ஆஷா போஸ்லே அக்கா லதா மங்கேஷ்கர் இறப்பில் உள்ள அதிர்ச்சி ஒற்றுமை.. ஒரே மாதிரி முடிந்த வாழ்க்கை!
சென்னை: பின்னணி பாடகி ஆசா போன்ஸ்லே நேற்று உடல்நிலை குறைபாடு காரணமாக காலமானார் இவருக்கு சினிமா பிரபலங்கள் ரசிகர்கள் பலரும் இரங்கல் தெரிவித்து வருகின்றனர். அவருடைய சகோதரி தான் லதா மங்கேஷ்கர் என்பது பலருக்கும் தெரிந்த செய்திதான் ஆனால் சகோதரிகள் இருவருடைய இறப்பிலும் இருக்கும் அதிர்ச்சிகரமான ஒரு ஒற்றுமை பலரையும் வியக்க வைத்திருக்கிறது.
லதா மங்கேஷ்கர் மற்றும் அவருடைய தங்கச்சி ஆஷா போஸ்லே இருவருமே பல வருடங்களாக இந்திய இசை உலகில் தங்களுடைய குரலால் பலருடைய கவலைகளுக்கு மருந்தாக இருந்தனர். இவர்கள் இருவரின் வாழ்க்கையிலும், குறிப்பாக அவர்களின் மறைவிலும் இருக்கும் ஒரு விசித்திரமான ஒற்றுமை தற்போது ரசிகர்களை ஆச்சரியப்பட வைத்திருக்கிறது.
இருவரும் 92 வயதில்... அதுவும் ஞாயிற்றுக்கிழமையன்றே காலமானது தான் இந்த ஆச்சரியத்தின் காரணம். வாழ்க்கை முழுக்க ஒன்றாக இருந்த இந்த அக்கா-தங்கை, இறப்பிலும் கூட ஒரு மாதிரியான பாதையை பகிர்ந்துகொண்டது போல ரசிகர்கள் உணர்கிறார்கள்.

இசையிலேயே பிறந்தவர்கள்
லதாவும் ஆஷாவும் சாதாரண குடும்பத்தை சேர்ந்தவர்கள் அல்ல. அவர்களுடைய தந்தை தீனநாத் மங்கேஷ்கர் ஒரு பிரபல இசைக்கலைஞர். வீட்டிலேயே இசை சூழலில் வளர்ந்ததால், பாடல் அவர்களுக்கு ஒரு திறமை மட்டும் இல்லை... அது வாழ்க்கைதான்.
தந்தை மறைந்தபோது, குடும்ப பொறுப்பை இளம் வயதிலேயே லதா ஏற்றுக்கொண்டார். தன்னுடன் தங்கை ஆஷாவையும் இசை உலகில் கொண்டு வந்தார். பின்னர் ஹ்ரிதய்நாத் மங்கேஷ்கர், உஷா மங்கேஷ்கர், மீனா மங்கேஷ்கர் ஆகியோரும் இசை பாதையில் சென்றனர்.
இரண்டு வித குரல்கள்
லதா மங்கேஷ்கர் என்றால் மென்மை, அமைதி, மனதை உருக்கும் பாடல்கள். ஆனால் ஆஷா போஸ்லே என்றால் துள்ளலான பாடல்கள், மட்டுமல்லாமல் ஒவ்வொரு பாடலிலும் தன்னுடைய தனித்துவத்தை புதுவிதமாக வெளிப்படுத்திக் கொண்டே இருந்தார். ஒரே குடும்பம்... ஆனால் இசையில் இரண்டு வேறு உலகங்கள். அதுவே இவர்களின் பெரிய பலம்.
ஒரு கட்டத்தில் கருத்து வேறுபாடுகள் காரணமாக இருவருக்கும் இடையில் தூரம் வந்தது. ஆனால் காலப்போக்கில் அந்த இடைவெளி குறைந்து, மீண்டும் அக்கா-தங்கை உறவு பழையபடி திரும்பியது.
ஆஷா போஸ்லே வாழ்க்கையில் முக்கியமான திருப்பமாக இருந்தது இசையமைப்பாளர் ஆர்.டி. பர்மன். அவருடன் இருந்த இசை கூட்டணி பின்னர் திருமணமாக மாறியது. இருவரும் சேர்ந்து உருவாக்கிய பாடல்கள் அப்போது பெரிய புதுமையாக இருந்தது. இன்றும் அந்த பாடல்கள் கேட்கும் போது புதிதாகத்தான் தோன்றும். அதே நேரத்தில், லதா மங்கேஷ்கருடனும் ஆர்.டி. பர்மன் பல மனதை வருடும் மெலோடிகளை கொடுத்தார்.
