பானுப்பிரியா டக்னு கலங்கி சொன்ன அந்த சொல்.. பரிதாப பானுப்ரியா.. இப்படியும் ஒரு நடிகை? பிரபலம் பளீர்
சென்னை: நேரம் தவறாமை, காலம் தவறாமை போன்றவற்றில் திரையுலகில் நல்ல பெயரை பெற்ற நடிகை பானுப்பிரியா, பணத்தை பாதுகாக்க தெரியாமல் சொத்தை இழந்து நின்ற பரிதாபத்துக்குரியவர் என்று தெரிவித்துள்ளார் மூத்த பத்திரிகையாளர் தமிழா தமிழா பாண்டியன்.
நடிகை பானுப்பிரியா குறித்து Behind Cinema என்ற யூடியூப் சேனலுக்கு பேட்டி தந்துள்ள மூத்த பத்திரிகையாளர் தமிழா தமிழா பாண்டியன், அதில் பானுப்பிரியாவின் திறமைகளையும், அவரது நடிப்பாற்றலையும், சோக வரலாற்றையும் பதிவு செய்துள்ளார். அதன் சுருக்கம்தான் இது:

பானுப்பிரியா: "கலாசேத்ரா போல பெரிய நாட்டியப்பள்ளி ஒன்றை நிறுவணும் என்று சின்ன வயசிலிருந்தே ஆசைப்பட்டார் பானுப்பிரியா. அது இப்போதுவரை நிறைவேறாமலேயே போயிருச்சு..
பானுப்பிரியாவுக்கு படிப்பு ஏறல.. 13, 14 வயதில் பள்ளியை விட்டே நிற்க வேண்டியதாயிற்று.. கலை மீதுள்ள ஆர்வத்தால், பானுப்பிரியாவை கூட்டிட்டு அவங்கம்மா ஏறாத சினிமா கம்பெனிகள் இல்லை.. சான்ஸ் கேட்டு எல்லா கம்பெனிகளுக்கும் போறாங்க.. எல்லா திரைப்பட நடிகர்கள், நடிகைகள் வீட்டுக்கும் மகளை கூட்டிட்டு போறாங்க.
ஸ்ரீவித்யா: அப்படித்தான் நடிகை ஸ்ரீவித்யா கண்ணில் படறாங்க பானுப்பிரியா.. அப்போ 17 வயசு.. பானுப்பிரியாவை பார்த்ததுமே, "இந்த பெண்ணுக்கு பெரிய எதிர்காலம் இருக்கு.. துல்லியமாக எதையும் தெரிந்து கொள்கிறாள்.. கலைகளிலும் நல்ல ஆர்வம் இருக்கு, இசையிலும் ஆர்வம் இருக்கு, இசையிலும் ஆர்வம் இருக்கு , நடனத்திலும் ஆர்வம் இருக்கு, திரைப்பட துறையிலும் ஆர்வம் இருக்கு
மிகப்பெரிய இடத்துக்கு வருவார்" என்று கணித்து கூறியிருந்தார்.
பானுப்பிரியாவின் 17 வயதில், ஸ்ரீவித்யா இப்படி சொன்னது பிற்காலத்திலும் ஸ்ரீவித்யா சொல்லும் நிலைமை வந்தது. "தூறல் நின்னு போச்சு" படத்தில் ஹீரோயினாக முயற்சிக்கும்போது, மேக்கப் டெஸ்ட்டை பார்த்துவிட்டு, பாக்யராஜ் ஓகே சொல்லலயாம்.. இதனால் மனம் உடைந்த பானுப்பிரியா, தூறல் நின்னு போச்சு படத்தில் நான்தான் ஹீரோயின் என்று எல்லார்கிட்டயும் சொல்லிட்டேன்.. அந்த படம் ரிலீஸ் ஆகும்வரை வெளியே தலைகாட்ட மாட்டேன்.. டான்ஸ் கிளாஸ் போக மாட்டேன் என்று தன் அம்மாவிடம் அடம் பிடித்துள்ளார்.
முதல் படம்: இதற்கு பிறகுதான், "மெல்லப் பேசுங்கள்" படத்தில் வாய்ப்பு கிடைத்தது.. ஆனால், பணம் தோல்வி அடைந்தது.. அந்த படத்தில் சம்பளம் இல்ல, உழைப்பையும் கொட்டி வீணாகிவிட்டது. அந்த படம் நடித்து 6 மாத காலம் ஆகியும் முன்னேற்றம் இல்லை
இதனால், சான்ஸ் கேட்டு, மறுபடியும் ஆந்திராவுக்கே போயிட்டாங்க.. அதற்கு பிறகுதான், தமிழ், தெலுங்கு என அடுத்தடுத்த படங்கள் வெளியாகின.. கண்ணழகி என்ற பட்டத்தை ரசிகர்கள் வழங்கினார்கள்.. நல்ல உயரம், தன்னுடைய பார்வையால், நடையால், ரசிகர்களை இழுத்தார்..
பானுப்பிரியா: "தளபதி" படத்தில் விதவை கதாபாத்திரத்துக்கு வசனத்தைவிட, முகபாவனைதான் முக்கியம். இந்த முகபாவனைகளை பானுப்பிரியாவை தவிர வேறு யாராலும் செய்யமுடியாது என்று நம்பி, ரஜினி, மம்முட்டி, மணிரத்னம் என 3 பேருமே பானுப்பிரியாவின் கால்ஷீட்டுக்காக காத்திருந்தனர்.. கடைசியில் தளபதி படம், மிகப்பெரிய இடத்தை பானுப்பிரியாவுக்கு பெற்று தந்தது.
