இரவோடு இரவா கட்சி எழுதி தந்த நடிகை.. பிரபு வேற தங்கம் வாங்க சொல்வாரு! அட்சய திருதி சுரண்டல்: பிரபலம்
சென்னை: 30 வருடங்களுக்கு முன்பு பெண்கள், புடவைகள் மூலமாக சுரண்டப்பட்டார்கள். ஸ்ரீதேவி புடவை, நதியா புடவை, என்று புடவைகளுக்கு பெண்களை அடிமையாக்கினார்கள். சினிமா கவர்ச்சி மூலமாக வியாபாரிகள் பொதுமக்களை, தங்கள் பக்கம் இழுக்கிறார்கள் என்று மூத்த பத்திரிகையாளர் சேகுவேரா கருத்து தெரிவித்துள்ளார்.. அத்துடன் அட்சயதிருதியில் தங்க நகைகள் வாங்குவது குறித்தும் சில விஷயங்களை பேசியிருக்கிறார்.
Realone Media என்ற சேனலுக்கு பேட்டி தந்துள்ள சேகுவேரா, "அட்சயம் என்றால் வளரும் என்பது அர்த்தமாகும்,. அட்சய திதி நாளில் நகை வாங்குவது நம்புவர்களுக்கு நம்பிக்கை, நம்பாதவர்களுக்கு மூடநம்பிக்கை..
பொதுவாக, இங்கே ஒரு நம்பிக்கை விதைக்கப்படுகிறது. அந்த நம்பிக்கை , நமக்கு உத்வேகம் தருகிறதென்றால், மனோதிடத்தை தருகிறது என்றால், அந்த நம்பிக்கையை ஏற்கலாம். ஆனால், ஒரு நம்பிக்கையின் மூலமாக சுரண்டல் நடக்கிறதென்றால்? கட்டாயம் வாங்கியாக வேண்டும் என்று நிர்ப்பந்திக்கும்போது? இங்கேதான் சிக்கல் ஏற்படுகிறது.

5 சவரன் தங்க நகை
5 சவரன் நகையை வாங்கினால், மேலும் பணத்தை தந்தால்தான் இன்னொரு 5 சவரன் வாங்க முடியும். எல்லாருடைய குடும்பத்திலும் இன்பம், துன்பம், ஏற்றம், இறக்கம் இருக்கத்தான் செய்யும். தங்கத்தை வாங்க முடியாத நபர்கள், உந்துதல் சக்தி இல்லாதவர்களும், அன்றைய தினம் அரை பவுனாவது வாங்கிவிட வேண்டும் என்று நினைக்கிறார்கள். இதற்காக கடன் வாங்கி, நகை வாங்குகிறார்கள்.. இதனால், தங்க நகை வளருகிறதோ, வாங்கிய கடனின் வட்டியாக வளர ஆரம்பித்துவிடுகிறது.
இங்குதான் சாதாரண மக்களின் நம்பிக்கை மூலமாக ஒரு சுரண்டல் நடக்கிறது. இந்த வியாபாரத்துக்கு பிரபலமான நடிகைகளை பயன்படுத்துகிறார்கள்.. திரிஷா, ஜோதிகா, சினேகா, நயன்தாரா இப்படி பாதி வயதை, கடந்த மார்க்கெட போன நடிகைகள், இப்படியான விளம்பரஙகளில் நடிக்கிறார்கள்.. இவர்களுக்கு நடுவில் பிரபு வந்து, நகையை வாங்க சொல்கிறார்.
இரவோடு இரவாக
வியாபாரத்தை பெருக்குவது தவறில்லை.. மார்க்கெட்டிங் என்பது அவசியம் என்றாலும் அதில் ஒரு நேர்மை இருக்க வேண்டும்.. நைட்டோட நைட்டா கட்சியை எழுதி தந்த அந்த நடிகை, நகையை வாங்க ஒரு கடையை விளம்பரம் செய்கிறார்.. பிறகு அதை கொண்டு போய் அடகு வைப்பதற்காக இன்னொரு கடையின் விளம்பரம் செய்கிறார்.
