நான்.. முந்திமாதிரி.. இல்லங்க..ரொம்ப மாறிட்டேன்...பவ்யமாக வாழ்த்து கூறிய அஸ்வின்
சென்னை: பவ்வியமாக புத்தாண்டுக்கு நன்றிகளையும் வாழ்த்துக்களையும் கூறி.. தன் இன்ஸ்டாகிராம் பேஜ்ஜில் போஸ்ட் போட்டுள்ள அஸ்வினின் போஸ்ட்க்கு கமெண்டுகள் குவிந்து வருகிறது.
வளர்ர பையன் இனிமேலாவது பார்த்து பக்குவமா இருந்துக்கோங்கப்பா என்று புத்தாண்டிற்கு அவரது ரசிகர்கள் அவருக்கு அறிவுரை வழங்கி வருகின்றனர்.

புயலை கிளப்பிய பேச்சு
2021 ஆம் ஆண்டு சினிமா,அரசியல் போன்ற துறைகளில் பல சர்ச்சைக்குள்ளான சம்பவங்களும் வித்தியாசமான நிகழ்வுகள் பட்டியலிட்டு பார்த்தோமென்றால் அதில் கண்டிப்பாக அஸ்வினின் 'என்ன சொல்ல போகிறாய்' படத்தின் ஆடியோ லான்ச் ஸ்பீச் கண்டிப்பாக இருக்கும். அந்த அளவிற்கு சமூக வலைதளங்களிலும், அஸ்வினின் திரையுலக கேரியரில் பெரும் புயலை வீசிச் சென்ற ஸ்பீச் அது.

கண்ணு பட்டு போச்சா
அஸ்வினுடைய ரசிகர்களே அவரை கலாய்க்கும் அளவிற்கு அந்த ஸ்பீச் அவருக்கு வினையாய் அமைந்தது. 2021 ஆம் ஆண்டு ஆரம்பித்தது என்னமோ அஸ்வினுக்கு மிக அருமையான ஆண்டாக தான் இருந்திருக்கிறது. விஜய் டிவியின் குக் வித் கோமாளி மூலம் ஓவர் நைட்டில் புகழின் உச்சியில் ஏறிய அஸ்வின், தமிழ் ரசிகர்களால் குறிப்பாக ரசிகைகள் மிகவும் விரும்பத்தக்க நட்சத்திரமாக மாறினார்.

அதிரவைத்த ஆடியோ லான்ச்
அதன்பின்பு தொட்டதெல்லாம் வெற்றி என்பதுபோல் அடுத்தடுத்து ஆல்பம் சாங் ஹிட்ஸ் என்று ஜெட் வேகத்தில் முன்னேறினார் அஸ்வின். பல இயக்குனர்கள் தங்கள் படத்தில் அவரை நடிக்க வைப்பதற்கு ஆர்வம் காட்டவும் செய்தனர். இப்படி சுமூகமாகப் போய்க் கொண்டிருந்த அஸ்வின் கேரியரில் யார் கண் பட்டதோ..!!?? 2021 ஆம் ஆண்டு முடியும் போது என்ன சொல்ல போகிறாய் ஆடியோ லான்ச்சில் உண்மையை பேசுகிறேன் பேர்வழி என்று உளறிக் கொட்டி தன் தலையில் தானே மண்ணை அள்ளிப் போட்டுக் கொண்டார். ஆடியோ லான்ச் பேச்சை வைத்து நெட்டிசன்கள் இவரை சிறப்பாக சம்பவம் செய்துவிட்டனர்.

பவ்வியமான புத்தாண்டு வாழ்த்துக்கள்
பழைய நிலைக்கு திரும்ப மெனக்கெட்டு வரும் அஸ்வின்,2021ஆம் ஆண்டு தமக்கு உண்மையில் பல அம்சங்களில் சிறப்பானதாகவே இருந்தது என்றும், உங்களிடமிருந்து நான் பெற்ற அன்பையும், பாசத்தையும் சிறந்த சாதனைகளில் ஒன்றாகவே கருதுவதாகவும் குறிப்பாக அது தலைகீழாக இருந்தாலும் பாதகமாக இருந்தாலும் அதே பாசத்தை பொழிந்தீர்கள்... குட்பை 2021.. நான் அனுபவித்த மற்றும் கற்றுக்கொண்ட அனைத்து விஷயங்களுக்கும் நன்றி. மிகவும் உற்சாகமாகவும் சிறப்பான 2022ஆம் ஆண்டு காத்திருக்கிறேன் என்று கூறி புத்தாண்டு வாழ்த்துக்களை தெரிவித்துள்ளார். இந்த போஸ்ட்டை பார்த்த நெட்டிசன்கள் திருந்திட்டார்யா..மனுஷன். இப்பல்லாம் நைட்டு கூட தூங்குறது இல்லை போல என்று கலாய்த்து வந்தாலும், அஸ்வினுக்கு 2022 ஆம் ஆண்டு சிறப்பாக அமைய வாழ்த்துக்களை கூறி வருகின்றனர்.
-
30 வருடமாக "டிமிக்கி" கொடுத்த பாகிஸ்தான்.. உடனே ரூ.32,459 கோடி கடனை தர வேண்டும்.. UAE விதித்த கெடு -
Jayalalitha: நானும் ஜெயலலிதாவும் சர்ச் பார்க் பள்ளியில்தான் படித்தோம்! மணப்பாறையில் கனிமொழி பேச்சு -
ரஷ்ய கஜானாவில் அடி.. இந்தியாவுக்கு ஓடி வந்த புடின் அரசு.. LPG பிரச்சனைக்கு வழிபிறந்தது? -
இந்தோனேஷிய கடலில் அது பாட்டுக்கு போகுது.. உலகமே வியப்பில் உறைந்திருச்சு! விலகிய 40 கோடி வருஷ மர்மம் -
விலகினார் திருமாவளவன்.. சட்டசபை தேர்தலில் போட்டியில்லை என அறிவிப்பு.. பின்வாங்கியது ஏன்? விளக்கம் -
ஈரான் போரை வைத்து பணம் பார்க்கும் டிரம்ப் வாரிசுகள்.. நடுவில் சிக்கிக்கொண்ட அரபு நாடுகள்! -
சிங்காநல்லூர் காங்கிரஸ் வேட்பாளர் ஶ்ரீநிதி அண்ணாமலை ஆதரவாளராமே.. போராட்டத்தில் குதித்த கதர்கள் -
அமெரிக்க கோட்டையில் ஓட்டை! ஈரானின் 'துல்லிய' ட்ரோன் தாக்குதல்: சிதறிய சி.ஐ.ஏ ரகசியங்கள்! -
Sundar C: ஏங்க கனிமொழி மட்டும் தூத்துக்குடிக்காரங்களா? நானும் மதுரைக்காரன்தான்! சுந்தர் சி விமர்சனம் -
தமிழ் புத்தாண்டு பலன்: விருச்சிக ராசிக்கு 9 இல் குரு.. தொட்டதெல்லாம் தங்கமாகப் போகுது -
குஷ்புவிடம் 3.5 கிலோ தங்கம், 24.3 கிலோ வெள்ளி இருக்கு.. சுந்தர்.சி சொத்து மதிப்பு எவ்வளவு? -
டாக்டர் படிப்பை முடித்த அனிதா சம்பத்.. உருக்கமாக சொன்ன தகவல்! கடைசியில் இப்படி ஆகிடுச்சே!












Click it and Unblock the Notifications