும்பையிலுள்ள வழக்கறிஞர் மூலம் அறிக்கை வெளியாகியிருக்கிறது என்று மூத்த பத்திரிகையாளர் தெரிவித்துள்ளார்.
AG Modern Media என்ற யூடியூப் சேனலுக்கு மூத்த பத்திரிகையாளர் சுபேர் பேட்டி ஒன்றை தந்துள்ளார்.. அந்த பேட்டியில், "இந்த விவாகரத்து முடிவு அவசரத்தில் எடுக்கப்பட்டது.. ரஹ்மானுக்கே தெரியாமல் எடுக்கப்பட்ட முடிவாகும்..

தம்பதிக்குள் சிறுசிறு சண்டைகள் வரும், ஓரிரு நாளில் சரியாகிவிடும் என்பது வழக்கமான ஒன்றுதான்.. அதுபோலவே இந்த விவகாரமும் கோபத்தில், ஆத்திரத்தில் எடுக்கப்பட்ட முடிவுதான்.. இதுக்கு நிச்சயம் சாய்ரா பானு வருத்தப்படுவார் என்றே நினைக்கிறேன்.
உண்மையிலேயே கணவருடன் வாழ விருப்பமில்லை என்றால், 2 குடும்பத்திடமும் நேடியாக சென்று சொல்லியிருக்கலாம்.. அல்லது ரஹ்மானுக்கு முறைப்படி வக்கீல் நோட்டீசை தந்திருக்கலாம். அதைவிட்டுவிட்டு, ரஹ்மானை பழி வாங்க வேண்டும் என்பதற்காகவும், அவரது பெயரை கெடுக்க வேண்டும் என்பதற்காகவும்தான், மீடியாவில் அறிக்கையாகவே தந்திருக்காங்க..
அறிக்கை: இந்த அறிக்கை தருவதன் நோக்கம் ரஹ்மானை களங்கப்படுத்தணும் என்பதுதான்.. கணவன்-மனைவிக்குள்ள கோபத்தை யாரோ இதில் பயன்படுத்தியிருக்காங்க.. அதனால்தான் அறிக்கை வெளியிட்டு, அதை மீடியாவில் வெளிவரச்செய்துள்ளனர்.. ரஹ்மான் பிஸியான இசையமைப்பாளர். தன்னுடன் நேரம் செலவழிப்பதில்லை என்பது மனைவியின் வருத்தமாக இருக்கலாம்.
ரஹ்மானுக்கு நண்பர்கள் கிடையாது.. வேற எந்த பொழுதுபோக்கு அம்சமும் கிடையாது. வீடு, ரிக்கார்டிங் தியேட்டர் என்றே இருப்பவர். தூங்கற நேரம் தவிர, 24x7 எந்நேரமும் சிந்தனையிலேயே இருப்பவர்.. இவரை போன்ற கிரியேட்டிவ் துறையில் இருப்பவர்களை சிலர் புரிந்து கொண்டு ஏற்றுக்கொள்வார்கள் .. சிலர் டைவர்ஸ் பண்ணிட்டே இருப்பேன் என்று சொல்லி கொண்டே இருப்பார்கள்.
வெளிநாடு: முன்பாவது ரஹ்மான் அதிக பிஸியாக இருந்தார். இப்போது அந்த அளவுக்கு இல்லை. வெளிநாடு சென்றால் மனைவியை அழைத்து கொண்டுதான் செல்கிறார்.. பிள்ளைகளையும் அழைத்து செல்கிறார். லண்டனில் அவருக்கு ஸ்டுடியோ இருக்கு.. அமெரிக்காவிலும் ஸ்டுடியோ இருக்கு. ஹாலிவுட்டில் போய் செய்யக்கூடிய அளவுக்கு ஹைடெக் டெக்னாலஜி என்ற ஸ்டுடியோ சென்னையிலும் இருக்கு.
குடும்பத்துக்காக டைம் ஒதுக்கவில்லை என்கிறார்கள். ஆனால் ஸ்டுடியோவே வீட்டில்தான் இருக்கிறது.. தனிப்பட்ட முறையில் தனக்கு நேரம் ஒதுக்கவில்லை என்பது மனைவியின் ஏக்கமாகும். இது மட்டுமே மனவருத்தமாக இருந்திருக்கு.
ஸ்டுடியோ: இதைதான், யாரோ உபயோகப்படுத்தி கொண்டுள்ளார்கள்.. ரஹ்மானின் கேரக்டர் மீதோ, அவரது படைப்புகள் மீதோ தனிப்பட்ட முறையில் கல்லெறிய முடியாதவர்கள், இந்த குடும்பத்தின் பின்பக்கம் வழியாக சென்றிருக்கிறார்கள்.
