இந்தா வாங்கிக்கோ.. செல்ல மகளுக்கு அச்சு கொடுத்த முத்தம்.. தழுதழுக்கும் ரசிகர்கள்!
சென்னை: அம்மாவை குழந்தை போல பார்த்துக் கொள்ளும் குழந்தை கிடைத்தால் பெரிய அதிர்ஷ்டம் தான். அந்த அதிர்ஷ்டம் அர்ச்சனாவுக்கு கிடைத்திருக்கிறது.
காலை முதல் இரவு வரைக்கும் அர்ச்சனாவை கவனித்து வரும் அவருடைய மகள் சாராவை பற்றி தழுதழுத்த குரலில் பேசியிருக்கிறார். இதைப் பார்த்து ரசிகர்களும் ஆறுதல் கூறி வருகின்றனர்.
இன்னும் 2 வாரத்தில் எல்லாம் ஓரளவு சரியாகி விடும் என நம்பிக்கை தெரிவித்த அர்ச்சனாவுக்கு சீக்கிரமா திரும்பி வாங்க என உற்சாகமூட்டும் ரசிகர்கள் தங்களுடைய ஆசீர்வாதங்களையும் அனுப்பி வருகின்றனர்.

அதிர்ச்சியான ரசிகர்கள்
உடல்நிலை சரியில்லாமல் ஆபரேஷன் செய்த அர்ச்சனாவிற்கு இப்போ உடல்நிலையில் ஓரளவு முன்னேற்றமடைந்து வந்து கொண்டிருக்கிறது. அவர் மருத்துவமனையில் இருந்து வந்த பிறகு தன்னுடைய மகள் தன்னை பார்த்துக் கொள்ளும் விதம் பற்றி பேசியிருக்கிறார். என்னிடம் பேசுபவர்களில் பலர் உன்னுடைய மகள் உனக்கு ஒரு அம்மா மாதிரி என்று கூறியிருக்கிறார்கள். ஆனால் இந்த 4 வாரத்தில் தான் அதை முழுமையாக உணர்ந்திருக்கிறேன் என்று தழுதழுத்த குரலில் பேசி இருக்கிறார். எப்போதும் தன்னுடைய கம்பீரமான குரலினாலும் எதற்கும் பயப்படாத துணிச்சலான துடிதுடிப்பு கேரக்டர்களும் அனைவரையும் வசீகரித்த இவர் இப்போ இந்த மாதிரி பேசியிருப்பதை கேட்டதும் ரசிகர்களுக்கு மனக் கஷ்டம் ஏற்பட்டிருக்கிறதாம்.

சீக்கிரமா வாங்க அர்ச்சனா
இவருக்கு சீக்கிரத்தில் உடல்நிலை சரியாகி மீண்டும் பழைய அர்ச்சனாவாக திரும்பி வரவேண்டும் என்று ரசிகர்கள் ஆர்வமுடன் காத்திருக்கின்றனர். அவரும் அதையே தான் விரும்புகிறார். 20 வருடமாக ரெஸ்ட் இல்லாமல் ஓடிக் கொண்டிருந்ததால் இப்போ வீட்டில் உட்கார்ந்து கொண்டிருக்கிறேன். ஆனாலும் இது எனக்கு கொஞ்சம் கூட பிடிக்கவில்லை என்று கூறியிருக்கிறார். சீக்கிரத்தில் பழைய அர்ச்சனாவாக வந்துவிடுவேன் என்று ரசிகர்களுக்கு கூறியிருக்கிறார். அவருடைய ரசிகர்கள் மட்டுமல்லாமல் குடும்பத்தினரையும் இதையேதான் விரும்புகிறார்கள். அதனாலேயே அவரை வீட்டில் ஒரு குழந்தை போல் பார்த்து வருகிறார்கள்.

