இந்த வேலையை உடனே நிறுத்திருங்க.. பயில்வான் ரங்கநாதனுக்கு நடிகர் சங்கம் வார்னிங்!
சென்னை: நடிகர் சங்க உறுப்பினர்கள் குறித்து அவதூறு பரப்புவதை பயில்வான் ரங்கநாதன் உள்ளிட்டோர் நிறுத்த வேண்டும்; இல்லை என்றால் கடுமையான சட்ட நடவடிக்கை எடுக்கப்படும் என தென்னிந்திய நடிகர் சங்கம் எச்சரிக்கை விடுத்துள்ளது.
நடிகரும், பத்திரிகையாளருமான பயில்வான் ரங்கநாதன் யூடியூப் சேனல் மற்றும் சமூக ஊடகங்களில் அநாகரிகமான வார்த்தைகள், பெண்களை அவமதிக்கும் வகையிலான கருத்துகள் மற்றும் அவர்களது தனிப்பட்ட விவரங்களை வெளியிட்டு வருவதாக தொடர்ந்து குற்றச்சாட்டு முன்வைக்கப்பட்டு வருகிறது.

எந்தவொரு ஆதாரமும் இல்லாமல் பார்வையாளர்களை அதிகரிக்க வேண்டும் என்ற ஒரே நோக்கத்தில் சமுதாயத்தில் பிரபலமாக இருக்கும் நபர்களை இழிவுபடுத்தும் வகையிலான செயல்களில் பயில்வான் ரங்கநாதன் ஈடுபட்டு வருகிறார் என சினிமா உலகினர் மத்தியில் புகார்கள் எழுந்து வருகின்றன.
இந்நிலையில், தென்னிந்திய நடிகர் சங்கம் வெளியிட்டுள்ள அறிக்கையில், "தென்னிந்திய நடிகர் சங்கத்தின் உறுப்பினர்கள் நலனை பேணுவதும் பணியிட பாதுகாப்பை உறுதி செய்லதும் என்றும் எங்கள் தலையாய கடமையாக இருந்து வருகிறது. அந்த வகையில் எங்கள் உறுப்பினர்களான நடிகர்கள் குறித்து மிக அவதூறாகவும், ஆபாசமாகவும், அடிப்படை ஆதாரம் ஏதும் இன்றியும் பல தவறான பொய்யான கருத்துக்களை சமூக வலைத்தளங்களில் பதிவேற்றம் செய்த சேகுவாரா என்ற புனைப்பெயர் கொண்ட ஜெய்சங்கர் என்னும் நபர் மீது தென்னிந்திய நடிகர் சங்கம் சார்பாக சட்ட ரீதியாக மாண்புமிகு உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடுக்கப்பட்டது.
வழக்கின் கடுமையை உணர்ந்து இனி அவ்விதம் அவதூறாக பதிவிட மாட்டேன் என்று குற்றம் சாட்டப்பட்டவர் உறுதிமொழி தந்து நீதிமன்றத்தில் ஒரு மனுவை சமர்ப்பித்தார். அதனை ஏற்ற நீதிமன்றம். அந்த உறுதி மொழியில் இருந்து அவர் சற்றும் தவறக்கூடாது என்ற கடுமையான உத்தரவின் அடிப்படையில், அந்த நபருக்கு முன்ஜாமீன் வழங்கி உள்ளது.

இதைத் தொடர்ந்து சற்று காலம் அவதூறுகள் ஏதும் வெளிவராத நிலையில், சமீப காலமாக மீண்டும் பயில்வான் ரங்கநாதன் என்னும் நபர் உட்பட பலர் எங்கள் சங்கத்தின் பல உறுப்பினர்கள் மீது ஆதாரமற்ற அவதூறுகளை சமூக வலைத்தளங்களில் வாரி இறைத்து வருகின்றனர்.
அவ்விதம் அவதூறு பரப்புபவர்கள் மேற்காணும் வழக்கை மனதில் கொண்டு உன அவர்களது இந்த சட்ட விரோத செயலை. நிறுத்த வேண்டும் அவ்விதம் நிறுத்தத் தவறும் பட்சத்தில், அவதூறு பரப்பும் அனைவர் மீதும் கடந்த முறையை விட கடுமையான சட்ட நடவடிக்கை எடுக்கப்படும் என இதன் முயமாக தென்னித்திய நடிகர் சங்கம் எச்சரிக்கை விடுக்கிறது.
இனி ஒரு முறை எங்கள் உறுப்பினர்கள் தொடர்பான ஆபாசமான அவதூறான கருத்துக்களை பதிவேற்றம் செய்பவர்கள் தாமதம் இன்றி சட்டரீதியான நடவடிக்கைகளுக்கு உட்படுத்தப்படுவார்கள் என்பதை உறுதிபட தெரிவித்துக் கொள்கிறோம்." என தென்னிந்திய நடிகர் சங்கம் தெரிவித்துள்ளது.
-
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
ஐடி ஊழியர்களை விட "இவர்கள்" காட்டில்தான் பணமழை! அடுத்த 5 ஆண்டுகளில் இந்தியாவில் ஏற்பட போகும் மாற்றம் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
விவசாயக் கடன் தள்ளுபடி.. பொய் சொல்லி ஏமாற்ற மாட்டேன்! விவசாயிகளே கவலைப்படாதீங்க.. விஜய் உத்தரவாதம் -
வளைகுடாவில் இந்தியாவிற்கு கிடைத்தது மாற்றுப்பாதை.. ஓமனால் பெரிய குட்நியூஸ் -
கட்டப்பா கூட ஒரு டைம்தான் குத்துனாரு.. இப்படி தினம் தினம் பண்ணுறீங்களே! கோபத்தின் உச்சியில் ஸ்டாலின் -
DMART முதலாளிக்கு இப்படியொரு பிஸ்னஸ் இருக்கா.. ஒரு வீட்டுக்கு ரூ.27.5 லட்சம் .. ஆடிப்போன மும்பை மக்கள்! -
சோறு இல்லைனா விளையாட முடியுமா? விவசாயத்தை விட விளையாட்டு கஷ்டம் என்ற ஆதவ்விற்கு கஸ்தூரி ராஜா கேள்வி












Click it and Unblock the Notifications