எப்ப டிவியில் என் படம் வந்தாலும் .. உடனே போனை போட்டு பாராட்டித் தள்ளிடுவாங்க.. அதிதி பாலன் ஹேப்பி
Recommended Video

ஈரோடு: ஈரோட்டில் கவிதாலயம் நடனப்பள்ளி நடத்திய நடன நிகழ்ச்சியில் கலந்துகொண்டு சிறப்பித்தார் நடிகை அதிதி பாலன்.
அதிதி பாலன் திருநெல்வேலி பொண்ணு... சட்டம் படித்திருக்கும் இவரது வாயிலிருந்து வரும் வார்த்தைகள் தெளிவான, எளிமையான தமிழில் இருப்பது கூடுதல் பிளஸ்.
நல்லதா ஒரு படம் நடிச்சதுக்கே ஜனங்க என்னை அவ்ளோ மதிக்கறாங்க. அதனால குடுக்கும் எல்லா படமும் நல்லதா இருக்கணும்னு நினைக்கறதுனால கால தாமதம் ஆகுதுன்னார்.

சிவனும் இஷ்டம்
நான் பாபா பக்தை... எனக்கு சிவனும் இஷ்டம். பொதுவா இயற்கையை கடவுளா நேசிப்பேன். அண்மையில் இமய மலைக்கு போயிருந்தேன். அங்குள்ள மக்கள் கூல் பிரதேசத்தில் வாழ்வதாலோ என்னவோ...அன்பா, அமைதியா பேசறாங்க.

விளையாட்டு பிடிக்கும்
எந்த விளையாட்டா இருந்தாலும் பிடிக்கும். குறிப்பா நான் ஃபுட்பால் பிளேயர்.. அதிகம் ஃபுட்பால் மேட்ச் பார்ப்பேன்.

இம்பிரஸ் பண்றவங்க
ரோல்மாடல்னு குறிப்பிட்டு ஒருத்தரை சொல்ல முடியாது. தினமும் நல்ல செயல்கள் யாராவது செய்றதை பார்த்தா நான் இம்ப்ரஸ் ஆகிருவேன். அன்னிக்கு அவங்கதான் எனக்கு ரோல் மாடல்.

படம் காட்சிகள்
எப்போது டிவியில அருவி படம், காட்சிகள் பார்த்தாலும் எனக்கு நிறைய பேர் போன் பண்ணுவாங்க. அது எனக்கு ரொம்ப மகிழ்ச்சியா இருக்கு என்கிறார் அதிதி. உண்மைதாங்க.. எப்பப் பார்த்தாலும் அப்படி ஒரு பாதிப்பை ஏற்படுத்துது இந்தப் படமும், அதிதியின் நடிப்பும்.












Click it and Unblock the Notifications