Aranmanai kili serial: தெய்வம் மாதிரி ஒருத்தி படு வில்லியா ஒருத்தி யாரைத்தான் நம்புவதோ...!
சென்னை: விஜய் டிவியின் அரண்மனை கிளி சீரியலில் ஜானுவை தெய்வம் மாதிரி குணம் படைத்த பெண்ணாகவும், துர்காவை கெட்ட குணம் கொண்ட பெண்ணாகவும் காண்பிக்கிறார்கள்.
ரெண்டு கேரக்டரும் எஸ்ட்ரீம் லெவலா இருக்கு. நம்ப முடியாத அளவுக்கு இருக்குதுன்னா பாருங்களேன். கார் விபத்தில் கால்கள் நடக்க முடியாமல் சக்கர நாற்காலியில் அமர்ந்து வலம் வருபவன் அர்ஜுன்.
இவன் பணக்கார மீனாட்சி அம்மாவின் மகன்.என்பதால், ஏழைப்பெண் ஜானுவை கல்யாணம் செய்து வச்சுடறாங்க. அப்போதும் அந்த வீட்டில் அடிமை மாதிரிதான் இருக்கிறாள் ஜானு.

சந்தோஷம் அர்ஜுன்
அர்ஜுன் ஜானுவின் நடவடிக்கையால் கொஞ்சம் கொஞ்சமாக மனசு மாறி, ஜானு சந்தோஷமாக இருக்கணும்னு நினைக்கிறான் அர்ஜுன். இதனால் ஜானுவுக்கு அம்மா சொல்கிறபடி விவாகரத்து குடுத்துடலாம்னு நினைக்கிறான். ஆனால், ஜானு என்னதான் விவாகரத்து வாங்கிகிட்டு இந்த வீட்டை விட்டு போவதற்குள் அர்ஜுன் சாரை நடக்க வச்சுடணும்னு நினைக்கிறாள்.

துர்காவின் எண்ணம்
மீனாட்சி அம்மா அக்காவின் மகள் துர்காவின் எண்ணம் வேறாக இருக்கிறது. சித்தியின் அத்தனை சொத்துக்களும் தனக்கே சேர அவள் பிளான் போடுகிறாள். அர்ஜுன் எழுந்து நடக்க செய்யும் முயற்சிகளை முறியடிக்கிறாள். இத்தனைக்கும் மன நிலை சரியில்லாத துர்காவின் அம்மாவை சரியாக்கியவளும் ஜானுதான். இந்த நன்றி கூடவா துர்காவுக்கு இருக்காது. எப்போதும், ஜானுவை அர்ஜுன் விவாகரத்து செய்வது போலவே சித்தியிடம் தூண்டி விடுகிறாள்.

அர்ஜுனை ஆஸ்ரமத்தில்
ஆஸ்ரமத்தில் அர்ஜுனை நல்ல விதமாக எழுந்து நடக்கும் அளவுக்கு வைத்தியம்பார்த்துவிட்டு, வீட்டுக்கு அழைத்து வரும் ஜானு.. இப்போதைக்கு நீங்க நல்லா நடக்கறது யாருக்கும் தெரிய வேணாம் சார்னு பூடகம் வைக்கிறாள் அர்ஜுனுக்கு இதில் உடன்பாடு இல்லை என்றாலும் ஜானுவுக்காக சமமதிக்கிறான்.வீட்டுக்கு வர்றாங்க..

ஏச்சு பேச்சு
மீனாட்சி அம்மா கண்டதையும் சொல்லி ஜானுவை ஏசறாங்க, பேசறாங்க., உன்னால என் பிள்ளையை நடக்க வைக்க முடிஞ்சுதான்னு கேலியா கேட்கறாங்க. அந்த பாம்பு என் பையனை கடிச்சு இருந்தா என்ன பண்ணுவேன்ணுய் மீனாட்சி அம்மா கண்ட மேனிக்குத் திட்ட, துர்காவும் ஜானுவைத் திட்டறா.இதை எல்லாம் பார்த்தும் அர்ஜுன் வாய் திறந்து சொல்ல துடிக்கிறான்.
ஜானு வேணாம் சார்னு கண்ணால் ஜாடை காமிக்கறா. இத்தனை தெய்வாம்ச குணம் பொருந்திய நல்ல பெண்கள் யாராவது இருந்தால் கொஞ்சம் அடிக்கடி கண்ணுல காமிங்க சார்.
-
சீமான் வீட்டு விசேஷத்தில் தாய்மாமன் சீருடன் அனிதா ராதாகிருஷ்ணன்! வாசல் வரை வரவேற்று.. என்ன ஒரு பாசம் -
மும்மொழி.. மத்திய அரசுக்கு எதிராக அண்ணாமலை முதல் முறையாக கருத்து? -
எடப்பாடி அனுப்பிய மெசேஜ்.. சி.வி. சண்முகம் வீட்டில் உறுதிபடுத்திய கே.சி வீரமணி.. இணைகிறது அதிமுக -
இதெல்லாம் எந்த நினைப்பில் விஜய் செய்கிறார் தெரியலையே.. மிகப்பெரிய ரிஸ்க்.. சறுக்குனா காலிதான்! -
நாளுக்கு நாள் மோசமாகும் இந்தியா.. குட்டி குட்டி நாடெல்லாம் நம்மை முந்திக்கொண்டு செல்கிறது! -
கூட்டுறவு கடன் தள்ளுபடி 2026.. ஆர்பிஐ விதிமுறை என்ன.. உதயநிதி ஸ்டாலினுக்கு தவெக விளக்கம் -
பிரதமர் மோடியை வணங்கி.. பத்மஸ்ரீ விருது பெற்ற சிலம்ப கலைஞர் பழனிவேல்! தமிழருக்கு பெரிய கவுரவம் -
விஜய் நியமித்த 2 நாளில்.. IPS அருணை கோர்ட்டிலேயே காத்திருக்க சொன்ன நீதிபதி சுவாமிநாதன்.. ஏன்? -
அவசரப்பட்டு கையெழுத்து போட்டுட்டோமோ? முட்டி மோதும் 3 அதிமுக ’மாஜி’ எம்எல்ஏக்கள்! தவெக கொடுத்த ஆஃபர்! -
420 யூனிட் ஓடியிருக்கிறது.. ஆனால் 200 யூனிட் கழிக்காமல் 100 யூனிட் கழித்தது ஏன்? விளக்கம் -
மாசம் ரூ.10000 கோடி செலவு.. படிச்சு படிச்சு மோடி சொல்ல இதுதான் காரணம்..! -
10 வருஷமா வேதனையில இருக்கேன்... எங்களை விஷம் வைத்து கொன்றுடுங்க... நடிகர் பாலா உருக்கம்!












Click it and Unblock the Notifications