துணிச்சலான மணிமேகலை.. பொறாமைக்கார பிரியங்கா.. சீக்ரெட் "குறும்படம்" வரப்போகுதாமே.. பிரபலம் அதிரடி

Subscribe to Oneindia Tamil

சென்னை: விஜய் டிவியில் நுழைந்தாலே, உலகப்புகழ் அடையலாம். பணம், பேர் என எல்லாமே கிடைக்கும். ஆனால், எல்லாவற்றையும் தூக்கியெறிந்திருக்கிறார் மணிமேகலை என்று கூறியிருக்கிறார் மூத்த பத்திரிகையாளர் செய்யாறு ரவி.

குக் வித் கோமாளி நிகழ்ச்சியின் 5வது சீசனை தொகுத்து வழங்கி வந்த மணிமேகலை, அதிலிருந்து விலகுவதாக அறிவித்து, இதற்கான சில காரணங்களையும் வெளிப்படுத்தியிருந்தார்... நிகழ்ச்சி தொகுப்பாளர் ஒருவரின் ஆதிக்கமே தன்னுடைய முடிவுக்கு காரணம் என்று மணிமேகலை மறைமுகமாக சொல்லியிருந்தார்.

Television Priyanka Manimegalai

பிரபலங்கள்: எனினும் அவர் குறிப்பிடுவது பிரியங்காவைதான் என்று இணையவாசிகள் பதிவிட்டும், கருத்து தெரிவித்தும் வருகிறார்கள். விஜய் டிவி பிரபலங்கள் பலர், மணிமேகலைக்கு ஆதரவாக கமெண்ட் பதிவிட்டு வந்த நேரத்தில், திடீரென அப்படி கமெண்ட் செய்தவர்களும் தங்களது கமெண்ட்டை நீக்கி விட்டார்கள். எனினும், மணிமேகலை விவகாரம் பற்றி எரிந்து வரும்நிலையில், யூடியூப் சேனல்கள் முழுக்க இது தொடர்பான விவாதங்களே பெரும்பாலும் எழுந்து வருகின்றன.

அந்தவகையில், மூத்த பத்திரிகையாளர் செய்யாறு ரவி, "கம்பெனி ஆர்ட்டிஸ்ன்னு சினிமாவில் இருப்பதை போல, விஜய் டிவியின் கம்பெனி ஆர்ட்டிஸ்த்தான் பிரியங்கா... எங்கே திரும்பினாலும் பிரியங்காதான்.. அதுக்காக திறமைசாலி இல்லைன்னு சொல்லிட முடியாது.. உண்மையிலேயே பிரியங்கா திறமைசாலிதான்.. இந்த நேரத்தில் பிரியங்காவின் ஒரு பேட்டியை சொல்ல வேண்டியிருக்கிறது.

மிடில் கிளாஸ்: அந்த பேட்டியில் பிரியங்கா சொல்கிறார், "நான் சாதாரண மிடில் கிளாஸ் பேமிலிதான்.. எத்திராஜ் காலேஜில் படிச்சப்போ, அங்கிருந்து 10 ரூபாய் தந்து ஷேர் ஆட்டோவில், எழும்பூர் ரயில்வே ஸ்டேஷனுக்கு போவேன்.. மறுபடியும் 10 ரூபாய் தந்து காலேஜ் வருவேன்.

என்னைக்காவது ஒருநாள் என்னுடைய தோழி, பென்ஸ் காரில் வந்து, என்னை ரயில்வே ஸ்டேஷனில் டிராப் பண்றதா சொல்லி கூட்டிட்டு போவாள். அப்போது காரில் நான் உட்கார்ந்ததுமே, இதுபோல நாமளும் எதிர்காலத்தில் கார் வாங்க வேண்டும் என்ற கனவு எனக்கு இருந்தது. வெறும் எண்ணமாக மட்டுமல்லாமல், அதற்குரிய செயல்பாட்டிலும் இறங்கினேன்.

போட்டோக்கள்: இதோ அதே போல விலைஉயர்ந்த கார் வாங்கிவிட்டேன்... என்னுடைய கனவு நினைவாகிவிட்டது. இந்த இடத்தை அடைய நான் நிறைய கஷ்டப்பட்டிருக்கேன்" என்று கூறியிருந்தார்.. அத்துடன் அந்த காரின் போட்டோவையும் பதிவிட்டிருந்தார்.

இப்படி கஷ்டப்பட்டு உயர்ந்த இடத்தை தக்க வேண்டி வரும்.. ஆனால், அப்படி தக்கவைப்பதற்காக, வேற குணமாக மாறிவிடும். யாராக இருந்தாலும் தன்னுடைய எதிரியாக பார்க்க தோன்றும். இவ்வளவு தூரத்துக்கு ஏறிவந்தும், மணிமேகலை அந்த பெயரை தட்டிச்சென்றுவிடக்கூடாது என்ற எண்ணம்தான் பிரியங்காவுக்கு உள்ள குணம்.