அம்மாவைப் போலவே பிள்ளையும்
அதுவும் ஒரு அம்மா தன் குழந்தையைப் பார்ப்பது போல ஒரு குழந்தை அம்மாவைப் பார்த்துக் கொண்டிருப்பதை பார்த்து பலர் அர்ச்சனாவின் மகள் சாராவுக்கு வாழ்த்துக்களையும் கூறிவருகின்றனர். சாராவை அனைவருக்கும் அவருடைய சிறுவயதில் இருந்தே தெரியும். அவரும் அர்ச்சனாவை போலவே துறுதுறுவென கேரக்டர் தான். தைரியமான பெண்தான் ,குழந்தையாக இருந்தாலும் மெச்சூரிட்டி அதிகமாக தான் இருக்கிறார். அதனால்தான் அவருடைய அம்மாவான அர்ச்சனாவுடன் ஜீ தமிழில் ஒளிபரப்பான சூப்பர் மாம் நிகழ்ச்சியை தொகுத்து வழங்கி இருந்தார். அந்த நிகழ்ச்சியை தொகுத்து வழங்கும் போது பலருடைய மனதையும் கவர்ந்து விட்டார். அடடா அழகில் மட்டுமல்ல அறிவிலும் அர்ச்சனாவை மிஞ்சி விடுவார் போல என்று கூறிவந்தனர். தாய் எட்டடி பாய்ந்தால் குட்டி பதினாறு அடி பாயும் என்று சும்மாவா சொல்லியிருக்கிறார்கள். இப்போதும் இவர் காலையிலிருந்து மாலை வரை செய்யும் செயல்களை பார்த்து இப்படி ஒரு பெண் குழந்தை கிடைக்க வேண்டும் என்று பலரும் ஆசைப்பட்டு வருகின்றனர்.

மாறாத அர்ச்சனா
அர்ச்சனா ஜீ தமிழில் பல நிகழ்ச்சிகளை தொகுத்து வழங்கி கொண்டிருந்தாலும் தற்போது விஜய் டிவியில் தொகுப்பாளராக களம் இறங்கியிருக்கிறார். இவர் விஜய் டிவியில் ஒளிபரப்பான பிக் பாஸ் நிகழ்ச்சிக்கு பிறகு தான் அதிகமான நெகட்டிவர்ஸ்களை சம்பாதித்து விட்டார். அதற்கு முன்பு வரைக்கும் இவர் தொகுப்பாளர்களில் முக்கியமான இடத்திலும் ரசிகர்களின் மனதில் நல்ல ஒரு இடத்திலும் இருந்து வந்தார். ஆனால் இந்த பிக்பாஸ் நிகழ்ச்சிக்கு பிறகு இவருடைய கேரக்டர் ரொம்பவே அடிபட்ட ஆரம்பித்துவிட்டது. ஆனால்
அதைப்பற்றி கண்டுகொள்ளாத அர்ச்சனா நான் எப்போதும் போல தான் இருக்கிறேன். என்னை பார்க்கும் பார்வை உங்களுடையது அதில் குறை இருந்தால் நான் ஒன்றும் செய்ய முடியாது என்று கூறியிருக்கிறார்.

அந்தத் தப்பை மட்டும் செய்யாதிங்க
தற்போது இக்கட்டான சூழ்நிலையிலும் தன்னுடைய ரசிகர்களுக்கு மோட்டிவேஷனல் ஸ்பீச் ஒன்று கொடுத்திருக்கிறார். எப்போதுமே தன்னுடைய வாழ்க்கையில் கடைசி காலத்தில் எல்லோரும் தூங்க தான் போகிறோம். அந்த அமைதியான தூக்கத்தை பெறுவது வரைக்கும் நாம் ஓய்வில்லாமல் ஓடிக்கொண்டே இருக்கவேண்டும். அமைதியாக ஓரிடத்தில் இருந்துவிட்டால் நமக்குள் சோர்வு வந்து அது நம்மளையே படிப்படியாக அழித்துவிடும். அந்த தப்ப மட்டும் யாரும் செய்யாதீங்க ,ஓடிக்கிட்டே இருங்க. சந்தோஷமாக துயரங்களை எல்லாம் தட்டி தூக்கிவிட்டு சென்று கொண்டே இருக்கவேண்டும் என்று கூறியிருக்கிறார். இது இந்த கஷ்டமான சூழ்நிலையிலும் அவருடைய மன தைரியம் வெளிப்படுகிறது என்று ரசிகர்கள் கூறி வருகின்றனர். எப்படியோ உடம்பை நன்றாக கவனித்து சீக்கிரமாக திரும்பி வாங்க. இனி கொடுக்கும் கம்பேக் இவருக்கு பெரிய திருப்புமுனை தான்.












Click it and Unblock the Notifications