ஆர்யாவின் எங்க வீட்டு மாப்பிள்ளை... ஒரு பெண்ணுக்கு ஓகே... மற்ற பெண்களின் கதி?

Posted By:
Subscribe to Oneindia Tamil
  ஆர்யா நிகழ்ச்சியைக் கலாய்த்த சதீஷ்!

  சென்னை: ஒரு பெண்ணை திருமணம் செய்து கொள்ள 16 பெண்களிடம் ஆடி பாடி, அவர்கள் சமைத்ததை சாப்பிட்டு ஜாலியாக பொழுதை கழிக்கிறார் ஆர்யா. ஒரு பெண்ணை தேர்வு செய்த பின்னர் 15 பெண்களுக்கு மாப்பிள்ளை எளிதாக கிடைக்குமா என்று பல பெற்றோர்கள் கேள்வி எழுப்பியுள்ளனர்.

  சினிமாவில் நடித்து வந்த ஆர்யாவிற்கு படங்கள் பெரிதாக எதுவும் அமையவில்லை. திருமணம் செய்து கொள்ளலாம் என்று முடிவு செய்து ரியாலிட்டி ஷோவில் பெண்ணை தேர்வு செய்து வருகிறார்.

  தமிழ்நாடு மல்ல கேரளா, இலங்கை, மலேசியா உள்ளிட்ட வெளிநாடுகளில் இருந்தெல்லாம் பெண்கள் ஆர்யாவை திருமணம் செய்து கொள்ள வந்துள்ளனர். படப்பிடிப்பு ஜெய்ப்பூரில் நடைபெறுகிறது.

  பெண்கள் சமையல்

  பெண்கள் சமையல்

  ஆர்யாவை திருமணம் செய்து கொள்ள வந்துள்ள பெண்களுக்கு நிறைய போட்டிகள் நடத்தப்படுகின்றன. ஆர்யாவிற்கு பிடித்தவைகளை தேர்வு செய்தது தொடங்கி அவருக்கு ருசியாக சமைத்து போடுவது வரை செய்கின்றனர் பெண்கள்.

  லிப்லாக் ஆர்யா

  லிப்லாக் ஆர்யா

  நீங்கள் யாருக்காவது உதட்டோடு முத்தம் கொடுத்திருக்குறீர்களா?' என கேள்வி கேட்கப்பட்டது. பெண்கள் அனைவரும் ஆம் என கூற, ஆர்யாவும் ஆம் என்ற பதிலையே கூறினார். 11ம் வகுப்பு படிக்கும்போதே முதல் முறையாக முத்தம் கொடுத்ததாகவும், கடைசியாக சென்ற வருடம் ஒருவருக்கு லிப்லாக் முத்தம் கொடுத்தேன் என ஆர்யா கூறினார்

  போட்டியாளர்கள் வெளியேற்றம்

  போட்டியாளர்கள் வெளியேற்றம்

  கடந்த சில வாரங்களாக நடைபெற்று வரும் இந்த நிகழ்ச்சியில் இருந்து பல பெண்கள் வெளியேற்றப்படுகின்றனர். போட்டியாளர்களில் ஒருவரான கோமதி என்ற பெண் தனது தாத்தா இறந்து விட்டதால் நிகழ்ச்சியை விட்டு வெளியே சென்றுள்ளார். ஆர்யா அவருக்கு ஆறுதல் சொல்லி வழி அனுப்பி வைத்துள்ளார்.

  ஆறுதல் சொன்ன ஆர்யா

  ஆறுதல் சொன்ன ஆர்யா

  தற்போது இந்நிகழ்ச்சியின் ஒரு புரொமோ ஒன்று வெளியாகியுள்ளது. அதில் அகதா, ஆர்யாவிடம் தன்னை பற்றிய விஷயங்களை கூறினார். அப்போது ஒரு நடன இயக்குனர் தன்னை 6 லட்சம் கொடு, இல்லையெனில் தன்னுடன் இரவு படுக்கையை பகிர்ந்து கொள்ள வேண்டும் என்று சொன்னதாக கூறியுள்ளார். அழுத அந்த பெண்ணுக்கு ஆறுதல் கூறினார் ஆர்யா.

  மணமுடிப்பாரா ஆர்யா

  மணமுடிப்பாரா ஆர்யா

  கடந்த வாரம் இந்த நிகழ்ச்சியில் ஆர்யாவின் நண்பர்கள் ஷாம், கலையரசன் உள்ளிட்டோர் பங்கேற்றனர். வரலட்சுமியும் ஆர்யாவை திருமணம் செய்து கொள்ள வந்திருக்கும் பெண்களுடன் பேசினார்.

  நிஜமாகவே நீ இந்த நிகழ்ச்சியில் திருமணம் செய்து கொள்வாயா?" என ஷாம் கேட்டார். அதற்கு ஆர்யா கண்டிப்பாக செய்துகொள்வேன் என பதில் கூறினார். ஒரு பெண்ணிற்கு வாழ்க்கை கொடுக்கும் ஆர்யா, 15 பெண்களின் வாழ்க்கையோடு விளையாடுகிறாரே என்பதுதான் பெண்களைப் பெற்ற பல பெற்றோர்களின் ஆதங்கம்.

  திருமணம் ஆகாதவரா? இன்றே பதிவு செய்யுங்கள் தமிழ் மேட்ரிமோனியில் - பதிவு இலவசம்!

  English summary
  Actor Arya's Enga veetu Maapillai reality programme has faced stiff opposition from the parents.

  நாள் முழுவதும் oneindia
  செய்திகளை உடனுக்குடன் பெற