இனி என் சொந்தமெல்லாம் நீதான்.. அர்ணவ் வெளியிட்ட அதிரடி வீடியோ.. அதிர்ச்சியில் ரசிகர்கள்
சென்னை: சீரியல் நடிகர் அர்ணவ் குடும்ப பிரச்சினை சமூக வலைதளத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்திக் கொண்டிருக்கிறது.
இந்த நிலையிலும் அர்ணவ் அவருடைய சீரியலில் நடிக்கும் நடிகையோடு வீடியோ ஒன்றை வெளியிட்டு இருக்கிறார்.
அது குறித்து சமூக வலைதளத்தில் ரசிகர்கள் கருத்து தெரிவித்து வருகிறார்கள்.

விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் செல்லம்மா சீரியலில் சித்து கேரக்டரில் கதாநாயகனாக நடித்து வரும் அர்ணவ் ஏற்கனவே அவருடைய கேளடி கண்மணி சீரியலில் நடித்து வந்த திவ்யா ஸ்ரீதரை சில மாதங்களுக்கு முன்பு காதலித்து திருமணம் செய்திருந்தார்.
திருமணத்திற்கு பிறகு கருத்து வேறுபாடு காரணமாக இவர்கள் இருவருக்கும் இடையே ஏற்பட்ட சண்டை சச்சரவுகள் சமூக வலைதளத்தில் வெட்ட வெளிச்சமானது தான். திவ்யாவும் அர்ணவும் மாறி மாறி ஒருவருக்கு எதிராக ஒருவர் குற்றச்சாட்டுகளை வைத்து பல அதிர்ச்சிகரமான ஆதாரங்களையும் வெளியிட்டுக் கொண்டிருக்கின்றனர்.
இவர்களில் யார் மீது தவறு யார் மீது சரி என்று ரசிகர்களால் யூகிக்க முடியாத வகையில் தான் இருக்கிறது. ஆனாலும் இந்த பிரச்சனையின் ஆரம்பத்தில் அர்ணவ், அவரோடு செல்லமா சீரியலில் ஒன்றாக நடிக்கும் நடிகையோடு தொடர்பு இருக்கிறது. அந்த பொண்ணோட பேசறதால தான் என்னை அர்ணவ் அடிக்கிறார் என்று திவ்யா குற்றசாட்டு வைத்திருந்தார்.
திவ்யா கொடுத்த கம்ப்ளைன்ட் காரணமாகத்தான் 6 ஜெயிலுக்கு போயிட்டு வெளியே வந்திருக்கிறார். அதை தொடர்ந்து தான் அர்ணவின் பழைய வாழ்க்கை பலவற்றை திவ்யா வெளிச்சத்துக்கு கொண்டு வந்திருக்கிறார். இந்த நிலையில் அர்ணவ் மீண்டும் தன்னோடு சீரியலில் நடிக்கும் நடிகையோடு எடுத்த ரீல்ஸ் வீடியோவை தன்னுடைய இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பகிர்ந்து இருக்கிறார்.

இதுகுறித்து ரசிகர்கள் பலர் கருத்து தெரிவித்து வருகின்றனர். என்னதான் இருந்தாலும் திவ்யாவுக்கும் அர்ணவுக்கும் பிரச்சனைக்கும் காரணமாய் இருந்தது இந்த நடிகை தான். ஆனால் அவரோடு சேர்ந்து நீங்க மீண்டும் ரீல்ஸ் வெளியிட்டுக் கொண்டிருக்கிறீர்களே என்று சிலர் ரசிகர்கள் கேள்வி எழுப்பி இருக்கிறார்கள்.
இன்னும் ஒரு சில ரசிகர்கள் திவ்யா வெளியிட்ட ஆடியோவில் அர்ணவ் அவரோடு சீரியல் நடிக்கும் நடிகைகளை பற்றி பல விஷயங்களை பேசி இருக்கிறார். அதை எல்லாம் கேட்ட பிறகும் இந்த நடிகைகள் எப்படி அர்ணவோடு சேர்ந்து ரீல்ஸ் வெளியிடுறாங்க? என்றும் கேள்வி எழுப்பி இருக்கிறார்கள். தற்போது இது சமூக வலைதளத்தில் பேசும் பொருளாக மாறி இருக்கிறது.
-
அதிமுகவில் அடுத்த விக்கெட்? சி.வி.சண்முகத்துக்கு இப்படியொரு லட்டு சான்ஸ்? போட்டு தாக்குதே தவெக -
சிவகுமார் போட்ட மாஸ்டர் ஸ்கெட்ச்.. ராகுலுக்கு நேரமில்லை? டெல்லியில் மிஸ்டர் விஜய்னு கூப்பிட்டது யாரு -
விசில் அடித்து முன்னேறும் கர்நாடகா, ஆந்திரா.. இனி தமிழ்நாடு வேடிக்கை பார்க்கணும்! விஜய் போட்ட பிரேக் -
ஆரம்பமே அடி சறுக்கல்.. சிங்கப்பெண் அதிரடிப்படை திட்டத்தின் தொடக்க விழா ரத்து! -
மாடுகளை பலியிட தடை.. நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன் உத்தரவு! விஜய்க்கு சிபிஎம் வைத்த முக்கிய கோரிக்கை! -
பாஜகவில் இருந்து விலகி அண்ணாமலை தனிக்கட்சி தொடங்குகிறார்? ரஜினி ஆதரவுடன் திருச்சி கிழக்கில் போட்டி? -
பூந்தமல்லி டூ வடபழனி இனி 20 நிமிடங்களில்.. ஆளில்லா மெட்ரோ ரயில் சேவைக்கு கிடைத்த பச்சை சிக்னல் -
விஜய் கொடுத்த வாக்குறுதி.. தவெகவில் இணைந்தது ஏன்.. உண்மையை உடைத்த அதிமுக எக்ஸ் எம்எல்ஏ -
GH-ல் கடைநிலை ஊழியர்கள் மீது நடவடிக்கை எடுத்த ரமேஷுக்கு அர்ச்சகர்கள் மீது ஆக்ஷன் எடுக்க தாமதம் ஏன்? -
சிங்கப்பெண் படையை தொடங்கிவைக்கவே முடியாத விஜய் எப்படி பெண்கள் பாதுகாப்பை உறுதிசெய்வார்?: TTV தினகரன் -
சத்யேந்திராவை பார்க்க யாரும் போகலயா? சென்னையில் அநாதையான உடல்.. இப்படியும் மனிதர்களா? என்ன நடக்கிறது -
புதிய தலைமுறை சேனல் நீக்க விவகாரம்: ஜனநாயக குரல்வளையை நெறிக்காதீர்கள்..விஜய் அரசுக்கு அதிமுக கண்டனம்












Click it and Unblock the Notifications