அவர் சொன்னார்.. அதான் நான் இப்ப வந்து போடுறேன்.. தடுப்பூசிக்கு விளக்கம் சொன்ன டிடி
சென்னை: இவ்வளவு நாளாக நான் அதற்கு பயந்து கொண்டிருந்தேன் ஆனால் இனி இத விட்டா வேற வழி இல்லை என தெரிந்து தன்னுடைய டாக்டர் சொன்ன ஒரே காரணத்திற்காக தான் நான் தடுப்பூசி போட வந்திருக்கிறேன் என்று டிடி என்கிற தேவதர்ஷினி கூறியுள்ளார்.
ஒரு வழியாக கடைசியாக நானும் முதல் தவணையை முடித்து விட்டேன் என போஸ்ட் போட்டு விழிப்புணர்வு ஏற்படுத்தியுள்ளார் டிடி.
தொகுப்பாளராக அறிமுகம் ஆகி பலபேர் மனதில் இடத்தை பிடித்த டிடி என்கிற திவ்யதர்ஷினி அனைவரும் அறிந்தவர் தான் .

அழகு தொகுப்பாளர்
தொகுப்பாளர்களில் மிகவும் பிரபலமான முக்கியமான நபராக இவர் இருந்து வருவதால் இவருக்கு பெரும் ரசிகர்கள் பட்டாளமே இருக்கிறது .இவர் பல வருடங்களாக தொகுப்பாளராக பணியாற்றி கொண்டிருந்தாலும் அடிக்கடி விருது வழங்கும் நிகழ்ச்சிகள் போன்ற பல நிகழ்ச்சிகளையும் தொகுத்து வழங்கி வருகிறார் இந்த நிலையில் தற்போது சில காலமாகவே இவர் எந்த செயல் செய்தாலும் அதில் சர்ச்சைகள் ஏற்பட்டு அது பெரும் வைரலாக மாறிவிடும் .

வைரலாகும் போஸ்ட்
அந்த மாதிரி தான் தற்போது கூட இவர் வெளியிட்ட ஒரு போஸ்ட் பெரும் வைரலாக பரவி வருகிறது. இது வரைக்கும் இல்லாத வகையில் தற்போது இவர் வெளியிட்ட போட்டோஸ்கள் மீண்டும் இவருடைய போட்டோஸ்கள் வைரல் வைரலாகி வருகிறது . ஏற்கனவே நடிகை நயன்தாரா தடுப்பூசி போட்டுக்கொண்ட போட்டோ பார்த்து பல சர்ச்சைகள் கிளம்பிக் கொண்டிருக்கும் நேரத்தில் தற்போது டிடியில் போட்டோக்களும் வைரலாக பரவி வருகிறது.

கொரோனா வெறியாட்டம்
கொரோனாவின் ஆட்டம் நாளுக்கு நாள் பெரும் அழிவை ஏற்படுத்தி கொண்டிருக்கும் நிலையில் தமிழக அரசு தொடர்ந்து அனைவரையும் தடுப்பூசி போட்டுக் கொள்ளும்படி அறிவுறுத்தி வருகிறது. சாதாரண மக்கள் முதல் திரை பிரபலங்கள் வரை பலரும் தொடர்ந்து தடுப்பூசி போட்டுக் கொண்டிருக்கும் வகையில் நேரத்தில் இன்னமும் அதிகமான மக்கள் இந்த ஊசியை நினைத்து பயந்து கொண்டு இருக்கின்றனர்.

விவேக் மரணத்தால் பீதி
தடுப்பூசி போட்ட மறுநாள் நடிகர் விவேக் இறந்துவிட்ட காரணமும் பலபேர் மனதில் பயத்தை ஏற்படுத்தி இருக்கிறது .ஆனால் அதற்கும் தடுப்பூசிக்கும் எந்த ஒரு தொடர்பும் இல்லை என டாக்டர்கள் தெரியப்படுத்திய பிறகும் பலர் இந்த ஊசியை நினைத்து பயந்து கொண்டு இருக்கின்றனர். இது சாதாரண மக்கள் மட்டுமல்ல நன்கு படித்து உலக அறிவு இருக்கும் பிரபலங்கள் கூட பலர் இந்த ஊசியை இன்னும் போட்டு கொள்ளாமல் தான் இருந்து வருகின்றனர்.

