இரவில் ரிக்கார்டிங், பகலில் தூக்கம்.. ஏ.ஆர். ரஹ்மான், சாயிரா பானு அந்நியோன்யம்.. வேதனைப்பட்ட பிரபலம்
சென்னை: இதுவரை எந்த சர்ச்சையிலும், கிசுகிசுவிலும் சிக்காதவர் ஏ ஆர். ரஹ்மான்.. புகழின் உச்சிக்கு போனவருக்கு, இப்படி விவகாரத்து நடப்பது மனசுக்கு கஷ்டமா இருக்கு" என்று தன்னுடைய வருத்தத்தை பதிவு செய்துள்ளார் மூத்த பத்திரிகையாளர் பயில்வான் ரங்கநாதன்.
Metro Mail என்ற சேனலுக்கு மூத்த பத்திரிகையாளரும், நடிகருமான பயில்வான் ரங்கநாதன் பேட்டி ஒன்றை தந்துள்ளார்.. அந்த பேட்டியில் அவர் சொல்லியிருப்பதாவது: "ஏஆர் ரஹ்மான் இந்த விவாகரத்தை செய்யவில்லை.. மனைவி சாய்ரா பானு தன்னுடைய வழக்கறிஞர் மூலமாக நோட்டீஸ் அனுப்பியிருக்கிறார்..

இந்த அறிக்கை வெளியானபோது இரவு 11 மணி. தனுஷ் - ஐஸ்வர்யா டைவர்ஸ் அறிக்கை வெளியானதும் இப்படித்தான் இரவு 11 மணியாகும்.. ஹைதராபாத்திலிருந்து அந்த அறிக்கையை வெளியிட்டார்கள்.
எதிர்பார்க்கல: ஆனால், சில விவகாரத்துகளை நாம் எதிர்பார்ப்பதில்லை. அப்படித்தான் இந்த விவகாரத்தும்.. நானும் இதை எதிர்பார்க்கவில்லை.. எந்த நிகழ்ச்சிக்கு சென்றாலும் கணவர் மீது கை போட்டுக் கொள்வது, அந்நியோன்யமான வாழ்க்கையாகவே வாழ்ந்திருக்கிறார் சாய்ரா பானு. மூத்த மகள் காதலித்து திருமணம் செய்து கொண்டவர். ஆரம்பத்தில் இதனை எதிர்த்தாலும், பெற்றோர் இருவருமே பிறகு ஏற்றுக் கொண்டனர்
ரஹ்மான், ஆரம்பத்தில் இஸ்லாமியர் கிடையாது. மதம் மாறிய இஸ்லாமியர்.. இறை அருள் கிடைத்திருக்கிறது, அந்த அடிப்படையில் தீவிரமாகவே மாறிவிட்டார்.. எங்கே மசூதி என்றாலும் உடனே சென்றுவிடுவார்.. ஒருமுறை, சூப்பர் ஸ்டாரைகூட, தனக்கு பிடித்த ஒரு மசூதிக்கு அழைத்து சென்றிருக்கிறார். 5 வேளை தொழுகை செய்பவர்.
விவாகரத்து: இரவில் ரிக்கார்டிங், பகலில் தூக்கம் என்பதுதான் ரஹ்மானின் பழக்கம். ஆனால், இந்த விவகாரத்து ஏன் ஏற்பட்டது என்பதை விலாவரியாக சொல்ல விரும்பவில்லை.. காரணம், அவரது மகன் இது தொடர்பாக வேண்டுகோள் விடுத்துள்ளார்..
ஒருமுறை ஏ.ஆர். ரஹ்மானின் சகலைபாடி (சாய்ரா பானுவின் தங்கை கணவர்) நடிகர் ரகுமான் பேட்டி ஒன்றில் சொல்லியிருந்தார்.. "கடவுளும் இசையும் ஒன்று.. 5 வேளை ரஹ்மான் தொழுவார்.. இசையால் வாழ்பவர், இசையால் சுவாசிப்பவர்.. முதலிரவு அன்றைக்கு ஏஆர் ரகுமானுக்கு நான் போன் செய்தேன்.. ஆனால், அவரது மனைவிதான் போன் எடுத்தார். அவர் எங்கே என்று கேட்டதற்கு, பக்கத்து ரூமில் வீணை வாசித்து கொண்டிருக்கிறார்" என்றார். அந்த அளவுக்கு ஏ.ஆர்.ரஹ்மான் இசையை நேசிப்பவர் என்று நடிகர் ரகுமான் கூறியிருந்தார்.
ஏஆர் ரகுமான்: 24 வயதில், தன்னுடைய அம்மாவிடம் சென்று, "எனக்கு மனைவியாக வரப்போகிறவர் அழகா இருக்கணும், நல்லா படிச்சிருக்கணும், என்று கண்டிஷன் போட்டிருக்கார் ரஹ்மான். ஆனால், வெளியில் சுதந்திரமாக போக முடியாது, என்பதையும் வரப்போகும் மனைவியிடம் சொல்ல வேண்டும் என்றாராம். ஆனால் ஷாப்பிங்கில் விருப்பமுள்ளவர் சாயிரா பானு.
பிரபல இசையமைப்பாளர்கள் எம்எஸ் விசுவநாதன், விஜய் ஆண்டனி, ஜிவி பிரகாஷ் இவர்களை பற்றியெல்லாம் கிசுகிசுக்கள் வந்திருக்கின்றன.. பின்னணி பாடகர் டிஎம்எஸ்கூட தன்னுடைய 60 வயதில் மனைவியின் சம்மதத்தின் பேரில் திருமணம் செய்ததாக சொல்வார்கள்..
புகழின் உச்சி: ஆனால், இதுவரை எந்த சர்ச்சையிலும், கிசுகிசுவிலும் சிக்காதவர் ஏ ஆர். ரஹ்மான்.. அவருண்டு அவர் வேலையுண்டு என்றிருப்பவர். புகழின் உச்சிக்கு போனவருக்கு, இப்படி விவகாரத்து நடப்பது மனசுக்கு கஷ்டமா இருக்கு" என்றெல்லாம் அந்த பேட்டியில் வருத்தப்பட்டு கூறியிருக்கிறார் பயில்வான் ரங்கநாதன்.
அதேபோல, Youth Central Tamil என்ற சேனலுக்கு பேட்டி தந்துள்ள பயில்வான் ரங்கநாதன், "இது கலிகாலம்.. விட்டுக்கொடுத்தல் கணவன், மனைவிக்குள் வேண்டும்.. விட்டுக்கொடுக்காவிட்டால், இப்படி சிக்கல்கள் வந்துவிடும். இவர்கள் வசதியான குடும்பத்தில் இருப்பவர்கள்.. புகழின்உச்சிக்கு போனவர் ரகுமான். இவர்கள் அந்நியோன்யமாக தம்பதிகள்.. சந்தோஷமாக இருந்தவர்கள்.
ஆனால் மற்றவர்கள் பிரைவசியில் நாம ஏன் தலையிடணும்? அது அவர்களது வாழ்க்கை. அது அவர்களது விஷயம்.. "எங்க அம்மா, அப்பா பிரிந்தால்தான், சந்தோஷப்பாக இருப்பார்கள்" என்று அவர்களது பிள்ளைகளும் சொல்கிறார்கள்.. மெச்சூரிட்டியான பிள்ளைகள்.. அதை அப்படியே விட்டுடணும்.. அவர்கள் சொல்வது சரியான கருத்துதான்" என்று தெரிவித்துள்ளார்.












Click it and Unblock the Notifications