நான் நேசித்தது எல்லாமே என்னை விட்டு போய்விட்டது.. அதற்கு காரணம் இதுதான்! ஏஆர் ரஹ்மான் எமோஷனல்
சென்னை: இசையமைப்பாளர் ஏஆர் ரஹ்மான் தன்னுடைய வாழ்க்கையில் தான் அதிகமாக நேசித்த எல்லாமே தன்னை விட்டு போய்விட்டது, அதற்கு காரணம் கடவுள் தான் என்று எமோஷனலாக பேசியிருக்கிறார். அதோடு வாழ்க்கையில் என்ன நடந்தாலும் நான் அன்பை மட்டுமே தேர்ந்தெடுக்க போகிறேன் என்று அவர் கூறி இருக்கிறார்.
கடந்த சில மாதங்களுக்கு முன்பு இசையமைப்பாளர் ஏஆர் ரஹ்மான் மனைவி திடீரென்று தான் தன்னுடைய கணவரை விட்டு பிரிய போகிறேன், இது யோசித்து எடுத்த முடிவு ஆனால் வேறு வழியில்லாமல் தான் இந்த முடிவு எடுக்கிறேன் என்று வழக்கறிஞர் மூலமாக எமோஷனலாக ஒரு நீண்ட பதிவு வெளியிட்டிருந்தார். அது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.

அதைத் தொடர்ந்து சில மணி நேரத்தில் ஏஆர் ரஹ்மானும் தாங்கள் பிரிவதை உறுதி செய்திருந்தார். அதற்குப் பிறகு பல சர்ச்சைகள் வந்தது. அதற்கு ஏ ஆர் ரஹ்மான் மற்றும் அவருடைய குடும்பத்தினர்கள் பதில் கொடுத்திருந்தார்கள். இப்படியான சூழ்நிலையில் சமீபத்தில் ஏ ஆர் ரஹ்மான் தனியார் யூடியூப் சேனல் ஒன்றில் பேட்டி கொடுத்திருக்கிறார்.
அதில் தன்னுடைய வாழ்க்கையில் நடந்த பல விஷயங்கள் குறித்து எமோஷனலாக பேசி இருக்கிறார். நான் இளமையாக எப்போதும் இருப்பதற்கு காரணம் என்னுடைய இசை தான். எனக்கு இப்போ 70 வயது கடந்து விட்டது. ஆனால் நான் இப்போது தாத்தா மாதிரி இசையமைக்க முடியாது. இப்போது உள்ள இளைஞர்களும் என்னுடைய பாடல்களை கேட்கிறார்கள். அதனால் அவர்களுக்கு ஏற்றவாறு நான் இசை அமைக்க வேண்டும்.
அதனால் தான் நான் எப்போதும் இளமையாக இருக்கிறேன். அது மட்டும் இல்லாமல் நாம் எப்போதும் மனதை தூய்மையாக வைத்துக் கொள்ள வேண்டும். குற்ற உணர்வு, பொறாமை போன்ற நெகடிவ் சிந்தனைகள் நம்மை நெருங்காமல் பார்த்துக் கொள்ள வேண்டும். அதற்கு மேலே ஆன்மீகம் உங்களுக்கு மிகவும் உறுதுணையாக இருக்கும்.
நீங்கள் ஆன்மீகத்திற்குள் செல்லும்போது சுக துக்கங்களில் இருந்து எப்படி தள்ளி நிற்பது என்று உங்களுக்கு தெரிந்து விடும். நான் இப்போ இருக்கிற மனநிலை எனக்கு பல வருடங்களுக்கு முன்பே வந்துவிட்டது. வாழ்க்கையில் என்ன நடந்தாலும் நான் அன்பை மட்டுமே தேர்ந்தெடுக்கப் போகிறேன் என்று சின்ன வயதிலேயே முடிவு செய்து விட்டேன்.
