பிக் பாஸ் கொண்டாட்டத்தில் கலந்துக்காத காரணம்! மாயா, பிரதீப் தான்.. விளக்கம் கொடுத்த அர்ச்சனா
சென்னை: பிக் பாஸ் தமிழ் சீசன் 7 நிகழ்ச்சி சமீபத்தில் முடிவடைந்தது. இந்த நிலையில் இந்த சீசனில் டைட்டில் வின்னராக தேர்வான அர்ச்சனா முதல் முறையாக பிக் பாஸ் நிகழ்ச்சி பற்றியும் அந்த நிகழ்ச்சிக்கு பிறகு தன்னுடைய மனநிலை குறித்தும் பேட்டி ஒன்றில் வெளிப்படையாக பல விஷயங்களை பேசி இருக்கிறார்.
அதில் பிக்பாஸ் நிகழ்ச்சியில் தான் வெற்றி பெற்ற பிறகு பிக் பாஸ் கொண்டாட்டத்தில் எதனால் கலந்து கொள்ளவில்லை என்பது குறித்து விளக்கம் கொடுத்திருக்கிறார். அதோடு இந்த பிக் பாஸ் தமிழ் சீசன் 7 நிகழ்ச்சியில் யார் ஸ்ட்ராங்கான போட்டியாளர்கள் என்பது பற்றியும் அர்ச்சனா பேசி இருக்கிறார். அது பற்றி விரிவாக பார்க்கலாம்.

அந்த வகையில் பிரம்மாண்டமாக தொடங்கப்பட்ட பிக் பாஸ் தமிழ் சீசன் 7 நிகழ்ச்சி சில வாரங்களுக்கு முன்பு முடிவுக்கு வந்தது. அந்த நிகழ்ச்சியில் டைட்டில் விட்டராக அர்ச்சனா தேர்வாகி இருந்தார். இது இப்ப வரைக்கும் சமூக வலைத்தளத்தில் அதிகமாக விமர்சிக்கப்பட்டு வருகிறது. அர்ச்சனா டைட்டில் ஜெயித்தது சரி என்று ஒரு தரப்பினர் கருத்து கூறி வருகின்றனர். இன்னொரு தரப்பினர் அர்ச்சனா பிஆர்டீம் வைத்து டைட்டில் ஜெயித்து விட்டார் என்று இன்னொரு குற்றச்சாட்டையும் சிலர் வைத்து வருகின்றனர்.
இப்படியான நிலையில் பிக் பாஸ் நிகழ்ச்சியை பற்றி அர்ச்சனா பேட்டியில் பேசியிருக்கிறார். அதில் பலர் நான் பிக் பாஸ் நிகழ்ச்சியில் டைட்டில் வெற்றி பெற்ற பிறகும் பிக் பாஸ் கொண்டாட்டத்தில் கலந்து கொள்ளவில்லை என்று கேள்வி எழுப்பி கொண்டு இருக்கிறார்கள். ஆனால் அதற்கு சில முக்கியமான காரணங்கள் உண்டு. பிக் பாஸ் டைட்டில் எனக்கு கொடுத்தாலும் அங்கே சில பிரச்சனைகள் நடந்தது.
அது என்னவென்று எனக்கே புரியவில்லை. அந்த நேரத்தில் என்னுடைய பெற்றோர் நீ அதில் கவனத்தை செலுத்தாதே என்று சொல்லிவிட்டார்கள். உள்ளிருக்கும் சிலர் சொன்ன வார்த்தைகள் எனக்கு எதுவும் புரியவில்லை. காரணம் அங்கு பாடல் சத்தமாக ஒழிக்கப்பட்டு கொண்டு இருந்தது. அதனால் சிலர் பேசுவதே என்னால் புரிந்து கொள்ள முடியாத நிலையில் நான் இருந்து கொண்டிருந்தேன்.
அந்த நேரத்தில் அங்கே பிக் பாஸ் கொண்டாட்டமும் நடைபெற்றது. அதில் என்னுடைய பெற்றோர் கலந்து கொள்ள வேண்டாம், நாங்கள் நிகழ்ச்சியை பற்றி காட்டுவதை மட்டும் நீ பார்த்தால் போதும் என்று சொல்லிவிட்டார்கள். அவர்கள் பிக் பாஸ் நிகழ்ச்சிக்கு பிறகு என்னிடம் சில வீடியோக்களை காட்டினார்கள்.