தமிழில் ஆஷா போஸ்லே
ஆஷா போஸ்லே இந்தி மட்டுமல்லாமல் தமிழ் உள்ளிட்ட பல மொழிகளிலும் பாடியிருக்கிறார். தமிழில் குறிப்பாக: ஹே ராம் படத்தில் இடம்பெற்ற நீ பார்த்த பார்வை, ஓ பட்டர்ஃப்ளை (மீரா), செண்பகமே (எங்க ஊரு பாட்டுக்காரன்), செப்டம்பர் மாதம் (அலைபாயுதே) மற்றும் கொஞ்ச நேரம் கொஞ்ச நேரம் (சந்திரமுகி) போன்ற பாடல்கள் மூலம் தமிழ் ரசிகர்களிடமும் தனி இடத்தை பெற்றார்.
மறைவிலும் கூட ஒரே பாதை
லதா மங்கேஷ்கரும் ஆஷா போஸ்லேயும் இருவரும் 92 வயதில்... ஞாயிற்றுக்கிழமையன்று காலமானது ரசிகர்களுக்கு ஒரு வியப்பை மட்டும் அல்ல, ஒரு உணர்ச்சியையும் தருகிறது. வாழ்க்கை முழுக்க இசையில் இணைந்த இரண்டு குரல்கள்... இறப்பிலும் கூட ஒரு மாதிரி ஒற்றுமையை காட்டியது போல இருக்கிறது.
என்றும் வாழும் குரல்கள்
இன்று அவர்கள் இல்லை. ஆனால் அவர்கள் பாடல்கள் இன்னும் உயிருடன் இருக்கின்றன. ஒரே குடும்பத்தில் பிறந்த இரண்டு குரல்கள்... உலகமே கேட்கும் அளவுக்கு உயர்ந்தது ஒரு சாதனை. அந்த சாதனை காலம் கடந்தாலும் அழியாதது.
-
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
பிறந்தநாளன்று புதிய கட்சி அறிவிப்பு? பாஜக மேலிடத்திடம் டைம் கேட்ட அண்ணாமலை.. ரகசிய மூவ்! -
தாய் பத்திரம் தொலைஞ்சிருச்சா? ஆன்லைனில் ஈஸியாக ஒரிஜினலை மீட்க 6 ஆவணங்கள் என்ன? சிம்பிள் ஸ்டெப்ஸ் -
முக்கோணப் போட்டியில் தமிழ்நாடு.. 112 ஐ நெருங்கும் விஜய்? மாஸ் கம்பேக்கில் திமுக.. பதற்றத்தில் அதிமுக -
பனையூர் பாபுவுக்கு ஸ்கெட்ச்! அடுத்து ஆளூர் ஷாநவாஸை நோக்கி குரைக்கிறார்கள்! சிந்தனைச் செல்வன் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
அரசியலுக்கு முழுக்கு.. திமுக பொதுச்செயலாளர் பதவியில் இருந்து விலகும் துரைமுருகன் -
தந்தை இறப்பில் நடந்தது மீண்டும் வேண்டாம்.. தாயார் மறைவில் அஜித் குடும்பம் எடுத்த முடிவு! வருத்தத்தில் ரசிகர்கள் -
தமிழக பள்ளி – கல்லூரி மாணவர்களுக்கு அரசு பஸ்சில் இலவச பயணம்.. அறிவித்தார் போக்குவரத்து அமைச்சர் -
8-வது ஊதியக் குழு அப்டேட்! சாதாரண ஊழியருக்கு 1.5 லட்சம்.. மத்திய அரசு ஊழியர்களுக்கு குஷி -
முதல்வர் விஜய்யை சந்திக்காத மேயர் பிரியா! சுணக்கத்தில் சென்னை மாநகராட்சி.. மோதலா? து.மேயர் விளக்கம் -
திருச்சி-க்கு வரும் தாஜ்.. ஒரே நேரத்தில் 3 மெகா பிராண்ட்.. அதுவும் இந்த ஏரியாவுல!












Click it and Unblock the Notifications