உணர்ச்சிவசப்பட்டு உருகிய அஸ்வின்... ஆறுதலால் அணைத்துக் கொள்ளும் ரசிகர்கள்
சென்னை: அஸ்வின் தன்னுடைய ரசிகர்கள் தன் மீது வைத்திருக்கும் பாசத்தை பார்த்து மெய்சிலிர்த்து போயுள்ளார்.
தனக்காக பீல் பண்ணும் ரசிகர்களுக்கு சமூக வலைத்தளத்தில் போஸ்ட் போட்டு தன்னுடைய கருத்தை கூறியுள்ளார்.

ரசிகர்களின் ஆதரவுக்கு நன்றி
குக் வித் கோமாளி நிகழ்ச்சியின் மூலமாக பட்டி தொட்டி எல்லாம் பிரபலமடைந்த அஸ்வின் தற்போது முதல் முறையாக வெள்ளித் திரையில் தோன்றியிருக்கிறார். அவருடைய முதல் திரைப்படம் சமீபத்தில் வெளியான நிலையில் அவருக்கு ஆதரவு தெரிவித்து வந்த ரசிகர்களுக்கு நன்றி கூறியுள்ளார். எதிர்பாராத விதமாக இவருடைய வாழ்க்கையில் பல்வேறு திருப்புமுனைகள் ஏற்பட்டுவிட்டது. இந்த சினிமா துறையில் இவர் சாதிக்க வேண்டும் என்பதற்காக பல வருடங்களாக போராடிக் கொண்டிருந்த நேரத்தில் இவருடைய வார்த்தைகளே இவருக்கு வினையாக மாறிவிட்டது.

நெட்டிசன்களால் நெகட்டிவாக பிரபலம்
இவர் முதல் முறையாக நடித்த என்ன சொல்ல போகிறாய் திரைப்படத்தின் திரைப்பட பாடல் வெளியீட்டு விழாவில் உணர்ச்சிவசப்பட்டு பேசிய வார்த்தைகள் சமூகவலைத்தளத்தில் இவர் மீது காண்டில் இருந்த நெட்டிசன்கள் அதிகமாக இவரை கலாய்க்க தொடங்கிவிட்டார்கள். இதுவரைக்கும் இவருக்கு அதிகமான ரசிகர்கள் ஆதரவு கொடுத்துக் கொண்டிருக்கும் நேரத்தில், ஒரு சில நெட்டிசன்கள் இவருடைய செயல்பாடுகளை சமூக வலைத்தளத்தில் அதிகமாக கலாய்த்துக் கொண்டிருக்கிறார்கள்.

ஆல்பம் பாடல்களில் கலக்கல்
பல ஷார்ட் பிலிம் களில் நடித்து ஏற்கனவே பிரபலமடைந்த இவர் பல ஆல்பம் சாங்கு களின் மூலமாக இளம் ரசிகர்களை அதிகமாக கவர்ந்துள்ளார். இவர் நடித்து பல ஆல்பம் சாங் ஹிட்டாகி உள்ளன. ஆனால் இவருக்கு பெரிய அளவில் பெரும் புகழும் வாங்கிக் கொடுத்தது குக் வித் கோமாளி நிகழ்ச்சிதான் இந்த நிகழ்ச்சியில் இவருடைய பர்பாமன்ஸ் மற்றும் க்யூட்டான எக்ஸ்பிரஷன் ரசிகர்களை இவர் பக்கமாக திருப்பி இருந்தது. இவருக்கு அதிகரித்த ரசிகர்களின் காரணமாகத்தான் இவருக்கு திரைப்பட வாய்ப்புகள் கிடைக்கத் தொடங்கியிருக்கிறது என்று ஒரு கருத்து பரவி வருகிறது.