நீங்கள் இதற்கு நேர் மாறான மனநிலையில் இருப்பதற்கு அதிகப்படியான சக்தி தேவைப்படுகிறது. இந்த மனநிலை எனக்கு வருவதற்கு சின்ன வயதில் எனக்கு வந்த கஷ்டங்கள் தான் காரணம். முதலில் என்னுடைய அப்பா இறந்துபோனார். அதற்குப் பிறகு என்னுடைய பாசமான பாட்டி இறந்து போனார். பிறகு நான் ஆசையாக வளர்த்த நாய்க்குட்டி இறந்து போய்விட்டது.
அப்போது எனக்கு ஒரு விஷயம் தெளிவாக தெரிந்தது அது என்னவென்றால் வாழ்க்கையில் எதுவும் நிரந்தரம் கிடையாது. வாழ்க்கையில் எனக்கு எது அதிகமாக பிடிக்கிறதோ அது என்னை விட்டு சென்று விடுகிறது. சின்ன வயதிலிருந்து நான் என்னை விட வயது மூத்தவர்களோடு பழகி இருக்கிறேன். அதனால் அவர்களின் முதிர்ச்சியான புரிதல் எனக்கு வந்துவிட்டது என்று நினைக்கிறேன்.
என் வாழ்க்கையில் நடந்த ஒவ்வொரு கஷ்டத்தையும் கடவுள் எனக்கு கொடுக்கும் பயிற்சியாக நினைக்கிறேன். என் வாழ்க்கைக்கு எது சரியோ அதையே அவர் செய்கிறார் என்றும் நான் நினைக்கிறேன் என்று அந்த பேட்டியில் ஏஆர் ரஹ்மான் பீல் பண்ணி பேசி இருக்கிறார்.
-
விவசாயக் கடன் தள்ளுபடி.. பொய் சொல்லி ஏமாற்ற மாட்டேன்! விவசாயிகளே கவலைப்படாதீங்க.. விஜய் உத்தரவாதம் -
வளைகுடாவில் இந்தியாவிற்கு கிடைத்தது மாற்றுப்பாதை.. ஓமனால் பெரிய குட்நியூஸ் -
கட்டப்பா கூட ஒரு டைம்தான் குத்துனாரு.. இப்படி தினம் தினம் பண்ணுறீங்களே! கோபத்தின் உச்சியில் ஸ்டாலின் -
DMART முதலாளிக்கு இப்படியொரு பிஸ்னஸ் இருக்கா.. ஒரு வீட்டுக்கு ரூ.27.5 லட்சம் .. ஆடிப்போன மும்பை மக்கள்! -
தமிழக அமைச்சரவையில் சீனியாரிட்டி லிஸ்ட்.. பின் தள்ளப்பட்ட செங்கோட்டையன்.. வன்னி அரசுக்கு எந்த இடம் -
உதயசூரியனில் போட்டியிட்ட 2 மதிமுக எம்எல்ஏக்கள் ராஜினாமா செய்ய முடிவு? திமுகவுக்கு பெருத்த ஷாக்! -
MDMK: எம்எல்ஏக்கள் ராஜினாமா இல்லை.. புது வியூகம் எடுக்கும் மதிமுக? திமுகவுக்கு கல்தா கன்பார்ம்? -
ஆனானப்பட்ட அமெரிக்காவுக்கே இந்த நிலைமையா..? அப்போ இந்தியா? -
அண்ணாமலை ஒரு பிராண்டு.. விட்றாதீங்க! லெட்டரைப் பார்த்ததும் பதறிப் போன டெல்லி! குவியும் ஆஃபர்கள்! -
கோட்டைச்சாமி.. எந்திரி.. இப்போ நீதான் முதலமைச்சர்.. இன்னமும் பிரச்சாரமா? விஜய்யை கிண்டலடித்த திமுக -
வாசலுக்கு வந்த புகார் பெட்டி.. இனி தலைமை செயலகத்தில் எல்லோருக்கும் அனுமதி இல்லை.. தவெக அரசு கறார் -
முதல்வர் விஜய்யே நினைத்தாலும் பரந்தூர் விமான நிலையத்தை ரத்து செய்வது மிக கடினம்.. ஏன் தெரியுமா?












Click it and Unblock the Notifications