Arundhathi serial: பேய் கூட கல்யாணம் முதலிரவு... ஒரே தொல்லையா இருக்கே!
சென்னை: சன் டிவியின் அருந்ததி சீரியலில் திகில், மர்மம் இருக்கும் என்று எதிர்பார்த்த நிலையில், ரொம்ப சிறு பிள்ளைத்தனமாக கதை சென்று கொண்டு இருக்கிறது.
தெய்வானை முருகன் அருள் பெற்றவள், முருகன் மீது பக்தி அதிகம். அதனால், ஈஸ்வரி அம்மா வீட்டை தாக்க வரும் தீய சக்தியால் தெய்வானையை அணுக முடியாது என்று சண்முகத்துக்கு அவளை கல்யாணம் செய்து வைக்கறாங்க.
ஆனால், அந்த அருந்ததி பேய் தெய்வானையை தோழியாக்கி அவள் புருஷனையே உரிமையாக்கி கொண்டு, தெய்வானையை வீட்டை விட்டு விரட்ட பார்க்குது.

தெய்வானை அருந்ததி
தெய்வானைக்குள் அருந்ததி ஆவி புகுந்து கொண்டு இருந்தபோது, அருந்ததியின் புருஷன் சண்முகம் ரொமான்ஸ் செய்ததில், பேய்க்கு சண்முகத்துடன் காதல் வாழ்க்கை வாழ ஆசை வந்துருது. அதையும் கொஞ்சம் திரித்து தெய்வானையிடம் கூறி விடுகிறாள். அதாவது தனக்கும் மற்ற பெண்களைப் போல கல்யாணம் செய்துக்க ஆசையா இருக்கு., கல்யாணம் செய்துகிட்டால்தான் என் ஆத்மா சாந்தி அடையும்., நீதான் உதவி செய்யணும் என்று.

யார் செய்துக்குவா?
என்ன சொல்றே அருந்ததி..பேயான உன்னை யாரு கல்யாணம் செய்துக்குவான்னு தெய்வானை கேட்க, சண்முகத்துக்குத்தான் என்னை பற்றி தெரியுமே.. அவனை சம்மதிக்க வைன்னு சொல்லி சரி,, குடும்ப நன்மைக்கு என்று இவளும் சண்முகத்திடம் பேசுகிறாள். என்னது பேயை நான் கல்யாணம் பண்ணிக்கறதா...அறிவிருக்கா உனக்குன்னு சண்முகம் கெஞ்சியும் தெய்வானை கேட்கலை.

வித்தியாச கல்யாணம்
எரிஞ்சு போன வீடு கல்யாண மண்டபம், தேங்காவுக்கு பதில் கருந்தேள்கள், பூ மாலைக்கு பதில் கருப்பு மாலை..அக்னிக்கு பதில் சாம்பல் என்று விசித்திரமான இடத்தில் வித்தியாசமாக பேய்க்கும் மனுஷனுக்கும் கல்யாணம் நடக்குது. சரி, அருந்ததி உன் ஆசை நிறைவேறிடுச்சு... நீ கெளம்புன்னு சொன்னா மாட்டேன்னு அடம் பிடிக்குது.

உனக்கு என்ன வேலை?
கல்யாணம் ஆன நிலையில், சண்முகத்துடன் முதலிரவு வேண்டும் என்று அடம் பிடிக்குது. சண்முகம் கனவில் கூட உன்னை என்னால் அப்படி நினைச்சு பார்க்க முடியாதுன்னு வாதம் செய்துகிட்டு இருக்க , தெய்வானையை வெளியில் தள்ளிவிட்டு, என் பெட் ரூம்.உனக்கு இங்கே என்ன வேலைன்னு பேய் கேட்குது. தெய்வானையை வெளியே அனுப்பிருது.புருஷனை பார்க்க விட மாட்டேங்குது.
ஓடறா முருகா முருகான்னு கூப்பிட்டுக்கிட்டு அழகன் முருகனிடம்!
-
திருச்சி கிழக்கு இடைத்தேர்தலை எதிர்கொள்ள திமுகவின் இரட்டை வியூகம்.. இள ரத்தத்திற்கு முக்கியத்துவம்! -
96,000 வாக்குகள் வித்தியாசத்தில்.. தவெக வேட்பாளரை ஜெயிக்க வைத்த தொகுதிக்கு இந்த நிலைமையா? -
இந்தியாவை தாக்கும் பெரிய ஆபத்து.. விஷயம் கேட்டு எலான் மஸ்க் கூட அதிர்ந்து போனார்! பேரழிவு கன்பார்ம்? -
அதிகாலையே கணக்கில் வரவு வைக்கப்பட்ட ரூ.3000.. வந்தது மே மாதம் பேமெண்ட்.. அரசின் அசத்தல் மூவ்! -
சொத்துகளை மறைக்கும் சென்னை மேயர் பிரியா.. துணை மேயர் உள்பட 75% கவுன்சிலர்கள் 4 ஆண்டுகளாக ‘டிமிக்கி' -
அதிமுக + திமுகவிற்கு ஷாக்.. 4 மாஜி அமைச்சர்கள் - 8 எம்எல்ஏக்கள் உள்பட 60 பேர் தவெகவில் ஐக்கியம் -
அடித்து ஆடும் விஜய்.. வருகிறது ராமநாதபுரம் புதிய விமான நிலையம்.. பொருளாதார புரட்சிக்கு அடித்தளம்! -
ரஷ்யா வச்ச ஆப்பு.. தள்ளுபடிலாம் தர முடியாது.. பிரீமியம் கட்டணம்! கச்சா எண்ணெய்க்கு 425% கூடுதல் தொகை -
ரூ.15 லட்சம் கோடி பஸ்பம் ஆகும்? சரிகிறது இந்தியாவின் தங்க’ சாம்ராஜ்யம்.. நாட்டையே உலுக்கும் சம்பவம் -
"அண்ணாமலை வந்ததால் பாஜக ஒன்னும் பலமாகவில்லை".. ஒரு இதழை கூட அசைக்க முடியாது.. தமிழிசை ‘அட்டாக்' -
நாங்க தோத்துட்டோம்.. ஆனா சாகலை! விஜய்க்கு ஏதாவது ஆச்சுனா கம்பெனி பொறுப்பில்லை! மாஜி கொடுத்த வார்னிங் -
ஒரு மேயர் பதவியையாவது ஜெயிச்சு பாருங்க..நான் என் ஒரு பக்க மீசையை எடுத்துக்குறேன்! ஆர்எஸ் பாரதி சவால்












Click it and Unblock the Notifications