Aranmanai Kili Serial: விசுவாசம் அப்பாவை கொலை கூட செய்ய வைக்குமா?
சென்னை: விஜய் டிவியின் அரண்மனை கிளி சீரியலில் சுப்பு, அர்ஜுன் காதல் கதையை ஓட்டிக்கிட்டு இருந்துச்சு.இன்னும் அந்த கதை முடிந்தபாடு இல்லை.
இதே போலத்தான் நிகழ் காலத்துக்கு அடிக்கடி வந்து போகிறார்கள்.அப்படி வருகையில்தான் அர்ஜுனுக்கு பேசி முடித்த வேலைக்காரரின் மகள் ரேணுகா,நடக்க முடியாத அர்ஜுனை கல்யாணம் செய்துக்க பிடிக்காமல் தப்பி விடுகிறாள்.
உடனடியாக ரேணுகாவின் தங்கை ஜானுவை பிடிச்சு அர்ஜுனின் அம்மா கவுரவம் காக்க அர்ஜுனுக்கு கல்யாணம் பண்ணி வச்சுடறாங்க.

ஜானுவின் அக்கா
ஜானுவின் அக்கா ரேணுகா, மீனாட்சி அம்மாவை பழி வாங்க வேண்டும் என்றே, அர்ஜுனின் தம்பியும், மீனாட்சி அம்மாவின் இளைய மகனை காதலிக்கிறாள்.எப்படியாவது மீனாட்சி அம்மா வீட்டுக்கு மருமகளாக போயி, அவங்களை ஆட்டுவிக்க வேண்டும் என்று அவனுடன் சுத்த ஆரம்பிக்கிர்றாள்.

ஜானுவின் அப்பா
ரேணுகாவின் அப்பா, அதாவது ஜானுவின் அப்பா இதை பார்த்துவிட்டு, தனது மூத்த மக்களை நீ போகும் பாதை தப்பு என்று எச்சரிக்கிறார். அப்போதும் ரேணுகா கேட்காமல் மீனாட்சி அம்மா மகனுடன் சுற்றுகிறாள். இவரோ மீனாட்சி அம்மாவுக்கு ரொம்ப விசுவாசமானவர். அவரால்தான் குடும்பமே பிழைக்கிறது என்று நினைப்பவர்.

ஜானு ரேணுவால்
ரேணுவால் ஜானுவின் வாழ்க்கை கெட்டுப் போகும் என்று நினைச்ச அப்பா, மகளை கொன்றுவிட திட்டமிடுகிறார். ரேனுகாவைப் பார்க்க அவள் வீட்டுக்கு போகிறார்.இந்த ஊரைவிட்டு காலி பண்ணிக்கிட்டு போன்னா போக மாட்டேன்னு சொல்றியே, ஒண்ணு இருந்தால் இன்னொன்னு இருக்க கூடாதுன்னு சொல்றார்.

தந்தையின் மடியில்
தந்தையின் மடியில் படுத்துக் கொண்டு கண்ணீர் விடும் ரேணுகா.ஏம்ப்பா என்னை இப்படி வெறுத்துட்டீங்கன்னு கேட்கிறாள்.நான் உனக்கு ஒண்ணும் குறை வைக்கலியேம்மா... இப்படி பண்ணிட்டியேன்னுதான் வருத்தம்னு சொன்னவர்,தட்டுல சாப்பாடு போட்டு எடுத்துட்டு வாம்மான்னு கேட்கறார்.அவளும் போட்டு எடுத்துட்டு வர்றா.

மகளுக்கு அப்பா
அப்பா மகளுக்கு சாப்பாடு போட்டு ஊட்டிவிட்டு தண்ணீர் கொண்டு வாம்மான்னு கேட்கிறார். அவள்;கொண்டு வருவதற்குள் தான் வச்சிருந்த விஷத்தை சாப்பாட்டில் கலந்துடலாம் என்று திறக்க பாட்டில் கீழே விழுந்துருது.அப்பா என்னப்பா இது விஷமா..என்னை கொலை செய்யத்தான் முதலாளி அம்மா விசுவாசத்தில் வந்தீங்களா என்று கத்துகிறாள்.
முதலாளி விசுவாசம் இப்படியும் செய்ய சொல்லுமா?
-
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
பிறந்தநாளன்று புதிய கட்சி அறிவிப்பு? பாஜக மேலிடத்திடம் டைம் கேட்ட அண்ணாமலை.. ரகசிய மூவ்! -
தாய் பத்திரம் தொலைஞ்சிருச்சா? ஆன்லைனில் ஈஸியாக ஒரிஜினலை மீட்க 6 ஆவணங்கள் என்ன? சிம்பிள் ஸ்டெப்ஸ் -
முக்கோணப் போட்டியில் தமிழ்நாடு.. 112 ஐ நெருங்கும் விஜய்? மாஸ் கம்பேக்கில் திமுக.. பதற்றத்தில் அதிமுக -
பனையூர் பாபுவுக்கு ஸ்கெட்ச்! அடுத்து ஆளூர் ஷாநவாஸை நோக்கி குரைக்கிறார்கள்! சிந்தனைச் செல்வன் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
அரசியலுக்கு முழுக்கு.. திமுக பொதுச்செயலாளர் பதவியில் இருந்து விலகும் துரைமுருகன் -
தந்தை இறப்பில் நடந்தது மீண்டும் வேண்டாம்.. தாயார் மறைவில் அஜித் குடும்பம் எடுத்த முடிவு! வருத்தத்தில் ரசிகர்கள் -
தமிழக பள்ளி – கல்லூரி மாணவர்களுக்கு அரசு பஸ்சில் இலவச பயணம்.. அறிவித்தார் போக்குவரத்து அமைச்சர் -
8-வது ஊதியக் குழு அப்டேட்! சாதாரண ஊழியருக்கு 1.5 லட்சம்.. மத்திய அரசு ஊழியர்களுக்கு குஷி -
முதல்வர் விஜய்யை சந்திக்காத மேயர் பிரியா! சுணக்கத்தில் சென்னை மாநகராட்சி.. மோதலா? து.மேயர் விளக்கம் -
திருச்சி-க்கு வரும் தாஜ்.. ஒரே நேரத்தில் 3 மெகா பிராண்ட்.. அதுவும் இந்த ஏரியாவுல!












Click it and Unblock the Notifications