Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

Aranmanai Kili Serial: ஆஹா... மாமியார் மருமகள் சென்டிமென்ட் கண்களில் நீரை வரவழைக்குதே!

Subscribe to Oneindia Tamil

சென்னை: ஜானுவின் மாமியார் மீனாட்சி அம்மாவுக்குள் ஜானுவின் மேல் இவ்வளவு பாசமா? இவரின் உரையாடல் கண் கலங்க வைக்குதே!

தொழிலதிபர் மீனாட்சி அம்மாவாக நடிகை பிரகதி நடிச்சு இருக்கார். ரொம்ப நல்ல நடிப்பு.. கதாபாத்திரம் ரீதியாக நல்ல ரோல் வேற. அதனால டயலாக்ஸ் எல்லாம் பார்த்து பார்த்து எழுதி இருக்காங்க.

விஜய் டிவியின் அரண்மனை கிளி சீரியலில் ஜானு வேண்டுதல் படி சித்தரிடம் போகும் போதுதான் இந்த மாமியாருக்குள்ளும் இத்தனை பாசம் ஜானு மீது இருக்கிறதா என்று தெரிந்துக்கொள்ள முடிகிறது.

போராட்டத்தில் ஜானு

போராட்டத்தில் ஜானு

ஜானு நடக்க முடியாத புருஷன் அர்ஜுனை வேண்டாத தெய்வங்களை எல்லாம் வேண்டி, போகாத காடு மலைகளுக்கு எல்லாம் போயி மூலிகை எடுத்து வந்து அவனை கொஞ்சமாக எழுந்து நடக்க வைத்திருக்கிறாள். அப்போது நாக தெய்வம் கோயிலுக்கு போனபோது என் உயிரை காணிக்கையாகத் தருகிறேன் என்றும் வேண்டுதல் வச்சுட்டு வந்துடறா.

சொன்னதை மறந்து

சொன்னதை மறந்து

தான் வேண்டுதல் வைத்து சொன்னதை மறந்து ஜானு தன் பாட்டில் இருக்க சித்தர் வந்து மிரட்டுகிறார். நீ சொன்னபடி காணிக்கையாக உன் உயிரை தந்தால் மட்டுமே உன் புருஷன் நன்றாக எழுந்து நடப்பான் என்று சித்தர் மிரட்டறார். சரி ஒரு மாதத்தில் வருகிறேன் என்று ஜானு சொல்ல, அதற்குள் உன்னை ஒரு சர்ப்பம் தீண்டும். உன் உடம்பில் அந்த சர்ப்பத்தின் விஷம் ஏறி ஒரு மாதத்துக்குள் உன்னை சாகடிக்கும்.அதற்க்குள் நீ உயிரைத் தருவதாக வாக்கு கொடுத்த அந்த கோயிலுக்கு வந்துவிட வேண்டும் என்று சொல்லிவிட்டுப் போகிறார்.

இது அர்ஜுனுக்கு

இது அர்ஜுனுக்கு

இந்த விஷயம் அர்ஜுனுக்கு தெரிந்து போகும்போது அவன் ரொம்பவும் வருத்தப்பட்டு கண் கலங்குகிறான். நானும் உன் கூட வர்றேன் ஜானு..உன் உயிருக்காக நான் போராடுவேன்னு சொல்றான். வீட்டில் டிரிப் போவதாக சொல்லிவிட்டு கிளம்ப முடிவெடுத்து மீனாட்சி அம்மாவிடம் விடை பெற செல்கிறாள் ஜானு.

முதல் மனைவி

முதல் மனைவி

மேடம் எனக்கு அம்மா பாசம் கிடைக்கவே இல்லை. உங்களை நான் என் அம்மா மாதிரி நினைக்கிறேன்னு சொல்றா. எனக்கும் பெண் குழந்தை இல்லை ஜானு.எனக்கு வர இருக்கும் மருமகளை நான் என் பொண்ணா நினைச்சு பாசம் காட்டணும்னு நினைச்சு இருந்தேன். இப்போதுதான் உன் மேல எனக்கு அந்த அன்பு வந்து இருக்குன்னு சொல்றாங்க.

மகள் பாசம்

மகள் பாசம்

மேடம் எனக்கு அம்மா பாசம் கிடைக்கவே இல்லை. உங்களை நான் என் அம்மா மாதிரி நினைக்கிறேன்னு சொல்றா. எனக்கும் பெண் குழந்தை இல்லை ஜானு.எனக்கு வர இருக்கும் மருமகளை நான் என் பொண்ணா நினைச்சு பாசம் காட்டணும்னு நினைச்சசு இருந்தேன். இப்போதுதான் உன் மேல எனக்கு அந்த அன்பு வந்து இருக்குன்னு சொல்றாங்க.

உங்களை அத்தைன்னு

உங்களை அத்தைன்னு

மேடம் தப்பா நினைச்சுக்கலேன்னா உங்களை ஒரு தடவை அத்தைன்னு கூப்பிட்டுக்கலாமான்னு கேட்கிறாள்.மீனாட்சி அம்மா கண் கலங்கி ஜானுவின் கன்னத்தைத் தடவி கூப்பிடுன்னு சொல்றாங்க. அவள் அத்தை என்று கூப்பிடும்போது மீனாட்சி அம்மாவின் கண்கள் மட்டும் இல்லாமல் பார்ப்பவரின் கண்களும் கலங்கத்தான் செய்கிறது.

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+