Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

என்ன அழகு என்ன அறிவுடா சாமி.. அடுத்த கதாநாயகி ரெடி ஆயிடுச்சு...!

Subscribe to Oneindia Tamil

சென்னை: கம்பன் வீட்டு கட்டுத்தறியும் கவிபாடும் என்பதுபோல தொகுப்பாளரின் மகளும் அவருக்கு போட்டியாக உருவெடுத்துள்ளார் என்றால் அது நம்ம அர்ச்சனா வீட்டில்தான்.

முன்னணி கதாநாயகிகளுக்கு டப் கொடுத்து நாளுக்குநாள் மெருகேறி தனக்கென்று ஒரு ரசிகர் பட்டாளத்தை உருவாக்கி வருகிறார் தொகுப்பாளர் அர்ச்சனாவின் மகளான சாரா. இவரும் ஒரு குட்டித் தொகுப்பாளினியாக வலம் வருகிறார்.

அர்ச்சனா முதல்முதலில் தொகுப்பாளராக இளமை புதுமை நிகழ்ச்சியில் அறிமுகமாகும்போது கொஞ்சம் பயமும் பதட்டத்துடன் தான் இருந்தாராம். அது மட்டுமல்ல அவரது அம்மாவும் இவரை நினைத்து பயந்து கொண்டுதான் வெளியே காத்து இருப்பாராம்.

திறமைக்கார சாரா

திறமைக்கார சாரா

இன்று நிலைமை தலைகீழாக மாறி இருக்கிறது. அவரைப் போலவே அவரது மகள் சாராவும் அட்ராசிட்டி யாக கலக்கிக் கொண்டிருக்கிறார். முதன்முதலில் சாராவிற்கு இந்த அளவு திறமை இருக்கும் என்பது இவருக்கு தெரியவில்லையாம். வீட்டிற்கு வந்த உறவினர் ஒருவருடன் சாரா சொல்வதெல்லாம் உண்மை நிகழ்ச்சியை பற்றி இருவரும் பேசி விளையாடிக் கொண்டிருக்கிறார்கள். அதை பார்த்த இவரின் உறவினர்தான் சாராவிற்கும் நல்ல திறமை இருக்கிறது என்று கூறியிருக்கிறார்.

பேசிட்டே இருப்பாராம்

பேசிட்டே இருப்பாராம்

அதுமட்டுமல்லாமல் சாரா எப்பவும் அவர் சித்தியுடன் தொகுப்பாளர் போலவே பேசி விளையாடிக் கொண்டிருப்பாராம். அதை வீட்டில் உள்ளவர்கள் கவனித்து இருக்கிறார்கள் இருந்தாலும் அதை பெரிதாக எடுத்துக் கொள்ளவில்லையாம். இந்த நிலையில்தான் ஜீ தமிழில் இருந்து ஜீன்ஸ் நிகழ்ச்சியில் கலந்து கொள்ள இவருக்கு வாய்ப்பு கிடைத்திருக்கிறது. முதன் முதலில் தனது மகளுடன் இவர் கலந்து கொண்ட நிகழ்ச்சி இதுதான்.

நல்ல திறமை

நல்ல திறமை

இந்த நிகழ்ச்சியில் இவருக்குள் இருக்கும் திறமையை பார்த்து தான் ஜீ தமிழில் அடுத்ததாக இவரை வைத்தே சூப்பர் மாம் பண்ணலாம் என்று பேசி இருக்கிறார்கள். ஆனால் இதற்கு இவர் முதலில் சரிப்பட்டு வராது என்று தான் சொல்லி இருக்கிறார். ஆனால் அவரிடம் நீங்களே பாருங்க, அவள் உங்களை தூக்கி சாப்பிட்டு விடுவார் பார்த்துட்டே இருங்க என்று கூறியிருக்கிறார்கள். அதற்கு அர்ச்சனாவும் பார்ப்போம் என்று கூறி முடித்து இருக்கிறார்.