எதிர்ப்புகள்: மணிமேகலையும் திறமையான பெண்.. காதலித்து திருமணமாகி, குடும்பத்தின் எதிர்ப்பையும் சந்தித்து, தனியாக முன்னேறிய பெண். சீசன் 4 வரை கோமாளியா இருந்த மணிமேகலை, மெல்ல உயரத்தை எட்டினார்.. இதுதான் பிரியங்காவின் பொறாமையின் வெளிப்பாடுதான்.. யாருக்குமே, சுயமரியாதையில் கை வைத்துவிட்டால், நிஜமான மனிதனை அங்கே பார்க்க முடியும்.. தன்னுடைய புகழைவிட தன்மானம்தான் முக்கியம் என்று மணிமேகலை அறிவித்தது துணிச்சலான விஷயம்.

மன்னிப்பு கேளுன்னு மணிமேகலையிடம் சொல்ல வைக்கிறாங்க.. அதுவும் இல்லாமல், அந்த மன்னிப்பை செட்டப் மாதிரி எடுக்கிறோம் என்கிறார்கள். அதற்கும் மணிமேகலை ஒப்புக் கொள்ளவில்லை.. அங்கேதான் திறமைசாலியாக மணிமேகலை தெரிகிறார்

பிரியங்கா: சேனலை பொறுத்தவரை, பிரியங்காவை யே திரும்ப திரும்ப, அந்நிகழ்ச்சியில் கொண்டுவரணும் என்பதே எண்ணமாக உள்ளது.. இந்த நிகழ்ச்சி வெற்றி பெற்றுள்ளதற்கு செஃப் வெங்கடேஷ் பட் போன்றோர்கள் மிகப்பெரிய பலம்.. இவர்கள் எல்லாம் சொல்லியும்கூட, பிரியங்கா கேக்கலன்னா, இதில் லோக்கல் பாலிட்டிக்ஸ் இருக்கவே செய்கிறது.. அல்லது மணிமேகலை மீதான பொறாமையே காரணமாகும்.

இதுகுறித்து மகாபா கிட்ட கேட்டால், யானை மோதிக்கிட்டா நாம ஏன் உள்ளே நுழையணும் ? என்று அசால்ட்டா தப்பிச்சு ஓடறாரு..
அவருக்கு பயம் அப்படி? இது ஒருவகையில் புத்திசாலித்தனமும் கூட..!!

டைட்டில் வின்னர்: டைட்டில் வின்னர் பிரியங்காதான் என்று அறிவிக்க போறாங்களாம்.. குக் வித் கோமாளி சீசன் இப்போது முடிந்துவிட்டாலும், குறும்படம் ஒன்றையும் வெளியிட போவதாகவும் சொல்கிறார்கள். விஜய் டிவியில் நுழைந்தாலே, உலகப்புகழ் அடையலாம். பணம், பேர் என எல்லாமே கிடைக்கும். ஆனால், எல்லாவற்றையும் தூக்கியெறிந்திருக்கிறார் மணிமேகலை என்றெல்லாம் அந்த பேட்டியில் சொல்லியிருக்கிறார் செய்யாறு ரவி.

இதுதான் காரணமா: இதனிடையே, குக் வித் கோமாளியில் ஏற்கனவே இடம்பெற்றிருந்த செப் வெங்கடேஷ் பட், அதை தயாரித்த தயாரிப்பு நிறுவனம் வேறொரு சேனலில் இதே போன்றதொரு நிகழ்ச்சியை ஆரம்பித்துள்ளனர்.. எனவே தங்களது நேயர்கள், அந்த நிகழ்ச்சி பக்கம் போய்விடக் கூடாது என்பதற்காகவே, இந்த 5வது சீசனில் விஜய் டிவி என்னென்னவோ செய்து பார்த்தது. ஆனாலும், பிரியங்கா, இர்பான் இருவருமே குக் வித் கோமாளியின் தரத்தை சிதைத்துவிட்டதாக பெரும்பாலானோர் கருத்து கூறி வருகிறார்கள். இதில் பிரியங்காவின் டாமினேட்டிங்தான் விஸ்வரூபமெடுத்து வருகிறது.

முன்னதாக, சேனல் ஒன்றுக்கு பிரபல நடிகை ஷகிலா பேட்டி தன்றை தந்திருந்தார்.. அதில், "பிரியங்காவை மட்டுமே சார்ந்து இந்த நிகழ்ச்சி போனால் தன்னுடைய முகம் வெளியில் தெரியாது என்ற பயம் மணிமேகலைக்கு வந்துவிட்டது.,,இதனால் பல இடங்களில் பிரியங்கா பேசவே கூடாது என பிரச்சனை பண்ணி இருக்கிறார் மணிமேகலை. இது குறித்து சேனல் தரப்பில் இருந்து மணிமேகலையிடம் பேசும் அவர் அதை காது கொடுத்து கேட்பதாக இல்லை.

இதனால் ஒரு கட்டத்தில் டென்ஷனாகி, உங்கள் ஆட்டிடியூடை மாற்றிக் கொள்ள முடியவில்லை என்றால் தயவு செய்து நிகழ்ச்சியை விட்டு வெளியேறி விடுங்கள் என சொல்லி இருக்கிறார்கள். அதனால் தான் மணிமேகலை குக் வித் கோமாளி சீசன் 5 நிகழ்ச்சியில் இருந்து விலகி இருக்கிறார். அது மட்டும் இல்லாமல் மணிமேகலை கலந்து கொண்ட நிறைய நிகழ்ச்சிகளில் அவர் பிரச்சனை செய்வது நடக்கும்" என்று ஷகிலா கூறியிருப்பது பரபரப்பை தந்து வருகிறது.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+