நான் அதைத்தான் பார்த்திருக்கிறேனே தவிர இப்ப வரைக்கும் முழு எபிசோடு இன்னும் பார்க்கவில்லை. அதுபோல இந்த சீசனில் ஸ்ட்ராங்கான போட்டியாளர் என்றால் அது பிரதீப் தான். நான் இந்த நிகழ்ச்சிக்கு போவதற்கு முன்பே நிகழ்ச்சியை பற்றி நன்றாக பார்த்து இருந்தேன். அதில் பிரதீப் தான் ஸ்ட்ராங்கான போட்டியாளராக இருந்தார்.
நான் உள்ளே போனபோது கூட அடுத்த வாரத்தில் உன்னை எல்லா போட்டியாளர்களோடும் பேசவிட்டு அவர்களை வெளியே அனுப்பி போகிறேன் பாரு என்று என்னிடம் சொல்லி இருக்கிறார். நான் உள்ளே இருக்கும்போது எனக்கு இரண்டு மூன்று சுடிதார் ஸ்டிச் செய்து தந்திருந்தார் அதை எல்லாம் நான் மறக்க மாட்டேன் என்று சொல்லி இருந்தேன். அதுபோல இன்னொரு ஸ்ட்ராங்கான போட்டியாளர் என்றால் அது மாயா தான் என்று அந்த பேட்டியில் அர்ச்சனா பேசியிருக்கிறார்.
அதுபோல நான் நிகழ்ச்சியில் ஜெயித்த பிறகும் மக்களுக்கு எந்த நன்றியும் சொல்லவில்லை என்று பலர் பீல் பண்ணிக் கொண்டிருப்பதாக என்னுடைய பெற்றோர் என்னிடம் சொன்னார்கள். ஆனால் நான் எதற்காக அப்படி போஸ்ட் வெளியிடவில்லை என்றால் மக்களிடம் நேரடியாக பேச வேண்டும் என்று தான் நான் பொறுமையாக இருந்தேன். நாலு வார்த்தை டைப் பண்ணி போஸ்ட் போட்டால் அது மக்கள் எனக்கு செய்த உதவிக்கு கைமாறாக இருக்காது என்று நான் பீல் பண்ணினேன். அதனால் தான் நான் எந்த போஸ்ட்டும் போடவில்லை என்றும் அர்ச்சனா பேசியிருக்கிறார்.
-
இனிமேலாவது வீரவசனம் பேசாமல் மாற்றத்தைக் கொடுங்கள் CM விஜய் சார்! அன்பில் மகேஷ் பதிவு -
அவசரப்பட்டு கையெழுத்து போட்டுட்டோமோ? முட்டி மோதும் 3 அதிமுக ’மாஜி’ எம்எல்ஏக்கள்! தவெக கொடுத்த ஆஃபர்! -
ஸ்டாலினின் எச்சரிக்கை.. பதறிப்போய் ஆளை தூக்கிய விஜய்.. பயத்தில் அவசர அவசரமாக வியூகம்.. நடந்தது என்ன? -
மும்மொழி.. மத்திய அரசுக்கு எதிராக அண்ணாமலை முதல் முறையாக கருத்து? -
பிரதமர் மோடியை வணங்கி.. பத்மஸ்ரீ விருது பெற்ற சிலம்ப கலைஞர் பழனிவேல்! தமிழருக்கு பெரிய கவுரவம் -
மாசம் ரூ.10000 கோடி செலவு.. படிச்சு படிச்சு மோடி சொல்ல இதுதான் காரணம்..! -
அண்ணன் வர்றாரு! என்னப்பா ஆரம்பிச்சுருவோமா? அண்ணாமலை ஆரம்பிக்கும் ’பார்ட்டி’.. இதுதான் கொடி, சின்னமா? -
விஜய் செய்த சாணக்கியத்தனம்.. சத்தமில்லாமல் வெளியேற்றப்பட்ட கம்யூனிஸ்ட்கள்! இதை யாரும் கவனிக்கலையே! -
உதயநிதி வீட்டை கேட்கும் ஆதவ் அர்ஜுனா.. இந்த வீடுதான் வேண்டும்.. கோட்டையில் நீடிக்கும் மல்லுக்கட்டு -
இசக்கி சுப்பையா யார் தெரியுமா? அடுத்து தாவும் அரசியல் புள்ளி இவரா? தவெக பக்கம் சாயும் அதிமுக கோட்டை -
மு.க.ஸ்டாலின் - எடப்பாடி பழனிசாமி இணைவார்கள்!ஆருடம் கணித்த.. ஆதவ் அர்ஜுனா! -
ஈரான் மக்களுக்கு விடிவுகாலம் பிறந்தது.. 87 நாட்களுக்கு பின்பு.. ஈரான் அதிபர் வெளியிட்ட அறிவிப்பு!












Click it and Unblock the Notifications