எக்ஸ்பிரஷன் கியூட் அஸ்வின்.. இப்படியே போனால் வேர்ல்ட் கிரஸ்ஷா சீக்கிரமா மாறி விடுவார் போல
சென்னை: என்ன பார்வைடா அது.. அந்தப் பார்வையை பார்க்கும் போதே மனசுக்குள் ஏதோ பண்ணுகிறது என்று இளம்பெண்கள் துள்ளிக்குதித்து அஸ்வினுடைய வீடியோக்களை வழங்கி வருகின்றனர்.
போட்டியே இல்லாமல் இவருக்கு வேர்ல்ட் கிரஷ் என்னும் பட்டத்தைத் தூக்கிக் கொடுத்து விடுவார்கள் போல.
ரசிகர்கள் ஒருபுறம் அஸ்வினுக்கு ஆதரவு கொடுக்க..இதோ வரேன் என்று சிவாங்கியும் முதல் கமெண்டை தட்டிவிட இன்ஸ்டாகிராமே கமெண்ட் களால் தவித்து வருகிறது.

பெண் ரசிகர்களை கவர்ந்துவிட்டாரே
அடடா!!! அழகு!!! அள்ளுது.... அஸ்வினே!!... என்று, அஸ்வினின் ரீல்ஸ்ஸ் வீடியோவை அவரது ரசிகர்கள் ரீவைண்ட் செய்து செய்து ரசித்து வருகின்றனர்.குறிப்பாக அவரது பெண் ரசிகைகள் வீடியோவில் அவரது க்யூட்டான எக்ஸ்பிரஸண்களை... கன்னாபின்னாவென்று புகழ்ந்து வருகின்றனர்.புகழாமல் எப்படி இருப்பார்கள், அந்த அளவிற்கு தன்னுடைய க்யூட்டான எக்ஸ்பிரஷனை காட்டி அனைவரின் மனதிலும் சந்தோசத்தை விதைத்து இருக்கிறாரே.

மனம் தளராத முயற்சி தான்
அஸ்வின் இந்த வீடியோவை அப்லோட் செய்ததும் சில மணி நேரங்களிலேயே ஆயிரக்கணக்கான லைக்குளையும்,கமெண்டுகளையும் பெற்று ட்ரெண்டிங்காக வருகிறது.இன்று இவர் இந்த அளவுக்கு பிரபலமாக இருந்தாலும், அவரது கேரியரில் ஆரம்பகாலம் என்னவோ அவ்வளவு சிறப்பாக இல்லை. அஸ்வின் 2015ம் ஆண்டு விஜய் டிவியின் 'ரெட்டைவால் குருவி' சீரியல் மூலம் அறிமுகமாகி,பின் பல சீரியல்கள், சில திரைப்படங்களில் நடித்திருந்தாலும், அவரால் பெரிய அளவிற்கு மக்களிடம் ரீச்சாக முடியவில்லை. இவரும் மனம் தளராமல் எந்தப் படமாக இருந்தாலும் சிறிய அளவிலான கேரக்டராக இருந்தாலும் விடாமல் நடித்து தன் திறமையை வளர்த்து வந்தார் .

புகழின் உச்சியில் அஸ்வின்
இவரது திரையுலக வாழ்க்கையை அப்படியே தலைகீழாக புரட்டிப் போட்டது 2020ஆம் ஆண்டு தான். டைம்ஸ் ஆப் இந்தியா வெளியிட்ட 2020 ஆம் ஆண்டில் 'தொலைக்காட்சிகளில் மிகவும் விரும்பத்தக்க மனிதர்' என்ற பெருமையை அஸ்வின் பெறுவதற்கு முக்கிய காரணம் குக் வித் கோமாளி நிகழ்ச்சிதான்.இந்த நிகழ்ச்சி மூலம் அவரே நினைத்திராத அளவிற்கு புகழின் உயரத்திற்கு சென்றார். பெரும்பாலும் பெண் ரசிகைகள் சாக்லேட் பாயாக இவரை நினைத்து ஏங்கும் அளவிற்கு செம ரீச் ஆனார். இவருக்கும் சிவாங்கிகும் இருந்த கெமிஸ்டரி இந்த நிகழ்ச்சி வெற்றி பெறுவதற்கு மேலும் ஒரு முக்கிய காரணமாய் அமைந்தது.

கிடைத்த வாய்ப்புகளை விட வில்லை
இவரது திரையுலக பயணத்தை குக் வித் கோமாளி நிகழ்ச்சிக்கு முன்பு, குக் வித் கோமாளி நிகழ்ச்சிக்குப் பின்பு,என்று பிரித்து சொல்லுமளவிற்கு அந்த நிகழ்ச்சிக்குப் பின்பு பல படங்கள், ஆல்பம் சாங்குகளில் கமிட்டானர்.சில நாட்களுக்கு முன்பு இவரது நடிப்பில் வெளிவந்து 'குட்டி பட்டாசு' என்ற ஆல்பம் பட்டி தொட்டியெல்லாம் பட்டையை கிளப்பியது. தொடர்ந்து இதை போன்றே 'யாத்தி யாத்தி', லோனர்,அடிபொலி, என்ற ஆல்பம் சாங்குகளும் இவரது நடிப்பில் உருவாகிக் கொண்டிருக்கிறது. ஹரிஹரன் இயக்கத்தில் 'என்ன சொல்ல போகிறாய்' என்ற திரைப்படமும் இவர் முழு நேர கதாநாயகனாக நடித்து வெளிவர காத்துக்கண்டிருக்கிறது. அதுமட்டுமின்றி பிரபல தெலுங்கு நடிகர் நானி தயாரிப்பில் மல்டி லாங்குவேஜில்"மீட் க்யூட் "ஒரு வெப் சீரியஸ் தயாராகிக்கொண்டிருக்கிறது.இப்படி பல நாட்களுக்கு தனது கால்ஷூட்டை ஃபுல் செய்து வைத்துள்ளார்.