நேரம் தவறாமை, காலம் தவறாமை போன்றவற்றில் நல்ல பெயரை பெற்ற பானுப்பிரியா, பணத்தை பாதுகாக்க தெரியாமல், குடும்பத்தினரின் ஊதாரித்தனமாக செலவுகளுக்கு தானும் பலியாகி, குடியிருக்க வீடும் இல்லாமல், ஏவிஎம் ஸ்டுடியோ வராண்டாவில் காத்திருக்கும் நிலைமை வந்தது.. பிறகு ஏவிஎம்மிலேயே பானுப்பிரியாவுக்கு அறை ஒன்று ஒதுக்கப்பட்டது. அங்குதான் நீண்ட காலம் தங்கியிருந்தார் பானுப்பிரியா.
கணவர் மரணம்: கணவர் மாரடைப்பால் உயிரிழந்துவிட, குடும்பத்தினரின் தொடர்பும் இல்லாமல், சொத்துக்களும் கையை விட்டு போய், வறுமை கோட்டுக்கு கீழே நிலைமை வந்துவிட்டது. இதற்கு பிறகுதான, செல்லமே, பொல்லாதவன் என படங்களில் நடிச்சாங்க..
சொந்த படம், ரியல் எஸ்டேட், தம்பியை ஹீரோவாக வைத்து படம் எடுத்து, மொத்த சொத்துக்களும் போய்விட்டது. கடைசியில் நினைவாற்றலும் போய்விட்டது. இதனால் டயலாக் பேச முடியாமல் அவமானப்பட்டுள்ளார்.. "இந்தம்மாகூட ஏன் எங்களை நடிக்க வெக்கறீங்க? ஒன்னு அவங்களை மாத்துங்க, அல்லது எங்களை மாத்துங்க" என்று சூட்டிங்கில் இருந்தவர்கள் சொல்ல, பானுப்பிரியா அதைக்கேட்டு கண்ணீரோடு வெளியேறினார்.
கண் பார்வை: ஒருமுறை பானுப்ரியா சொன்னார், "என்னை போல யாரும் ஊதாரியா வாழாதீங்க.. இப்போது என்னுடைய கண் பார்வை சரியா இல்லை.. காது சரியா கேக்கல.. உடல் பருத்து போயிருச்சு.. இதெல்லாம் எனக்கு நானே ஏற்படுத்திக் கொண்ட சில தீய பழக்கங்களால் வந்தவை.. இதனால் என் சொத்தை இழந்தேன்.. இளைய தலைமுறைகள், என்னை முன்மாதிரியாக வைத்து கொள்ள வேண்டும். உங்கள் சொத்துக்களை எக்காலத்திலும் யாரிடமும் இழக்கக்கூடாது. இதுக்கு நான்தான் ஒரு உதாரணம்' என்றார் பானுப்பிரியா.
அன்றைய காலங்களில் தமிழ், தெலுங்கு என முன்னணி நடிகையாக வலம்வந்து, இன்று அனைத்தையும் இழந்து அனாதையாக நிற்கிறார் பானுப்பிரியா.. சினிமாவில் எத்தனையோ நடிகைகள் பாவம்.. நடிகைகள் சாவித்திரி பாவம் , சில்க் பாவம், ஷோபா பாவம், பானுப்பிரியாவும் பாவம்" என்று பல்வேறு விஷயங்களை இந்த பேட்டியில் தெரிவித்துள்ளார்.
-
விவசாயக் கடன் தள்ளுபடி.. பொய் சொல்லி ஏமாற்ற மாட்டேன்! விவசாயிகளே கவலைப்படாதீங்க.. விஜய் உத்தரவாதம் -
வளைகுடாவில் இந்தியாவிற்கு கிடைத்தது மாற்றுப்பாதை.. ஓமனால் பெரிய குட்நியூஸ் -
கட்டப்பா கூட ஒரு டைம்தான் குத்துனாரு.. இப்படி தினம் தினம் பண்ணுறீங்களே! கோபத்தின் உச்சியில் ஸ்டாலின் -
DMART முதலாளிக்கு இப்படியொரு பிஸ்னஸ் இருக்கா.. ஒரு வீட்டுக்கு ரூ.27.5 லட்சம் .. ஆடிப்போன மும்பை மக்கள்! -
தமிழக அமைச்சரவையில் சீனியாரிட்டி லிஸ்ட்.. பின் தள்ளப்பட்ட செங்கோட்டையன்.. வன்னி அரசுக்கு எந்த இடம் -
உதயசூரியனில் போட்டியிட்ட 2 மதிமுக எம்எல்ஏக்கள் ராஜினாமா செய்ய முடிவு? திமுகவுக்கு பெருத்த ஷாக்! -
MDMK: எம்எல்ஏக்கள் ராஜினாமா இல்லை.. புது வியூகம் எடுக்கும் மதிமுக? திமுகவுக்கு கல்தா கன்பார்ம்? -
ஆனானப்பட்ட அமெரிக்காவுக்கே இந்த நிலைமையா..? அப்போ இந்தியா? -
அண்ணாமலை ஒரு பிராண்டு.. விட்றாதீங்க! லெட்டரைப் பார்த்ததும் பதறிப் போன டெல்லி! குவியும் ஆஃபர்கள்! -
கோட்டைச்சாமி.. எந்திரி.. இப்போ நீதான் முதலமைச்சர்.. இன்னமும் பிரச்சாரமா? விஜய்யை கிண்டலடித்த திமுக -
வாசலுக்கு வந்த புகார் பெட்டி.. இனி தலைமை செயலகத்தில் எல்லோருக்கும் அனுமதி இல்லை.. தவெக அரசு கறார் -
முதல்வர் விஜய்யே நினைத்தாலும் பரந்தூர் விமான நிலையத்தை ரத்து செய்வது மிக கடினம்.. ஏன் தெரியுமா?












Click it and Unblock the Notifications