இப்ப தெளிவாயிட்டேன்
ஆனால் அவர்களுக்கும் இந்த பயம் அதிகமாகவே இருந்து வருகிறது என தற்போது தடுப்பூசி எடுத்துக்கொண்ட டிடி இதனை நினைத்து தன்னுடைய மனநிலை இதுநாள் வரைக்கும் அதிகமாக பயந்து கொண்டதால்தன் நான் தடுப்பூசி எடுத்துக் கொள்ளாமல் வேற மருந்தினை எடுத்துக் கொண்டு வந்தேன் .ஆனால் என்னுடைய டாக்டர் வேறு மருந்து இதற்கு தீர்வு ஆகாது தடுப்பூசி மட்டும் தான் கொரோனாவை தடுக்க முடியும் என உறுதியாக கூறி விட்டதால் நான் அதனை எடுத்துக் கொண்டேன்.

3வது அலை வருதாமே
அதுவுமில்லாமல் வரப்போகும் மூன்றாவது அலையில் நாம் நம்முடைய குழந்தைகளையும் பாதுகாத்துக் கொள்ள வேண்டுமென்றால் இந்த தடுப்பூசியை அனைவரும் எடுத்துக் கொள்ள வேண்டுமென விழிப்புணர்வு செய்திரக்கிறார்.இந்த போட்டோஸ்களும் அதற்கு இவர் கொடுத்திருந்த கேப்ஷனும் வேற லெவல் வைரலாகி வருகிறது. அதுவும் இல்லாமல் தடுப்பூசி போட்டுக் கொள்ளும்போது அருகிலிருந்த 3 பேருக்கும் தடுப்பூசி போட்ட டீமுக்கும் நன்றிகளை தெரிவித்து இருக்கிறார் .

வலிக்காமல் ஊசி போட்ட சிஸ்டர்
மேலும் ஸ்பெஷலாக காயத்ரி சிஸ்டருக்கு ஸ்பெஷல் தேங்க்ஸ் கூறியிருக்கிறார் . அவர் சிரித்துக்கொண்டே ஊசி போட்டதால் தான் இவருக்கு வலிக்காமல் இருந்துச்சாம். ஒரு வழியா தடுப்பூசி போட்டாச்சு என இவர் போஸ்ட் போட அதற்கு திரை பிரபலங்கள் பலர் கமெண்ட் போட்டு வந்து கொண்டிருக்கும்போது விஜய் டிவியில் பிரபலமான சக்தி இவருடைய போஸ்ட் பார்த்து கலாய்ச்சி கமெண்ட் போட்டு இருக்கிறார்.

எங்கே ஊசியைக் காணோம்
ஊசிய கொஞ்சம் யோசிச்சு போட்டிருக்கீங்க என்று கமெண்ட் போட்டிருக்கிறார். ஆனால் ஊசி போடும்போது 3 போட்டோ எடுத்து இருக்கிறார்கள் ஆனால் ஒரு போட்டோவில் கூட ஊசி போட்டதை காட்டவில்லையே என சிலர் கேள்விகளை கமெண்டில் கேட்டிருக்கின்றனர்.ஆனாலும் நீங்கள் சொன்னதை நம்பி தானே ஆக வேண்டும் என சிலர் கலாய்த்து வருகின்றனர்.
-
எல்பிஜி சிலிண்டர் பயன்படுத்துபவர்களுக்கு..நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள்! PNGக்கு மாற்றம் கட்டாயம்? -
வங்கி கணக்கில் வரும் ரூ.3000.. விஜய் அனுப்பும் ஜூன் மாத தொகை.. 3 திட்டங்களில் கிடைக்கும் பணம் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
ஒரு 'நாளுக்கு' ரூ.22.63 லட்சம் சம்பளம் வாங்கும் இன்போசிஸ் ஊழியர்.. யாருப்பா அது! -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட்












Click it and Unblock the Notifications