அம்மாவை மிஞ்சினார்

அம்மாவை மிஞ்சினார்

ஆனால் இந்த நிகழ்ச்சி ஆரம்பித்த பிறகுதான் முழுமையாக நம்ப ஆரம்பித்தாராம். அர்ச்சனா 18 வருடங்களில் சேர்த்த புகழை சாரா 18 நாளில் சேர்த்து விட்டாராம். இதை நினைத்து ரொம்பவும் சந்தோஷமாக இருக்கிறது என்று அர்ச்சனா கூறியிருக்கிறார். சாரா இதுகுறித்துக் கூறுகையில், நான் நானாக தான் இருக்கிறேன். நான் யாருடைய சாயலும் பின்பற்றவில்லை. எனக்கு பிடித்த மாதிரி நிகழ்ச்சியில் நான் பேசுகிறேன். எனக்கு பயம் கொஞ்சம் கூட தெரியவில்லை என்றும் சாரா கூறியிருக்கிறார்.

பாட்டி பிடிக்கும்

பாட்டி பிடிக்கும்

அதுமட்டுமில்லாமல் சாராவுக்கு அவருடைய அம்மாவான அர்ச்சனாவை பிடிப்பதை விடவும் அவரது பாட்டியை ரொம்பவும் பிடிக்குமாம். சாரா பிறந்து 21 வது நாளிலிருந்து அர்ச்சனா வேலைக்கு சென்று விட்டாராம் . அன்னையிலிருந்து இவரை இவருடைய பாட்டி தான் வளர்த்து வந்தார். அதுமட்டுமில்லாமல் இன்னும் இவர்கள் இருவருக்கும் அவர் அம்மாதான் பாதுகாப்பா இருக்கிறாராம். அர்ச்சனாவின் கணவர் மிலிட்டரி மேன் என்பதால் அவர் லீவுக்கு மட்டும் தான் ஊருக்கு வருவார்.

எப்பவுமே ஜாலிதான்

எப்பவுமே ஜாலிதான்

இந்த வயதிலும், இவ்வளவு பாப்புலர் ஆனாலும் எல்லா குழந்தைகள் போல சாராவும் ஜாலியாக விளையாடிக் கொண்டுதான் இருக்கிறார். பன்னிரண்டு வயது குழந்தையாக இருந்தாலும் வீட்டில் இவருடைய அறிவைப் பார்த்து பெருமைப்பட்டுக் கொண்டிருக்கும் போது பல ரசிகர்கள் இவரது அழகை பார்த்து பாராட்டி வருகிறார்கள். இவரின் திறமை இவரை அம்மாவை விடவும் இந்த வயதிலேயே அதிகமாக இருக்கிறது என்றெல்லாம் ஏகத்துக்கும் வர்ணித்து வருகிறார்கள்.

அம்மாவுக்கு சூப்பர் டீ

அம்மாவுக்கு சூப்பர் டீ

வீட்டில் அம்மா இருக்கும்போது சாராதான் டீ போட்டு கொடுப்பாராம். அதுவும் அடிக்கடி அவங்க அம்மா கேட்டுக் கொண்டிருக்கும் போது செல்ல சண்டை போட்டுக்கிட்டு டீ போட்டு கொடுப்பாராம் சாரா. தற்போது சாராவும், அர்ச்சனாவும் சேர்ந்து இணையதளத்தில் அட்ராசிட்டி பண்ணிக் கொண்டிருக்கிறார்கள். டிவி சேனல்களிலும் இவர்களின் கலாட்டா அதிகமாக இருக்கும்போது இன்ஸ்டாகிராமில் இவர் ஒரு வீடியோவை வெளியிட்டு இருக்கிறார்.

 வைரலாகும் வீடியோ

வைரலாகும் வீடியோ

அந்த வீடியோவில் ஒரே ஒரு ஒயிட் கலர் டாப்பில் ஐந்து விதமான டிரஸ் போட்டுக் கலக்கி இருக்கிறார். இவரது அழகை பார்த்தும் கியூட்டான நடனத்தை பார்த்து ரசிகர்கள் கமெண்ட் மழையாக பொழிகின்றனர். நல்ல தொகுப்பாளர் மட்டுமல்லாமல், சினிமாவிற்கு அடுத்த கதாநாயகியும் உருவாகி வருகிறார் என்று கூறிவருகிறார்கள். இன்ஸ்டாகிராமில் இவரது வீடியோ வைரலாக பரவி வருகிறது. தாயைப் போல பிள்ளையும் அசத்தட்டும்.. சாதனைகள் படைக்கட்டும்.

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+