ரோஜா மாதிரி பொண்ணு கிடைச்சா உங்களுக்கு ஓகேவா..!

Subscribe to Oneindia Tamil

சென்னை: கல்யாண வீடு சீரியல் கோபி இல்லாமலே ஒரு மாசமா போயிகிட்டு இருக்கு.கோபி காணாமப் போயிட்டாராம்.

இருந்தாலும் கதை தொய்வில்லாமதான் இருக்கு. டீம் அவ்ளோ கடுமையா உழைக்கறாங்க. நகைச்சுவைன்னு அவங்க அடிக்கற கூத்து நல்லாயில்லை.

சில சமயம் முகம் சுளிக்க வைக்கற மாதிரியான காமெடி கூட இருக்கு. திருவையாறில் காவிரி கரையில் இப்படி ஒரு அழகான வீட்டை ஷூட்டிங்குக்காக பிடிச்சு இருக்காங்க.

Are you ok if get any woman like Roja

அதே மாதிரி சிகாமணியின் வீடும் எப்படி வந்து எப்படிப் போறதுன்னு தெரியாத மாதிரி பழம் காலத்து வீடு.இதுவும் அற்புதமா இருக்கு.
இதெல்லாம் இருக்கட்டும்.... ரோஜாவைப் பத்திப் பார்ப்போம்.

Are you ok if get any woman like Roja

சிகாமணியின் ரெண்டாவது பொண்ணுதான் ரோஜா.முதல்பொண்ணு சூர்யா. தன் அலுவலகத்தில் வேலைப் பார்த்த ராஜாவை காதலிக்கறேன்னு ராஜாகிட்ட ரோஜா சொல்றா. ராஜா நோ சொல்லிடறான்.

ரோஜா நொந்து போயி வீட்டுக்கு வந்தா..இவளோட அக்கா சூரியவையே பொண்ணு பார்க்க வந்திருக்கான் ராஜா.ரொம்ப லவ் பண்ணினவளாச்சே..அப்போ அவளுக்குள்ளே இன்னொரு பழி வாங்கும் ரோஜா உருவாகறா.

Are you ok if get any woman like Roja

ராஜாவை கல்யாணம் செய்துக்க எத்தனையோ டிராமா ரோஜா போட்டும், முடியாம கடைசியில ஜெயிலுக்கு போயிட்டு வந்துட்டா. சூர்யாவுக்கும், ராஜாவுக்கும் கல்யாணம் நடக்கப் போவுதுன்னு கேள்விப்பட்ட உடனே ராஜா,பெரியவர் சாப்பாட்டும் சாப்பாட்டில் விஷத்தை கலந்துடறா.

பயந்துடறார் சூர்யாவின் அப்பா..இனிமே சூர்யாவை உங்களுக்கு காட்டித் தர மாட்டேன்னு சொல்லிட்டு, ஒரு ஐடியாவும் சொல்றார்.ரோஜா நல்லபொண்ணுதான்,அவளை இந்தளவுக்கு மாத்தி வச்சிருக்கறது உங்களோட காதல்தான் தம்பி

உங்க மேலவ ச்சிருக்கற காதலில்தான் இப்படி வில்லியா மாறிட்டா.கல்யானம் கட்டிகிட்டா உங்களைத்தான் கட்டிக்குவேன்னு ஒத்தைக் காலில் நிக்கறா. நினைச்சு பாருங்க..அவளும் கஷ்டப்பட்டு உங்களையும் கஷ்டப்படுத்தறா. அவளை கல்யாணம் செய்துக்கிட்டா நீங்க ரெண்டு பேரும் நல்லாருப்பீங்கன்னு சொல்றார்.

Are you ok if get any woman like Roja

இந்த சீரியலில் ரோஜாவுக்கு நடிக்க நல்ல வாய்ப்பு குடுத்திருக்காங்க. பாண்டிச்சேரி லாட்ஜில் வேலைப்பார்த்த ஒருவன்,இவளுக்கு உதவி செய்வது போல் செய்து, ரோஜாவை கெடுக்க நினைக்கறான்.அப்போ கோபிதான் ரோஜாவை காப்பாத்தறார்.

ஆனா, அந்த பொறுக்கியையே ஜாமீனில் எடுத்த ரோஜா சில வேலைகளை தர்றா.அவனும் செய்து முடிச்சுட்டு, நிற்க, இவங்க வீட்லதான் யார் எங்க தங்கி இருந்தாலும் தெரியாதே.. அதனால, மாட்டியில இ ருந்துகிட்டு மதுவும் பிரியாணியும் வாங்கிட்டு வர சொல்றா.

எனக்கு பிரியாணி மட்டும்தான்னு சொல்லி அனுப்பறறா அவனும் வாங்கிட்டு வர சாப்பிடு சாப்பிடுன்னு சொல்றா. அவன் மதுவை குடிச்சுக்கிட்டு,பிரியாணியையும் சாப்பிட்டுக்கறான்.

அப்போ குடுக்கறா பாருங்க அவனுக்கு அடி உடை குத்துன்னு.அவன் மேடம் தண்ணி வாங்கிக்கொடுத்து அடிக்கறீங்களே என்ன விஷயம்னு அடி வாங்கிக்கிட்டே கேட்கறான்.

ஏண்டா நான் ராஜாவுக்குன்னு படைக்கப்பட்ட புனிதமான ரோஜா.என்னை அடைய நினைக்கறியா..என்னோட புனிதம் கெட்டு போயிடாது. அதுக்குத்தான் இந்த அடின்னு சொல்லி அடிச்சு களைச்சு போயி, பிரியாணியை சாப்பிடறா.

இது மூர்க்கத்தனமான காதலா தெரிஞ்சாலும், தன்னை கெடுக்க வந்தவனை அடிச்சு துவைக்கும் தைரியம் யாருக்கு வரும்? இப்போ சொல்லுங்க ரோஜா மாதிரி ஒரு பொண்ணு கிடைச்சா ஓகேவா?

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+