ஓட்டல் ரூமில் ஜெயம் ரவியை ரகசியமாக வீடியோ எடுக்க சொன்னாராம் ஆர்த்தி.. பிரபலம் படார்

Subscribe to Oneindia Tamil

சென்னை: ஜெயம் ரவி - ஆர்த்தி குடும்ப சண்டை வெடித்துள்ள நிலையில், இந்த விவகாரம் குறித்து மூத்த பத்திரிகையாளர் சபிதா ஜோசப் தன்னுடைய கருத்துக்களை வெளிப்படுத்தியிருக்கிறார். இதுதான் கடந்த 2 நாட்களாகவே இணையத்தில் வைரலாகி கொண்டிருக்கிறது.

ஜெயம் ரவி, சில தினங்களுக்கு முன்பு தன்னுடைய குடும்ப பிரச்சனையை விலாவரியாக வெளிப்படுத்தியிருந்தார்.. இதையடுத்து, ஆர்த்திக்கு ஆதரவு தெரிவித்து வந்த பலரும், ஜெயம் ரவியின் பக்கம் சாய்ந்தார்கள்.. ஆனால், இதற்கு நீண்ட நாட்களாக பதிலளிக்காமல் இருந்த ஆர்த்தி, இறுதியில் ஒரு அறிக்கையை வெளியிட்டிருந்தார்.. எனினும், சோஷியல் மீடியாவில் ஜெயம் ரவிக்கே ஆதரவுகள் கூடிவருகின்றன.

television jayam ravi aarthi

ஜெயம் ரவி: அந்தவகையில் மூத்த பத்திரிகையாளர் சபிதா ஜோசப் Accord voice என்ற சேனலுக்கு அளித்த பேட்டியில், ஜெயம் ரவிக்கே தன்னுடைய ஆதரவை தெரிவித்துள்ளார்.. அதன் சுருக்கம்தான்:

"ஆர்த்தி - ஜெயம் ரவியை ஆரம்பத்தில் கோர்த்துவிட்டதும், கல்யாணம் செய்ய காரணமாக இருந்ததும் நடிகை குஷ்புதான்.. ஆனால், ஜெயம் ரவியின் அப்பாவான எடிட்டர் மோகனுக்கு இந்த திருமணத்தில் விருப்பம் இல்லை.. அதனால், ஆர்த்தியை திருமணம் செய்ய வேண்டாம் என்று சொல்லியிருக்கிறார்.

தற்கொலை: ஆனால், ஜெயம்ரவி, இந்த திருமணத்துக்கு சம்மதிக்காவிட்டால் தற்கொலை செய்து கொள்ள போவதாக கூறியிருக்கிறார். அதற்கு பிறகுதான் இந்த திருமணம் நடந்துள்ளது. தம்பதி இருவரும் ஆரம்பத்தில் நல்லாதான் இருந்திருக்காங்க.. "நான் வாந்தி எடுக்கும்போது, அதை கையிலேயே பிடிச்சிக்கிட்டார், என்னை தாங்கு தாங்குன்னு தாங்கினார்" என்றெல்லாம் ஆர்த்தி ஒரு பேட்டியில் சொல்லியிருந்தார். அதற்கு பிறகுதான் பிரச்சனை வெடித்துள்ளது.

இந்த நேரத்தில்தான், தன்னுடைய அம்மாவுக்கு ஒரு படம் நடித்து தருமாறு ஆர்த்தி கேட்டுள்ளார்.. இதற்கு ஜெயம் ரவியும் சம்மதிக்கவே, மொத்தம் 3 படம் தயாரிக்கப்பட்டுள்ளது.. இதில், "அடங்க மறு" என்ற படம் மட்டும் சுமாராக ஓடியது. மற்ற இரண்டுமே பிளாப் ஆகிவிட்டது.