30 வருடங்களுக்கு முன்பு பெண்கள், புடவைகள் மூலமாக சுரண்டப்பட்டார்கள். ஸ்ரீதேவி புடவை, நதியா புடவை, என்று புடவைகளுக்கு பெண்களை அடிமையாக்கினார்கள். சினிமா கவர்ச்சி மூலமாக வியாபாரிகள் பொதுமக்களை, தங்கள் பக்கம் இழுக்கிறார்கள்..
குண்டுமணி தங்கம்
"அட்சய திதியன்று தங்கம் வாங்கினால் தங்கமாய் சேரும், அன்றைய தினம் வாங்காமல் விட்டுவிட்டால், தங்கம் சேரவே சேராது" என்று மிரட்டினால் எப்படி? இப்படி ஒரு உந்துதலை ஏற்படுத்தி மக்களை ஏமாற்றுகிறார்கள்.. கடன் வாங்கி குண்டுமணி தங்கமாவது வாங்காவிட்டால், கணவன் - மனைவிக்கு இடையே தகராறு குடும்பங்களில் தகராறு வெடிக்கிறது.
ஒருபக்கம், வியாபார என்ற பெயரில் எந்த வகையிலும் உறவு முறைகளை பாதிக்கக்கூடாது, ஏழைகள் மீது சுரண்டல் ஏற்படக்கூடாது. அடுத்தவர்கள் உணர்வுகளை நான் மதிக்கிறேன், அதுக்காக முட்டாள்தனங்களை, மூடநம்பிக்கைகளை நம்பி யாரும் ஏமாந்துவிடக்கூடாது. மன உளைச்சலை ஏற்படுத்தி கொள்ளக்கூடாது.. இதனால் பகைதான் வளரும் , நகை வளராது" என்று தெரிவித்துள்ளார்.
-
20% வரை சரிந்த தங்கம் விலை! ஆனாலும் இந்தியாவுக்கு முழு பலன் கிடைக்காது! நிபுணர்கள் சொல்லும் விளக்கம் -
Gold Price: தங்கம் விலை ரூ.2 லட்சத்தை தொடப் போகுது.. இனி குறையவே குறையாது.. உச்சம் தான்! சலானி எச்சரிக்கை -
Gold Price: ஒரே நாளில் 7,000 சரிந்த தங்கம்.. இப்போ வாங்குறது சரியாக இருக்குமா? நிபுணர்கள் சொல்வது என்ன? -
Gold Rate Today: திடீர் ஷாக் கொடுத்த தங்கம் விலை.. குறைந்த வேகத்தில் மீண்டும் உயர்வு! மாலையில் அதிர்ச்சி! -
தயவு செஞ்சு குறைஞ்சுடாத தங்கமே.. மீண்டும் திருப்பி வைக்க முடியாது.. தங்கம் விலை சரிவால் ட்விஸ்ட் -
கன்னியாகுமரியில் 45 சவரன் தங்கம்.. கப்பல் என்ஜினியர் வீட்டில் திருடன் கொடுத்த ஒற்றை க்ளூ -
கேஸ் சிலிண்டர் விலை மாறுது! ஏப்.1 முதல் புதிய விலை! இல்லத்தரசிகள் மாத பட்ஜெட்டில் என்ன தாக்கம்? -
தங்கம்.. 'தரை' தட்டியது ஏன்? கூடை கூடையாக மார்க்கெட்டில் விற்ற அரபு நாடுகள்.. ஒரு ராட்சனின் வீழ்ச்சி -
இமாச்சல் போல.. தமிழகத்தில் அரசு ஊழியர்களின் மாத சம்பளத்தை 30% குறைக்க வேண்டியது வரும்.. அன்புமணி -
டெல்லி தந்த கிரீன் சிக்னல்.. 4 வழியாக மாறும் தமிழ்நாட்டின் மூன்று முக்கிய சாலைகள்.. மெகா பிளான்! -
அதிமுக கூட்டணியில் பாமகவுக்கு 18, அமமுகவுக்கு 11 தொகுதிகள் ஒதுக்கீடு! -
PHH, AAY ரேஷன் கார்டுதாரர்களுக்கு முக்கிய அறிவிப்பு! கார்டு காலி ஆயிடும்..ரேகை வைக்கலைனா ப்ளாக் தான்












Click it and Unblock the Notifications