சமீபகாலமாக, ரஹ்மானுக்கெதிராக ஒரு கூட்டம் பேசிக்கொண்டே இருக்கு. மீ டூ விவகாரத்தில் ரஹ்மான் பேசிய பிறகு, சென்னையில் இசை கான்செர்ட் நடத்தியபோது, மேடைகளில் தமிழில் பேசியபோது.. இப்படி இவரை ஒரு கூட்டம் குறி வைத்திருக்கிறது.. மனைவியின் மனக்கசப்பை பயன்படுத்தி கொண்டுள்ளது. அதனால்தான், சென்னையிலிருந்து வழக்கறிஞரை அழைக்காமல், மும்பையிலுள்ள வழக்கறிஞர் மூலம் அறிக்கை வெளியாகியிருக்கிறது.. அங்கிருந்த விவாகரத்து டீம் வைத்து இதை ஏன் வெளியிட்டது?
மனைவியின் அவசரம்: மனைவியின் வேதனை, அவசரத்தை யாரோ பயன்படுத்தி கொண்டிருக்கிறார்கள்.. ரஹ்மானுக்கு இது மனவேதனையை அதிகமாகவே தந்துள்ளது. 35 வருடம் எந்தவொரு சினிமா பார்ட்டியிலும் கலந்து கொள்ளாதவர் ரஹ்மான்..
பெண்களிடம் கை கொடுத்துகூட பேச மாட்டார்.
ரஹ்மானின் இசைக்குழுவில் பாசிஸ்ட் மற்றும் பின்னணி பாடகியாக பணிபுரியும் மோகினி டே தன்னுடைய கணவரை விவாகரத்து செய்வதாக அறிவித்திருக்கிறார்.. உடனே இதை ரஹ்மானுடன் இணைத்து பேசுகிறார்கள்.. அதையும் இதையும் முடிச்சு போட்டுள்ளனர். இதுக்கு என்ன ஆதாரம் இருக்கு? ரஹ்மான் மீது வன்மத்தை வைத்திருக்கக் கூடியவர்கள் செய்யும் வேலை இது.. அசிங்கமான வேலை இது. அந்த பெண் ரஹ்மானின் மகள் வயசுகூட இல்லை.. ரஹ்மானை எந்தெந்த வழியில் டார்கெட் செய்யணுமா, அதை செய்கிறார்கள்..
அசிங்கமான வேலை: சில சேட்டிலைட் சேனல்களே இதை செய்கிறது.. என்ன அஜென்டாவில் இவர்கள் வேலை பார்க்கிறாங்க.. செய்திகள் என்றால் உண்மைத்தன்மை இருக்கணும்தானே? இதெல்லாம் ஊடக தர்மம் இல்லாத விஷயம்" என்று ஆதங்கத்தை கொட்டியிருக்கிறார்.
நடிகர் தனுஷ்: தொடர்ந்து சுபேர் சொல்லும்போது, "நீங்க பத்திரிகையாளராக இருந்துட்டு இப்படியா எழுதறது? தொழிலுக்கு அவதூறான விஷயத்தை எல்லாம் ஏன் பரப்ப வேண்டும்?
தனுஷ் மீதும் ஆரம்ப காலகட்டத்திலும் சில குற்றச்சாட்டுகள் இருந்தன. ஆனால், இன்றைக்கு தனுஷூக்கு மெச்சூரிட்டி வந்திருக்கு.. வேற வேற திசையை நோக்கி நகர்ந்து வருகிறார்.. எதுக்கெடுத்தாலும் தனுஷை இழுத்துவிடுவது சரியல்ல.. தனுஷூக்கும் ஒரு குடும்பம் இருக்கு, 2 பிள்ளைகள் இருக்காங்க.. இப்படியெல்லாம் சோஷியல் மீடியாவில் அவதூறு கிளப்பும்போது, அந்த பிள்ளைகள் என்ன நினைப்பார்கள்? அவர்களின் மனநிலைமை யாருமே அறிவதில்லை.
நம்ப வேண்டாம்: இதெல்லாம் தெரியாமல் செய்வது. எனினும், தனுஷ் இதை கண்டுகொள்வதில்லை.. நேரமும் அவருக்கு இல்லை.. இதுபோன்ற சர்ச்சைகளை காதில் வாங்குவதும் கிடையாது. ரஹ்மானை பொறுத்வரை, ஜென் மனநிலைமையில் வாழக்கூடிய நபர்.. அவர் மீது ஈட்டி எறிந்தாலும் சிரித்து கொண்டே கடந்து போகக்கூடிய மனநிலைமையில் நீண்ட காலமாக வாழ்ந்து வருகிறார். அவருக்கு இதனால் எந்த பாதிப்பும் வராது.. இதைக்காட்டிலும் வீர்யமான படைப்புகளை அவர் சினிமாவுக்கு தருவார். எனவே ரசிகர்கள் தவறான தகவலை நம்பாதீர்கள்" என்றார்.












Click it and Unblock the Notifications