Arundhathi serial: அடடா... ஆவிக்கு காதல் ஆசை காமிச்சுட்டாளே தெய்வானை!
சென்னை: சன் டிவியின் திகில் சீரியல் என்று ஆரம்பமே அருமையாக ஒளிபரப்பானது அருந்ததி சீரியல். இப்போது வெவ்வேறு ,திசையில் கதை பயணித்துக் கொண்டு இருந்தாலும் நன்றாகத்தான் இருக்கிறது.
பொதுவாக ஆசை நிறைவேறாமல் இறந்தவர்கள் ஆவியாக அலைவார்கள் என்பது சொல் வழக்கு. அதை நிரூபிப்பது போலத்தான் சீரியலும் ஆரம்பித்தது.
ஆனால், வேறு டிராக்கிலும் கதை ஆவியின் ஆசையை காண்பிப்பதாக இப்போது பயணிக்கிறது.அது ஆடியன்ஸ் எதிர்பார்க்கும் வகையிலும் இருக்கிறது.

உடலை அருந்ததிக்கு
அருந்ததியின் ஆவி திரும்ப வர வேண்டும் என்றால் ஒரு உடல் வேண்டும் என்று நம்பூதிரி சொல்கிறார். அதற்கு தெய்வானை தன் உடலை தர சம்மதிச்சாலும், சண்முகம் ஒப்புகை மறுக்கிறான்.. தெய்வானை புருஷனுக்கு தெரியாமல் தனது உடலை அருந்ததிக்கு தர சம்மதம் சொல்கிறாள். அப்படி தெய்வானை உடலுக்குள் புகுந்துக் கொண்ட அருந்ததி, சண்முகத்தின் ரொமான்ஸ், காதல், ஸ்பரிஸம் இவைகளை ரசித்து அனுபவிக்கிறாள்.

போக மனமில்லை
அருந்ததிக்கு தெய்வானையின் உடலை விட்டுப் போக மனமில்லை என்றாலும், போக வேண்டிய கட்டாயத்தில் அருந்ததி வெளி வந்துவிடுகிறாள். ஆனால், சண்முகம் தெய்வானையுடன் ரொமான்ஸ் செய்தால் அருந்ததிக்கு கோவம் வந்துருது.தனக்கு உதவி செய்தவள்தான் தெய்வானை. ஆனால், எல்லாருக்கும் கிடைச்ச இந்த புருஷன் அன்பு, காதல்,வாழ்க்கை தனக்கு மட்டும் கிடைக்காமல் போனது என்று கத்தி அழுகிறாள் அருந்ததி.

எனக்கு சண்முகத்தை
சண்முகத்தை எனக்கு சொந்தமானவனாக மாற்றி, அவனின் அன்பு, காதல், வாழக்கை எல்லாத்தையும் அவனுடன் சேர்ந்து வாழாமல் விட மாட்டேன் என்று தனக்குள் கத்தி சபதம் போட்டுக்கொள்கிறாள். முதலில் தன்னை சீரழித்தவனை பழி வாங்க வேண்டும் என்று வந்த அருந்ததிக்கு இப்போது குடும்ப வாழ்க்கை வாழ ஆசை வந்துருது.

அருந்ததி தெய்வானை
தெய்வானை சண்முகத்தை ஹனிமூனுக்கு அனுப்ப வேண்டும் என்றுஈஸ்வரி அம்மா பேச தெய்வானையை கூப்பிடறாங்க. ஆனால்,இந்த விஷயத்தை தெய்வானை கேட்க கூடாது என்று அவள் குளிக்கும்போது கதவை வெளிப்புறமாகத் தாழிட்டு விட்டு, இங்கு வந்து என்ன பேசிக்கறாங்கன்னு கேட்கிறாள். ஹனிமூன் என்றதும், அவளுக்கு பொறாமை வந்துருது.
இப்படி ஆவிக்கு வாழும் ஆசையை தூண்டி விட்டுட்டாள் தெய்வானை.
-
75 பவுன்ஸ் ஆன செக்குகள்.. நடிகர் கரண் வாழ்க்கையை கெடுத்தது அந்த பெண்ணா? உண்மையை உடைத்த பிரபலம் -
எலக்ட்ரீஷியன் நள்ளிரவில் வாஷ்பேசினில் பண்ண காரியம்! உறைந்து போன 4 பிஞ்சு குழந்தைகள்! பதைபதைத்த கேரளா -
பனையூர் பாபுவின் மாஸ் மூவ்... அந்த தொகுதிதான் காரணமா? 7ம் தேதி திமுகவில் சர்ப்ரைஸ்.. ஆடிப்போன விசிக -
விஜய்யை இப்படியே விடக்கூடாது.. பாஜக பாணியை கையில் எடுக்கும் திமுக.. பெரிய மாற்றம் வரப்போகுது -
மம்தாவை கதறவிடும் முதல் முறை எம்எல்ஏ.. 60 எம்எல்ஏக்களை அபகரித்தது எப்படி? தி.காங்கிரஸ் பிளவு பின்னணி -
காங்கிரஸுக்கு ராஜ்யசபா சீட்.. அலேக்காக தப்பிக்கும் தவெக! பிளான் இதுதான்! -
அழுதபடி அலிசா அப்துல்லா புகார்.. ஒரே நாளில் திருச்சி சூர்யாவை தூக்கிய போலீஸ்! தலைமறைவான முக்தார்? -
பயங்கரமான ஆளுங்க விஜய்! காங்கிரஸுக்கு தான் சீட்டு.. ஆனா எம்பி எங்களுங்க! ராஜ்சபா சீட்டு யாருக்கு? -
துன்பத்திலும் ஒரு இன்பம்.. மத்திய அமைச்சராகும் நயினார்! தமிழக பாஜக புதிய தலைவர் இவரா? கலகல கமலாலயம்! -
ரூ.72 லட்சம் பணம் அக்கவுண்டில் ஏறியதும் ஊரைவிட்டே ‘எஸ்கேப்’.. மோசடி புகாரில் தவெக நிர்வாகி கைது! -
தவெக பெண் எம்எல்ஏவை அவமானப்படுத்திய சென்னை மேயர் பிரியா? குத்துவிளக்கேற்றுவதில் வெடித்த மோதல்! -
திருச்செந்தூர் முருகனின் விஸ்வரூப தரிசனம்! அடுத்தடுத்து முதல்வர்களான விஜய், டி.கே.சிவக்குமார்!












Click it and Unblock the Notifications