தீபக்கை விட்டுவிட்டு அருண் சொன்னதை மட்டும் பெரிதுப்படுத்துறாரு! விஜய் சேதுபதியை விமர்சித்த அர்ச்சனா!

Subscribe to Oneindia Tamil

சென்னை: பிக்பாஸ் சீசன் 8 ஷோவில் தீபக் பேசியதை விட்டுவிட்டு அருண் பேசியதை மட்டும் விஜய் சேதுபதி சுட்டிக் காட்டியது குறித்து நடிகை அர்ச்சனா கடுமையாக விமர்சித்துள்ளார்.

விஜய் டிவியில் வெளியாகி வரும் பிக்பாஸ் தமிழ் சீசன் 8 நிகழ்ச்சியை விஜய் சேதுபதி தொகுத்து வழங்கி வருகிறார். இந்த போட்டியே ஒரு ஸ்கிரிப்டட் ஒன் என எல்லோராலும் விமர்சிக்கப்படுகிறது.

television archana biggboss season 8

இந்த பிக்பாஸ் நிகழ்ச்சி டிஆர்பி ரேட்டிங்கில் முன்னணி இடம் பிடிக்க நிறைய டிரிக்ஸ் பின்பற்றப்படுகிறது. தினமும் சுவாரஸ்யம் கூட்டப்படுகிறது. இதற்காக புதிய புதிய டாஸ்க்கள் வைக்கப்பட்டு வருகின்றன.

விஜய் சேதுபதியும் தன் பங்கிற்கு திடீரென குறிப்பிட்ட சிலரை கடுமையாக விமர்சிக்கிறார். இதை பலர் கண்டித்து வருகிறார்கள். இந்த நிகழ்ச்சியில் இருந்து வாரம் ஒருவர் வெளியேற்றப்பட்டு வருகிறார்கள். அந்த வகையில் ரவீந்தர் சந்திரசேகர், தர்ஷா குப்தா, சுனிதா, அர்னவ், ரியா, வர்ஷினி, சிவக்குமார், ஆனந்தி, சாச்சனா உள்ளிட்டோர் எலிமினேட் செய்யப்பட்டுள்ளனர்.

கடந்த வாரம் தர்ஷிகாவும் சத்யாவும் வெளியேற்றப்பட்டனர். தற்போது வீட்டிக்குள் பவித்ரா, ராயன், ஜாக்குலின், ராணவ், ரஞ்சித், முத்துக்குமரன், மஞ்சரி, சவுந்தர்யா, ஜெஃப்ரி, அருண் ஆகியோர் உள்ளனர். இந்த நிகழ்ச்சி குறித்து பலர் ரிவ்யூ கொடுத்து வரும் நிலையில் பிக்பாஸ் முன்னாள் போட்டியாளரும் அருண் பிரசாத்தின் காதலியுமான நடிகை அர்ச்சனா இந்த நிகழ்ச்சியை விமர்சித்து வருகிறார்.

அந்த வகையில் தற்போது இன்ஸ்டாவில் விஜய் சேதுபதியை கடுமையாக விமர்சித்து ஒரு வீடியோ போட்டு வருகிறார். அந்த வீடியோவில் ஒரு வீடு என்றால் எல்லோரும் சமம்தான். ஆட்கள் குறைந்துவிட்டதால் சமையல் வேலைக்கு நிறைய ஆட்கள் தேவைப்பட மாட்டார்கள். ஆனால் வீட்டின் சதுர அடி என்பது குறையாமல் அப்படியே தான் இருக்கும் என்பதால் சமையல் வேலைக்கு ஆட்களை குறைத்துக் கொள்ளலாம் என அருண் சொன்னார்.

இதில் நிச்சயம் லாஜிக் இருக்கிறது. லேபர் வேலை, ஸ்கில் வேலை என பிரித்து அருண் பேசியதாக சொல்கிறார்கள். அருண் சொன்னது, பிக்பாஸ் வீட்டிற்கு எல்லாரும் வந்திருப்பது கேம் விளையாடத்தான் வேலை செய்ய அல்ல என்பதைத்தான் அருண் அப்படி கூறியிருந்தார்.

லேபர் வேலை செய்பவருக்கு இது போதும் என தீபக் பேசியதை எல்லாம் விட்டுவிட்டார்கள். ஆனால் அருண் எப்படி நினைக்கிறார் என்பதை மட்டும் அவருடைய ஆழ் மனதிற்குள் சென்று அவர் இப்படித்தான் பேசினார் என அவர்களாகவே ஒரு அர்த்தம் கற்பித்துவிட்டார்கள். இதை விஜய் சேதுபதியும் செய்தார். அருண் பயந்துவிட்டதால் அவரால் சரியாக விளக்கம் கொடுக்க முடியவில்லை.

இதை ஏன் இவ்வளவு பெரிதாக்கினார்கள் என தெரியவில்லை. லேபருக்கு இவ்ளோ டீ போதும் என தீபக்கை மட்டும் விட்டுவிட்டார்கள். ஷோ முடிந்த பிறகு கன்பெஷன் ரூமில் பேசியது எல்லாம் எதற்காக என கேள்வி எழுப்பியுள்ளார் அர்ச்சனா. மேலும் இது குறித்த மக்களின் கருத்தை தனக்கு கமென்ட்டில் சொல்லுமாறும் அவர் தெரிவித்துள்ளார். ரவீந்தரும் முத்துக்குமரனுக்கு ஆதரவு அளித்து வருகிறார். நடிகர் விஷ்ணு, முத்துக்குமரனுக்கு எதிரான நிலையை கொண்டிருக்கிறார். இதனால் ரவீந்தருக்கும் விஷ்ணுவுக்கும் கூட சண்டை நடந்தது குறிப்பிடத்தக்கது.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+