Aranmanai Kili Serial: வாசலில் கோலம் பார்த்து .. பெண்களின் மகிழ்ச்சி அறிவோம்

Subscribe to Oneindia Tamil

சென்னை: ஒரு புள்ளியில் ஆரம்பித்து கடைசியில் ஒரு புள்ளியில் முடிவது கோலம். இந்த கோலத்தை பெண்கள் தினம் காலையில் எழுந்தவுடன் வாசலில் தண்ணீர் தெளிச்சு போடுவது வழக்கம்.

ஆனால், கோலம் எப்படி இருக்கிறதோ அதை வச்சு அந்த வீட்டு பெண்களின் மன மகிழ்ச்சியை கூட அந்த காலத்தில் பெரியவர்கள் கணிப்பார்களாம்.

கோலத்தில் கலர் கொடுப்பது என்பதும் இப்போது அன்றாட வழக்கமாகி, பலர் இன்னமும் தினம் தினம் கோலம் போடுவதை வழக்கமாகக் கொண்டு இருக்கிறார்கள்.

அரண்மனை கிளி

அரண்மனை கிளி

விஜய் டிவியின் அரண்மனை கிளி சீரியலில் ஜானு கோலம் போடுவது பூஜை செய்வது என்று, மீனாட்சி அம்மாவின் மனதில் இடம் பிடித்து இருந்தாலும் டிவோர்ஸ் டிவோர்ஸ்தான் என்கிற முடிவில் இருக்காங்க. ஜானுவும் என்னதான் நடந்தாலும் அது படி நாமும் இருப்போம் என்கிற முடிவில் இருக்கிறாள்.

ஜானு அர்ஜுன்

ஜானு அர்ஜுன்

அர்ஜுன் நடக்க முடியாமல் வீல் சேரில் இருந்தாலும் , அவனை மிகவும் நேசிக்கிறாள் ஜானு. அர்ஜுனும் ஜானுவை நேசிக்கிறான். ஒருவரை ஒருவர் உள்ளுக்குள் காதலிக்க ஆரம்பித்து இருந்தாலும், டிவோர்ஸ் வேண்டாம் என்று அர்ஜுன் தெளிவாக முடிவு எடுக்கவில்லை.

மீனாட்சி அம்மா

மீனாட்சி அம்மா

ஜானுவை வெறுத்த அர்ஜுனின் அம்மா மீனாட்சி அம்மா கூட ஜானுவின் மேலிருந்த கோவத்தை கொஞ்சம் கொஞ்சமாக மறந்து, இப்போது அவளது டிரெடிஷன் விஷயங்களை மதிக்க ஆரம்பித்து இருக்கிறார்கள். இதனால் சந்தோஷமாக இருக்கிறாள் ஜானு.

அர்ஜுன் அருண்

அர்ஜுன் அருண்

அர்ஜுனின் தம்பி அருண் கல்யாண ஏற்பாடுகளில் மீனாட்சி அமமா ஜானுவை தினமும் பூஜை செய்ய சொல்கிறார்கள்.கல்யாண பத்திரிகையை ஜானு நீயே பூஜை ரூமில் வச்சு பூஜை செய்து எடுத்து வா என்று சொல்கிறார்கள். இப்படி இருக்கையில், ஜானு கோலம் போட போகிறாள்.

பார்க்கவும் கேட்கவும்

பார்க்கவும் கேட்கவும்

அப்போது மீனாட்சி அம்மாவின் நாத்தனார், இந்த காலத்துல கோலம் போடப் போறேன்னு கிளம்பறேன்னு கேட்க, அம்மாவுக்கு வாசலில் கோலம் போட்டு இருந்தால் ரொம்ப பிடிக்கும். அது மட்டும் இல்லைம்மா.. வாசலில் கோலம் போட்டு இருந்தால், அந்த குடும்பமே மகிழ்ச்சியில் இருக்குதுன்னு அர்த்தம்னு சொல்றா.

கேட்கவும்பார்க்கவும் நன்றாக இருந்த காட்சி இது!

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+