சமந்தாவை லவ் பண்ண சொன்னாங்க! அப்போ நடந்ததை மறக்க முடியாது.. வெளிப்படையாக பேசிய அதர்வா
சென்னை: நடிகர் அதர்வா நடித்த நிறங்கள் மூன்று திரைப்படத்திற்கான ப்ரமோஷனுக்கு பேட்டியில் கலந்து கொண்ட அதர்வா தன்னுடைய முதல் திரைப்பட அனுபவம் குறித்து பேசி இருக்கிறார். அப்போது நடிகை சமந்தாவை காதலிக்க சொன்ன காட்சிகள் குறித்தும் பேசி இருக்கிறார்.
நடிகர் முரளியின் மகனான அதர்வா பாணா காத்தாடி என்ற திரைப்படத்தின் மூலமாகத்தான் தமிழ் சினிமாவில் அறிமுகமானார். அதைத் தொடர்ந்து அவர் ஒரு சில திரைப்படங்களில் நடித்திருந்தாலும் ஒவ்வொரு திரைப்படங்களிலும் தன்னுடைய வித்தியாசமான நடிப்பை காட்டி வருகிறார்.

2013ஆம் ஆண்டு சிறந்த நடிகருக்கான ஃபிலிம் பேர் விருதையும் வாங்கி இருக்கிறார். அதிலும் இவருடைய நடிப்பில் முப்பொழுதும் உன் கற்பனைகள், பரதேசி, இமைக்கா நொடிகள், இரும்பு குதிரை, சண்டிவீரன், ஈட்டி, ஜெமினிகணேசனும் சுருளிராஜனும் போன்ற படங்கள் எல்லாம் இவருக்கு பெயர் சொல்லும் அளவிற்கு இருக்கும்.
அதிலும் முதல் திரைப்படத்தில் நடிகை சமந்தாவோடு தான் இவர் நடித்திருப்பார். அந்த திரைப்படத்தில் இடம் பெற்ற எல்லா பாடல்களும் ரசிகர்கள் மத்தியில் வரவேற்பை பெற்றது. பாணா காத்தாடி திரைப்படம் 2010 ஆம் ஆண்டு வெளியாகி நல்ல வரவேற்பை பெற்றிருந்தது. இந்த திரைப்படத்தில் ஒரு காட்சியில் அவருடைய தந்தை முரளியும் நடித்திருப்பார்.

இந்த திரைப்படத்திற்கு பிறகு தான் முரளி திடீரென மாரடைப்பால் இறந்து போயிருந்தார். தன்னுடைய மகன் தமிழ் சினிமாவில் பெரிய அளவில் வளர வேண்டும் என்று ஆசையோடு இருந்த முரளிக்கு அதர்வாவின் வளர்ச்சியை பார்ப்பதற்கு கொடுத்து வைக்கவில்லை என்று தான் சொல்ல வேண்டும்.
சமீபத்தில் அதர்வா நிறங்கள் மூன்று என்ற திரைப்படத்தில் நடித்திருக்கிறார். இந்த திரைப்படத்தை இயக்குனர் கார்த்திக் நரேன் இயக்கியிருக்கிறார். இந்த திரைப்படத்தில் அதர்வாவுடன் சரத்குமார், ரஹ்மான், அம்மு அபிராமி உட்பட பல பிரபலங்கள் நடித்திருக்கிறார்கள்.

இந்த திரைப்படம் வெளியாகி கலவையான விமர்சனங்களை பெற்றிருக்கிறது. இந்த நிலையில் இதற்கான பட பிரமோஷனில் கலந்து கொண்ட அதர்வா தன்னுடைய முதல் திரைப்பட அனுபவங்கள் குறித்து பேசி இருக்கிறார். அதில் அவர் பேசுகையில், நான் சினிமாவில் எத்தனை வருடங்கள் நடித்தாலும் என்னுடைய முதல் ஜோடியை என்னால் மறக்க முடியாது.
எனக்கு முதல் திரைப்படத்தில் ஜோடியாக நடித்தது சமந்தா தான். சமந்தா இன்னும் எத்தனை திரைப்படத்தில் என்னுடன் நடித்தாலும் எனக்கு ரொம்பவும் சந்தோஷம்தான். அதுபோல சமந்தாவோடு முதல் நாள் காட்சியில் நான் நடித்த அனுபவம் வித்தியாசமாக இருந்தது.

எங்கள் இருவருக்கும் காதல் காட்சிகள் தான் எடுத்தார்கள். ஒரு மரத்திற்கு கீழே இருவரும் நின்று கொண்டு காதல் செய்ய சொன்னார்கள். அப்போது நான் சமந்தாவோடு பேசி பழகியது கிடையாது என்பதால் என்ன பேச என்று முதலில் குழப்பமாக இருந்தேன் பிறகு சமந்தா எதார்த்தமாக பேசத் தொடங்கினார். அதை என்னால் மறக்க முடியாது என்று சிரித்தபடியே அதர்வா பேசியிருக்கிறார். அதர்வா மற்றும் சமந்தாவின் நடிப்பில் புதிய திரைப்படம் வந்தால் நன்றாக இருக்கும் என்று ரசிகர்கள் கமெண்ட் போட்டு வருகிறார்கள்.












Click it and Unblock the Notifications