ரசிகர்களின் உருக்கமான அட்வைஸ்
சமீபத்தில் வெளியான என்ன சொல்ல போகிறாய் திரைப்படம் இவர் எதிர்பார்த்த அளவிற்கு பெரிய வெற்றிகள் கிடைக்கவில்லை. என்றாலும், அவருடைய ரசிகர்கள் அவருக்கு ஆறுதல் கொடுக்கும் விதமாக சமூக வலைத்தளத்தில் பல கருத்துக்களை வெளியிட்டு வருகின்றனர். இதற்கு நன்றி கூறி டுவிட்டரில் இவர் போஸ்ட் போட்டுள்ளார். தேங்க் ஃபுல் அண்ட் கிரேட் ஃபுல் என்று அதில் கேப்ஷன் கொடுத்துள்ளார். அதற்கு ரசிகர்கள் பலர் பலவிதமான கருத்துக்களை வெளியிட்டு கொண்டிருக்கும்போது ஒரு ரசிகர் இவரிடம் உணர்ச்சிபூர்வமாக, எதற்காக தம்பி எங்களுக்கு எல்லாம் நன்றி கூறிக் கொண்டு இருக்கிறாய், உன்னுடைய அடுத்த வேலையை பார்... எங்களுடைய ஆசிர்வாதம் எப்போதும் உனக்கு இருக்கிறது என்று அறிவுரைகளையும் கூறியிருக்கிறார்.
-
சிறகடிக்க ஆசை: விஜயா செய்த செயலால் ரசிகர்கள் மனமே குளிர்ந்து போச்சு! ரோகிணிக்கு பேரடி.. சந்தோஷத்தில் முத்து -
நீ பாவம் பண்ணியிருக்க சேகர்பாபு... மேடையிலேயே நேருக்கு நேராக ஆ ராசா பேச்சு -
உள்ளே யாரு, அவனை வெளியே வர சொல்லு! வசமா பிடிபட்ட மனைவி.. தப்பிய கணவனை சுற்றி வளைத்த தஞ்சாவூர் போலீஸ் -
டாஸ்மாக் தனியார் மயம் ஆகிறதா? மிகப்பெரிய சீர்திருத்தம் வரப்போகிறது.. அமைச்சர் விக்னேஷ் தகவல் -
விஜய் அமைச்சரவை கூட்டத்தின் Exclusive Footage.. திமுக ஐடி விங் பதிவிட்ட வீடியோ! -
சென்னை பஸ் ஸ்டாண்ட் புரட்சி.. களமிறக்கப்படும் புதிய டெர்மினல்கள்.. 2000+ இ-பஸ்கள்.. அடியோடு மாறுது -
டிகே சிவக்குமாருக்கு முதல் அடி! பதவியேற்ற 2 நாளில் கர்நாடக சீனியர் அமைச்சர் ராமலிங்க ரெட்டி ராஜினாமா -
ஒரே கல்லில் 2 மாங்காய்.. விசிகவை வளைக்க திமுக போட்ட மாஸ்டர் பிளான்.. தமிழக அரசியலில் பெரும் பரபரப்பு -
இன்போசிஸ், ஹெச்சிஎல் செய்த வேலையை பாத்தீங்களா.. இந்திய ஐடி ஊழியர்கள் தான் கிங்மேக்கர்! -
இனி திமுக- அதிமுக போல் தான் பாஜகவையும் பார்ப்பேன்.. புதிய இயக்கத்தை தொடங்கியதுமே அண்ணாமலை அதிரடி -
கே.என்.நேரு மீது லஞ்ச ஒழிப்புத்துறை வழக்கு.. விஜய் அரசின் முதல் ஆக்சன்.. அடித்து ஆடும் அருண் ஐபிஎஸ் -
இர்ஃபானின் பிரியாணி பக்கெட்டை பிரித்ததுமே ஆடிப்போன கஸ்டமர்ஸ்.. 4 கிலோவுக்கு இவ்வளவுதானா ஆட்டுக்கறி?












Click it and Unblock the Notifications