மருமகன்: பொதுவாக, மருமகன் நன்றாக இருக்க வேண்டும் என்று நினைக்கும் மாமியார்கள், நிச்சயம் ஒரு அம்மாவாகத்தான் இருப்பார்கள்.. ஆனால், ஜெயம் ரவி விஷயத்தில் அடிக்கடி குத்திக்காட்டி பேசி, அவரை கஷ்டப்படுத்தியிருக்கிறார்கள். இப்படி குத்திக்காட்டி பேசும்போது ஜெயம் ரவி மிகவும் நொந்துபோயிருக்கிறார்.. நடிப்பதற்கு பணமும் தராமல், வேலையை மட்டும் வாங்கிக்கிட்டு, கிண்டல் கேலி செய்தால் எப்படி?

தன்னுடைய கல்யாணத்துக்கு முன்பு ஜெயம்ரவி, தன் அம்மாவுடன் சேர்ந்துதான் ஜாயின் அக்கவுண்ட்தான் வைத்திருந்தார்.. திருமணத்துக்கு பிறகு, மனைவியுடன் சேர்ந்து ஜாயின் அக்கவுண்ட் துவங்கினார்.. அதற்கு பிறகுதான், 4 கார்கள் உட்பட பல்வேறு சொத்துக்களை வாங்கியிருக்கிறார்.

உச்சக்கட்ட அவமானம்: ஆர்த்தி எப்போதுமே தன்னுடைய மாமனார் வீட்டுக்கு போக மாட்டாங்க.. அப்படியே போனாலும், கொஞ்ச நேரத்தில் திரும்பி வந்துடுவாங்க,.. ஜெயம் ரவியின் வாட்ஸ்அப்புக்கு, ஏதாவது நடிகையின் போட்டோ வந்தால், இந்த நடிகை யார்? இந்த நடிகை ஏன் வாட்ஸ் அப்பிற்கு போட்டோ அனுப்ப வேண்டும்" என்று கேட்டு ஜெயம் ரவியிடம் தகராறு செய்வாராம்..

வழக்கமாக நடிகர், நடிகைகள் ஒருவருக்கொருவர் சந்தித்து கொண்டால், கை குலுக்குவது, ஹக் பண்ணுவது இயல்பான விஷயமே.. ஆனால், இதையும் சந்தேகப்பட்டுள்ளார் ஆர்த்தி.

டச்சப் வீடியோ: டச்சப் பாய், மேக்கப்மேன் இப்படி யாராவது ஒருவரை, ஜெயம் ரவி தங்கியிருந்த ஓட்டல் ரூமுக்குள் அனுப்பி உளவு பார்க்க சொல்வாராம் ஆர்த்தி... நோட்டம் விடச்சொல்வாராம்.. அந்த ரூமுக்குள் போயிட்டு வீடியோ எடுத்து தன்னுடைய செல்போனுக்கு அனுப்ப சொல்வாராம். அதனால்தான் ஜெயம் ரவி உச்சக்கட்ட வெறுப்படைந்துள்ளார்" என்றெல்லாம் இன்னும் நிறைய விஷயங்களை பேசியிருக்கிறார் சபிதா ஜோசப்.

தொடர்ந்து சபீதா பேசும்போது, 'ஜெயம் ரவி நல்ல குடும்பத்தை சேர்ந்தவர்.. இவரது அப்பா மோகன் சார், ஒரு முஸ்லீம்.. அம்மா ஒரு தெலுங்கு பிராமண பெண்.. ஆனால், கல்யாணத்துக்கு பிறகு தன்னுடைய மனைவியை BA வரை படிக்க வைத்திருக்கிறார் மோகன் சார்.. ஜெயம்ரவிக்கு இயல்பாகவே, தன்னுடைய அம்மா, அப்பா, அண்ணன் அக்கா மீது தனிப்பாசம் வைத்திருப்பவர்.. ஆனால், கால்ஷீட்டை ஆர்த்தி பார்க்க துவங்கிவிட்டார். இதனால் அவரது அண்ணன் எடுக்க போகும் "தனி ஒருவன் 2" படத்துக்கு கால்ஷீட் தரவில்லையாம்.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+