சமூக வலைத்தளத்தில் ஆக்டிவ்
என்னதான் பிசியாக இருந்தாலும் தனது ரசிகர்களுக்காக அவ்வப்போது சில வீடியோக்களை சமூக வலைதளங்களில் அப்லோட் செய்து வருகிறார். பெரும்பாலும் சின்னத்திரையில் கதாநாயகிகளே சமூக வலைதளங்களில் ஆக்கிரமித்திருக்கும் நிலையில், ஆண்களுக்கு எல்லாம் ஒரு ஆறுதலாய்,ஏனைய நடிகைகளுக்கு சமமாக அஸ்வினும் சமூகவலைதளங்களில் அவருடைய ரசிகர்களால் கொண்டாடப்பட்டு வருகிறார்.அதற்கு இவர் போடும் போஸ்ட்கள் பெறும் லைக்குகளும் கமெண்டுகளுமே சாட்சி.

யாரையும் இவ்வளவு அழகா பாக்கல
'யாரையும் இவ்வளவு அழகா பாக்கல என்று' அஸ்வினை பார்த்து பல ரசிகைகள் அவருக்கு கமெண்ட் பண்ணி வரும் சூழ்நிலையில், அஸ்வினே அந்த பாடலுக்கு போட்டுள்ள ரீல்ஸ் வீடியோவும், அதில் எந்தவித அலப்பறையும் இல்லாமல் சிம்பிளாக அவர் காட்டியுள்ள ரியாக்சன்களும் அவரது ரசிகர்கள் குறிப்பாக ரசிகைகள் செம ட்ரெண்ட் செய்து வருகின்றனர்.போதாதகுறைக்கு சிவாங்கி வேறு வீடியோவை புகழ்ந்து கமெண்ட் செய்துள்ளார்.இதனாலோ என்னவோ!! அவரது ரசிகர்களும் இணைந்து கொண்டு இந்த வீடியோவை சமூக வலைத் தளங்களில் அதகளப்படுத்தி வருகின்றனர்.
-
எல்லாரும் மன்னிச்சிருங்க.. வாழ்க்கையில் நடந்த சோகம்! உருக்கமாக பேசிய பாக்கியலட்சுமி சீரியல் கோபி -
2026 தேர்தல் யார் ஜெயிப்பார்கள்? ‘நீயா நானா’வில் ஜோதிடர்கள் உடைத்த ரகசியம்! பெண்கள் ஓட்டு, மறு எலக்சன் இருக்காமே! -
தமிழ்நாட்டில் 27 வயது தாசில்தார் சம்பளம்.. 37 வயதில் எவ்வளவு மாறியிருக்கும் தெரியுமா? -
மகளிர் உரிமை தொகை வராது.. அடுத்த 1 வாரத்தில் தமிழக அரசு தரும் ரூ.2000.. யாருக்கெல்லாம் கிடைக்கும்? -
கோவையில் 2022ல் சரவணம்பட்டியில் இடம் வாங்கி போட்டிருந்தால் இன்று நீங்கள் கோடீஸ்வரன்.. மாறிய மதிப்பு -
மகளிர் உரிமைத்தொகை ரூ.3,000.. கல்வி கடன் தள்ளுபடி.. ராமதாஸ் வெளியிட்ட தேர்தல் வாக்குறுதிகள்! -
₹10 லட்சம் லோன் எடுத்தா ஒரு பகுதி இலவசமா? கூட்டுறவு வங்கியில் மானியம்.. பிசினஸ் லாபம் சூப்பர் சான்ஸ் -
சென்னையில் 2 லட்சம் பேருக்கு பறந்த நோட்டீஸ்.. வீடு, கட்டிடம் வைத்துள்ளவர்களுக்கு முக்கிய அறிவிப்பு -
பாதாளத்தில் விழும் தங்கம்.. "ரூ.10,000க்கு கூட போகலாம்.." மெகா இன்ப செய்தியை சொன்ன ஆனந்த் சீனிவாசன் -
சிறகடிக்க ஆசை: போலீஸ் சொன்ன விஷயம்! சந்தோஷத்தில் முத்து! அண்ணாமலை வீட்டில் கொண்டாட்டம்! விஜயா முடிவு -
லால்குடியில் களமிறங்கிய ஆதவ் அர்ஜுனா மாமியார்.. அதிமுகவில் இணைந்த 1 மாதத்தில் சீட் கொடுத்த எடப்பாடி -
ஆபரண தங்கம் 6 சவரன் 15 வருடம் முன் வாங்கினீங்களா? அப்போ ₹1 லட்சம், இப்ப ரேட் தெரிஞ்சா ஷாக் ஆவீங்க












Click it and Unblock the Notifications